தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20221130121215381.jpeg

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும் திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

நாங்க தயாராதான் இருக்கோம் தலைவரே மக்கள்தான் சட்டசபை தேர்தல்ல நம்ம தந்த வாக்குறுதி விஷயம் பற்றி எல்லாம் கேக்குறாங்க

இந்திய வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள் படிக்கப்படுகின்றன பிரதமர் மோடி

கற்பனை கதைகள் வரலாறு ஆகாது என்கிறார் முதல்வர் பிரதமர் சார்

இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் சீனா

அதான் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு தான் கொரோனா சப்ளை பண்ணியது போதாதா

மக்களவையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களை அதிமுக கட்சி முடிவு செய்யும் எடப்பாடி பழனிச்சாமி

ஆனா எம்பி யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்வாங்க தலைவரே

திமுக மாநிலக் கட்சி அல்ல குடும்ப கட்சி ஜேபி நட்டா

தலைவரே இப்படிப் பேசிப் பேசியே கொட்டாவி வரவச்சுருங்க

மத்திய அரசு திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன மத்திய அமைச்சர் வி.கே.சிங் பாராட்டு

அண்ணாமலை ஐபிஎஸ் உங்களுக்கு தான் அமைச்சர் சொல்றார் பதில்

நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை திருமாவளவன்

இப்ப என்ன அவசராங்க இன்னும் தேர்தல் வரல தேர்தல் வரட்டும் அப்பதான் நம்ம இத சொல்லணும்

தமிழகத்தில் நல்லவர்களால் பாராட்டக்கூடிய கூடிய நல்லாட்சி நடந்து வருகிறது-தொல் திருமாவளவன்

அண்ணே இதையே தான் மருத்துவர் ஐயா சொல்லி இருக்கிறார் பரவாயில்லையா

இந்தியாவுக்கு இன்று காந்தியும் நேரும் தேவை முதல்வர் ஸ்டாலின்

காந்திக்கு பதில் ராகுல் காந்தி இருக்கார் நேருக்கு பதில் அண்ணன் கே.என்.நேரு இருக்கார் அப்புறம் என்ன பிரச்சனை

ஆன்மீக கருத்துக்கள் நிரம்பிய அரசியல் அமைப்பு தமிழக ஆளுநர்

விட்ட அரசியலமைப்பு சட்டத்தில் தான் பகவத் கீதை, இராமாயணம், திருக்குறள் எல்லாம் இருக்குன்னு கூட சொல்வார்

எட்டு வழி சாலை எதிர்த்தவர்கள் தற்போது வேண்டும் என்று சொல்கிறார்கள் எடப்பாடி.

அப்போது டெண்டர் விடுற வேலை உங்ககிட்ட இருந்தது அதனால எதிர்த்தாங்க இப்ப டெண்டர் விடுற வேலை அவங்க கிட்ட இருக்கு அதனால் ஆதரிக்கிறாங்க கமிஷன் முக்கியம் இல்ல.

விலைவாசி உயர் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை கார்கே வேதனை

பார்லிமென்ட் தேர்தல் வருது இல்ல விலைவாசி பற்றி நீங்க தான் கவலைப்படணும்

அமைதிய சீர்குலைக்க ராகுல் காந்தி காஷ்மீர் செல்கிறார் பாஜக குற்றச்சாட்டு

காஷ்மீர் பண்டிட்கள் காஷ்மீரில் அமைதியா அப்படின்னா என்ன என்று கேட்கிறார்கள் இது தெரியுமா தாமரை

ராகுல் காந்தி 113 முறை விதி மீறலில் ஈடுபட்டுள்ளார் மத்திய ரிசர்வ் படை குற்றச்சாட்டு

கூட போனது இப்படி எண்ணுவதற்கு தானா பாதுகாப்புக்கு இல்லையா.