தொடர்கள்
தொடர்கள்
மக்கள் பார்வையில் கம்பர் - 14 -ரமேஷ்எத்திராஜன்

20221109175248289.jpg

மக்கள் பார்வையில் கம்பர்

கோல நாட்டுச் செல்வ வளத்தை
கற்பனைக் கவித்துவமாக
நம் மனக்கண்ணில் காட்சிப் படுத்தும்
பால காண்டத்து நாட்டுப் படலப்பாடல்

சூட்டுடைத் துணை தூ நிற வாரணம்
தாள் துணைக்குடைய தலைசால் மணி
மேட்டு இமைப்பன மின்மினி ஆம் எனக்
கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம் அரோ

உச்சிக் கொண்டை உடைய
தூய நிறத்தை உடைய சேவல்கள்
தம் கால்களால் குப்பைகளைக்
குடையத் தகுதி மிக்க மாணிக்கங்கள்
குப்பை மேடுகளில் ஒளிர்கிறது

குருவிக்கூட்டங்கள் அதை
மின் மினிப் பூச்சிகள் என்று
நினைத்துத் தம் கூடுகளில் வைக்க
இரவு நேரத்தில் அக்கூடு
பிரகாசமாய் ஜொலிக்கிறது
என்பதே இப்பாடலின் பொருள்

கற்பனைக் காட்சியை நம்
மனக்கண்ணில் நிலை நிறுத்தி
கோசல நாட்டு செல்வவளத்தைப்
பாமர மக்களுக்கும் எளிதில்

புரியும் படி கவி பாடிய கவி கம்பரைப்
பாராட்டி வாழ்த்தி மகிழ்வோம்

மீண்டும் சந்தித்துச் சிந்திப்போம்