பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து மன்னன் பீலே (82) கடந்த 29-ம் தேதி இரவு உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி, அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
பிரேசில் அணிக்காக அந்நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் பீலே 95 போட்டிகளில் விளையாடி, 77 கோல்களை அடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு கால்பந்து போட்டிகளில் பீலே பங்கேற்று, 3 முறை உலக கோப்பையை பிரேசில் நாட்டுக்கு பெற்று தந்துள்ளார். ‘கால்பந்து விளையாட்டின் முடிசூடா மன்னன்’ உலகம் அவரை கொண்டாடுகிறது.
தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு பல கல்யாணங்கள்.
பீலேவுக்கு 3 முறை திருமணம் நடைபெற்றுள்ளது. முதலில் 1966ல் ரோஸ்மெரி டோஸ் ரெய்ஸ் சோல்பியை மணந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள். பின்னர் ரோமெரியை 1982ல் விவாகரத்து செய்தார். இதைத் தொடர்ந்து பிரேசில் பாடகி அசிரியா நாசிமென்டோவை 2004ல் 2வதாக பீலே திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள். பின்னர் 2வது மனைவியை 2008ல் பீலே விவாகரத்து செய்தார். 3வதாக, கடந்த 2016ல் மார்சியா அயோகியை மணந்தார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இதுதவிர, 1964ல் வீட்டு பணிப்பெண் அனிசியா மச்சாடோவுடன் ஏற்பட்ட உறவில், பீலேவுக்கு சான்ட்ரா மச்சாடோ என்ற மகள் உள்ளார். அவரது வாழ்க்கையில் 3 திருமணங்கள் நடைபெற்று, 7 குழந்தைகள் உள்ளனர்.
Leave a comment
Upload