ஆளுநருக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் பேசக்கூடாது முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.
ஆமா அந்த வேலையை கூட்டணி எம்எல்ஏக்கள் பார்த்துக்க சொல்லி சொல்லியாச்சு
ஆளுநர் உரை மக்களுக்கு ஏமாற்றமே எடப்பாடி பழனிச்சாமி.
ஆளுநருக்கே ஏமாற்றம் என்பதால் தான் வெளி நடப்பு செய்தார்.
சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
அதனால் தான் நீங்கள் வெளியே செல்லும் போது சிரித்த முகத்துடன் இருந்தார் முதல்வர்.
ஆளுநர் உரையில் மகிழ்ச்சியும் இருக்கிறது ஏமாற்றமும் இருக்கிறது டாக்டர் ராமதாஸ்.
மகிழ்ச்சி ஏமாற்றம் கூட்டணி புரிந்து போச்சு தலைவரே
டாஸ்மாக் நேரத்தை குறைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ்
தலைவர் முதல்ல கடையை மூடணும் சொன்னாரு இப்போ நேரமாவது குறைங்கன்னு இறங்கி வந்திருக்கிறார் அப்புறம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுங்கள் என்று சொல்வார் பாருங்கள்.
தமிழகத்துக்கு தேவையான மிகச்சிறந்த தலைவர் அண்ணாமலை டாக்டர் பாரிவேந்தர். எம்பி
இதை நீங்க உங்க தொலைக்காட்சி நிருபரிடம் முதல்ல போய் சொல்லுங்க
ஒரு நபர் கையில் திரையரங்கு வந்து விட்டால் என்ன ஆகும் தொல்.திருமாவளவன்
இதெல்லாம் கூட்டணி தர்மத்துக்கு அடுக்காது தலைவரே ...நீங்க இப்படி எல்லாம் பேசலாமா
எங்களால் தான் மோடி பிரதமராக முடிந்தது மல்லிகார்ஜுன கார்கே
உண்மைதானே நீங்க தோத்து போன தால பிரதமராக முடியல அவர் ஜெயிச்சு போனதால பிரதமர் ஆயிட்டாரு.
ஏமாற்றுவது திமுகவின் சுபாவம் டிடிவி தினகரன்
ஆனா பாருங்க ஆர்கே நகர்ல வேற மாதிரி பேசிக்கிறாங்க அண்ணே
ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியும் கோவையில் அமித்ஷாவும் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம் அர்ஜுன் சம்பத்
பீதியை கிளப்புகிறீங்களே அண்ணாச்சி
தேசிய கீதம் பாடும் முன்பு ஆளுநர் எழுந்து சென்றது குற்றம் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு
தேசிய கீதத்தில் திராவிடம் என்ற வார்த்தை வருதே அதான்
திமுக ஆட்சியை தமிழ் ஆட்சி என்றும் கூறலாம் முதல்வர் ஸ்டாலின்
தமிழகம் ஆட்சி என்றும் சொல்லலாம் என்கிறார் ஆளுநர்
திமுக பொதுக்கூட்ட உரையை கவர்னர் படிக்க வேண்டுமா அண்ணாமலை கேள்வி
என்னது பொதுக்கூட்ட உரையா குழப்புறீங்க போலீஸ் ஆனா தெளிவா குழப்புறீங்க
தமிழ்நாடு அமைதி பூங்கா இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார் கவர்னர் ஓபிஎஸ்
கா கா கா கா கா கா
அரசியலில் துணிவாக இருப்பேன் வாரிசு அரசியலை எதிர்க்கிறேன் அண்ணாமலை
தலைவர் அஜித் ரசிகர் என்று தெளிவா சொல்லிட்டார்.
Leave a comment
Upload