தொடர்கள்
தொடர்கள்
சென்னையில் பனி மழை வருமா ?? ஜெர்மன் டயரி கார்த்திக் ராம்


முதல் கேள்வி - அதற்கு வாய்ப்பு இருக்கா? கண்டிப்பா இருக்குங்க, ஆனா எப்பன்னு தான் சொல்ல முடியாது. இந்த கட்டுரையை ஜெர்மனியில் என்னோட வீட்டுல இருந்து எழுதும் போது 5 டிகிரி, நல்ல பளிச்சுன்னு வெயில். இதே ஒரு வாரத்துக்கு முன்னாடி -15 டிகிரி. இங்க இருக்கிறவங்க இந்த மாதிரி தட்ப வெட்பம் மாற்றம் இப்ப அருகாமையில் தான் நடக்குதுன்னு சொல்ராங்க. எதனால அப்படிங்கிறது நமக்கே தெரியும்- ஆமாங்க, மனிதனால் உருவாக்க பட்ட உலக வெப்பமயம். சரி கேள்விக்கு வருவோம், நம்ம ஊர்ல அமெரிக்கா மாதிரி திடீர் பனி குளிர் வந்தா என்ன நடக்கும்?

வாழ்க்கைமுறயாவே இருந்து பழந்தின்னு கொட்ட போட்ட அமெரிக்கா ஜப்பான் நாடுகளிலேயே மக்கள் குளிர் தாங்க முடியாம இறந்து போறாங்க. அப்ப நம்ம ஊர்ல கேக்கவே வேண்டாம். உயிர் சேதம் கற்பனை பண்ண முடியாத அளவுக்கு ஆகும். ஆனால் ஏன்?

உணவு உடை உறைவிடம்- இதுல உடை மற்றும் உறைவிடம் நம்ம ஊர்ல குளிருக்கு ஏத்தது கிடையாது. நாம பெரும்பாலும் பருத்தியாடையை உடுத்தறோம், நமது வீடுகள் எல்லாமே பொதுவா செங்கல்லினால் கட்டப்பட்டது. வெயில் காலத்துல உள்ள சூடா இருக்கும், குளிர் காலத்துல ஜில்லுனு இருக்கும். ஜாஸ்தி வேண்டாம், 10 டிகிரிக்கு கீழ போனாலே வீடுகள்ல தரை எல்லாம் ஐஸ் மாதிரி குளிரும். ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகள் வெட்ப நிலை மாற்றங்கள் தாங்கி வீட்டுக்கு உள்ள சீரான வெப்பம் இருக்கிற மாதிரி வடிவமைக்கிறாங்க, அதனால தான் அங்க மக்களால மிக குளிர்ச்சியான நிலையையும் தாங்கி வாழ முடியுது. அப்படி என்ன வித்தியாசம்னு கேக்கறீங்களா? நம்ம ஊர்ல சுவறுகள் 99% ஒற்றை அடுக்கு சுவறுகள் தான், ஆனா மேற்கத்திய நாடுகள்ல இரட்டை அடுக்குகள், இரண்டுக்கும் நடுவில் காப்பு பொருட்கள் நிறைச்சு வச்சிருப்பாங்க (சுருக்கமா புரியற மாறி சொன்னா, எப்படி நம்ம குளிர்சாதன பெட்டிக்குள்ள இருக்கிற குளிர்ச்சி உள்ளேயே இருக்குதோ அதே மாதிரி தான்). அதனால தான் குளிர் காலத்துல உள்ள இருக்கிற வெப்பத்தை வெளியேறாம வீட்டுக்குள்ளேயே வச்சிருக்கு. நம்ம ஊர்ல ஒருவேளை திடீர் குளிர் வந்தா, என்னதான் ஹீட்டர் எல்லாம் போட்டாலும் வீடுகளோட கட்டமைப்பினால அது பத்தாது. அது போக ஏற்கனவே இருக்கிற கம்மியான மின்சாதன பொருட்களை உபயோகபடுத்தும் போதே மின்வெட்டு நிறைய நடக்குது, இதுல மின்சாரம் அதிகமா உறிஞ்ச கூடிய ஹீட்டர் போன்ற பொருட்களை உபயோகிக்கும் போது, இன்னும் ரொம்ப கஷ்டம்.

சரி, எல்லாத்தை விட முக்கியமான கேள்வி பனிப்பொழிவு ஏன் ஏற்படுது, நம்ம ஊர்ல வரக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏன்?

முதல் பாகம் ரொம்ப சுலபம், ஏன் மழை பெய்யுதுன்னு தெரிஞ்சா, ஏன் பனிப்பொழிவு ஏற்படுதுன்னு புரிஞ்சிக்கிறது ரொம்ப சுலபம். ரெண்டுக்கும் ஒரே மூலம் தான், கடல் நீர் ஆவியாகி மேகமாகி ஒரு இடத்துல மழையாவும் இன்னொரு இடத்துல பனிபொழிவாவும் ஆகுது. ரெண்டுக்கும் இருக்கிற ஒரே வித்தியாசம் வெப்பம், வெப்பம் 0 டிகிரிக்கு கீழ போகும் போது மழைக்கு பதிலா அங்க பனி பெய்யுது. ரெண்டாம் பாகம் புரியனும்ம்னா, பருவ மழை எப்படி பெய்யுதுன்னு தெரிஞ்சுக்கணும். சூரியனும் பூமில இருக்கிற கடலும் அங்கேயே தான் இருக்கு, எங்கயும் போகல. பூமியோட அச்சு மாறும் போது காலங்கள் மாறுது. ஆனால் காலங்கள் மாறும் போது பெய்ய வேண்டிய மழை பெய்யாத பொழுது, பிரச்சனை பெரிதாகி வேற எங்கேயோ கொண்டு போய் விட்டுடுது. அதுதான் அமெரிக்காவில் பெய்கிற கடும் பனிப்பொழிவுக்கு காரணம். பல நூறு வருஷமா பனியே பாக்காத இடங்கள் கூட கடும் பனி பொழிவில் பாதிப்படைஞ்சிருக்கு. இது நடக்கலாமுன்னா, நம்ம ஊர்லயும் பனி பெய்ய வாய்ப்பும் இருக்கு.

நம்ம என்னதான் செய்றதுன்னு கேக்கறீங்களா, இயற்கையோட போக்க மாத்துறது கஷ்டம். தேவையான மாற்றங்களை அதுவே உண்டு பண்ணிக்கும். நம்ம, முடிஞ்ச வரைக்கும் இயற்கைக்கு கேடு விளைவிக்க கூடிய செயல் செய்யாம இருந்தாலே போதும்.

எதுக்கும் சீப்பா கிடைக்கும் போதே இராமனாதபுரத்து ஆளுங்களும், காரைக்குடி ஆசாமிகளும், சென்னை மக்களும் ஸ்வெட்டர் ஜாக்கெட் எல்லாம் வாங்கி வெச்சுருங்கப்பு.........

மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு செய்தியோட.