ஆளுநரை பார்க்க மிஸ்டர் ரீல் போன போது அவர் மனைவி ஆளுநருக்கு பிபி மாத்திரை தந்து கொண்டு இருந்தார்.
அப்போது அவரது திருமதி "ஒரு பிரச்சனை இருக்காது நீங்க உங்க உரையை படித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கலாம் என்று சொன்னார்.
சபாநாயகர் அப்பாவு அவர் வார்த்தையை நம்பி நான் அனுப்பி வைத்தேன் "என்றார் திருமதி. ஆனால், இவருடைய காரை ஒரு கிலோமீட்டர் தள்ளி வைத்து விட்டு நடக்க வைத்திருக்கிறார்கள் என்று மிஸ்டர் ரீலை பார்த்து சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் "அப்படியெல்லாம் இருக்காது மேடம்" என்று சொல்லிவிட்டு மிஸ்டர் ரீல் ஆளுநரை பார்க்க அப்போது ஆளுநர் "அதெல்லாம் இல்லை நான் தான் டென்ஷனில் வேறு வாசல் வழியாக வேகமாக நடந்து வந்து விட்டேன் அது கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு போகும் வழி "என்றார்.
அப்போது ஆளுநரிடம் மிஸ்டர் ரீல் நீங்க எதுக்கு தேவையில்லாமல் சில வரிகளை படிக்கவில்லை சில வரிகள் சொந்த சரக்கு இதெல்லாம் தேவையா "என்று கேட்க அதற்கு ஆளுநரின் திருமதி பரபரப்பா தலைப்புச் செய்தியா இவருடைய உரை வரணுமா அதுக்கு தான் இந்த உல்டா புல்ட்டா வேலையை செஞ்சாரு இப்ப ஏகப்பட்ட மீம்ஸ் இவரைப் பற்றி என் whatsapp குரூப்பில் ஒரு 200 மீம்ஸ் இருக்கு "என்று ஆளுநர் மனைவி சொல்ல கூடவே தொடர்ந்து முதலமைச்சர் ஓரக்கண்ணால் பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரிக்கிறாரே அதை எனக்கு 100 பேர் அனுப்பி இருப்பாங்க "என்று சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் ஆளுநர் வெளி நடப்பு செய்யும்போது அமைச்சர் பொன்முடி கிளம்பு கிளம்பு என்று சொல்வாரே அந்த வீடியோ நீங்கள் பார்க்கவில்லையா "என்று கேட்க அது என்ன வீடியோ எனக்கு நீங்க அனுப்பலயே ஆளுநரை திருமதி முறைக்க அப்போது ஆளுநர் ஒரு மாதிரி சமாளித்து "அதெல்லாம் இல்லை மா இவர் சும்மா ரீல் விடுகிறார் சார் உங்கள் உரை நல்லபடியாக முடிந்தது நீங்க கிளம்புங்க என்று தான் அமைச்சர் சொன்னார் "என்று சொல்லிவிட்டு அனுப்பினார் இதுதான் உண்மையில் நடந்தது என்றார்.
அப்போது சட்டசபை நிகழ்ச்சியை உங்கள் விருந்தினர் யாரோ செல்பேசியில் வீடியோ எடுத்தாராமே அவர் மீது உரிமை மீறல் பிரச்சினை வருகிறது என்று மிஸ்டர் ரீல் ஆளுநரை பார்த்து கேட்க ஆளுநர் திருமதியை பார்க்க அப்போது திருமதி ஆளுநர் அது என்னோட உளவுத்துறை என் தம்பி பையன் இவர் நிறைய விஷயங்களை மறைச்சிடுவாரு அதனால என்ன நடந்ததுன்னு ஆதாரபூர்வமா வீடியோ எடுக்க நான் அனுப்பி வச்ச ஆளு என்றார்
அப்போது அங்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன் "தெலுங்கானாவில் ஆளுநர் உரை இல்லை வெளிநடப்பும் இல்லை "என்று சொல்லியபடி அமர்ந்தார் அப்போது தமிழிசை சௌந்தர்ராஜன் நீங்க பாட்டுக்கு சனாதான தர்மம் திருக்குறள் நாலடியார், அவ்வையார் சரித்திரம் … வரலாறு என்று பேசிக் கொண்டிருந்தீர்கள்.
சட்டசபைக்கு போற ரிஸ்கெல்லாம் ஏன் எடுத்தீர்கள்" என்று கேட்க அப்போது மிஸ்டர் ரீல் சட்டசபைக்கு போவதில் என்ன ரிஸ்க்" என்று கேட்க அப்போது திருமதி ஆளுநர் "படிக்க வேண்டியது படிக்கவில்லை படிக்கக்கூடாததை படித்தார் இதைத்தானே சொல்கிறீர்கள் "என்று கேட்க அப்போது தமிழிசை சௌந்தர்ராஜன் "அவர் ஏன் வெளிநடப்பு செய்தார் தெரியுமா எனக்கு எல்லா விஷயமும் தெரியும் ஆல் டீடெயில்ஸ் ஐ நோ "என்று சொல்ல உடனே திருமதி ஆளுநர் வாட் டீடைல்ஸ் வாட் "என்று கேட்க தமிழிசை சௌந்தரராஜன் "இவர் உட்கார்ந்த நாற்காலியில் மார்ஷல் மூணு கரப்பான் பூச்சிகளை விட்டார் அதற்கு பயந்து தான் இவர் எழுந்தார் அதுதான் வெளிநடப்பு "என்று சொல்ல… இப்போது மிஸ்டர் ரீல் திருமதி ஆளுநர் இருவரும் ஆளுநரை பார்க்க அவர் சுதாரித்துக் கொண்டு "நான் நாகாலாந்தில் இருந்தவன் அட்டைப் பூச்சிக்கு பயப்படாதவன் ஆப்டர் ஆல் கரப்பான் பூச்சியா அதெல்லாம் இல்லை "என்று சொல்லிவிட்டு தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் முறைக்க உடனே அவர் எழுந்து "நான் வருகிறேன். கோலவிழி அம்மன் கோயிலில் கும்மி ஆட்டம் இருக்கிறது "என்று புறப்பட்டார்.
அப்போது ஆளுநர் செயலாளர் ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சிக்கு செல்லும் அதிகாரிகள் உங்களை சந்திக்க வந்திருக்கிறார்கள் என்று சொல்ல வர சொல்லுங்கள் என்றார் ஆளுநர்.
அவர்களிடம் பேசிய ஆளுநர் நீங்கள் எப்போதும் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் மத்திய அரசு ஊழியர் எனவே மத்திய அரசுக்கு விசுவாசமாக இருங்கள் என்று சொன்னபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் சார் மாநிலத்தில் நாம் வேலை செய்தால் அந்த மாநில அரசுக்கு தானே விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கேட்க ஆளுநர் அவரிடம் நீங்கள் எந்த ஊர் என்று கேட்க அவர் திருவாரூர் என்றதும் ஓ திராவிட மாடலா நீங்கள் தமிழ்நாட்டில் நீங்கள் வேலை செய்தாலும் நீங்கள் வாங்கும் சம்பளம் மத்திய அரசு தருவது தான் என்று ஆளுநர் சொல்ல இல்ல சார் சம்பளம் மாநில அரசு தான் தருகிறது என்று அவர் சொல்ல அப்போது மாநில அரசு தரும் பணம் ரிசர்வ் வங்கி அச்சடிக்கிறது.
ரிசர்வ் வங்கி மத்திய அரசு நிறுவனம் என்றதும் அந்த பயிற்சி அதிகாரி சார் இப்போதெல்லாம் சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தி விடுகிறார்கள். வங்கிகளெல்லாம் மத்திய அரசு தான் நடத்துகிறது என்றார் ஆளுநர். விடாப்படியாக அப்போதும் அந்த தமிழ் பயிற்சி அதிகாரி ஏதோ கேள்வி கேட்க வர இப்போது உங்களுக்கு நான் தெளிவாக சொல்கிறேன். இந்த வருமான வரி சிபிஐ அமலாக்கத்துறை இதெல்லாம் யார் வசம் இருக்கிறது என்று சொல்லுங்கள் என்று கேட்க எல்லா பயிற்சி அதிகாரிகளும் ஒரே குரலில் மத்திய அரசிடம் என்று சொல்ல இப்போது நீங்கள் சொல்லுங்கள் நீங்கள் யாருக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள் இருக்கப் போகிறீர்கள் என்று கேட்க அத்தனை பேரும் பெரிய கும்பிடு போட்டு மத்திய அரசுக்கு என்று சொல்லிவிட்டு ஓடிப் போனார்கள்.
ஆளுநர் யோசித்தபடியே மாநில அரசு, ஒன்றிய அரசு ,சனாதன தர்மம், திருக்குறள், ஸ்டாலின் ,மசோதா என்று எதோ சொல்லிக் கொண்டே இருக்க அப்போது அங்கு வந்த திருமதி ஆளுநரிடம் ராஜ்பவன் வாசல் கோவில் பூஜாரியிடம் ஆளுநருக்கு மந்திரித்து முடி கயிறு கட்டுங்கள் என்று யோசனை சொல்லிவிட்டு புறப்பட்டார் மிஸ்டர் ரீல்.
Leave a comment
Upload