தொடர்கள்
தமிழ்
யாதும் ஊரே யாவரும் கேளிர் – இதன் மற்றொரு விளக்கம் என்ன ?? தமிழிலக்கண வாட்சப் குழு !! பரணீதரன்

20221130174841827.jpg

2020 ஏப்ரல் மாசமென்று நினைக்கிறேன்.

கொரோனாவினால் உலகமே வீட்டுக்குள் அடைபட்டுக்கொண்டிருந்தது. வீதிகளில் கட்டுப்பாடு. வீட்டில் அடைபட்டவர்க்கு பொழுது போக அதிலும் மிகவும் உபயோகமாக இருப்பது போன்று அளிப்பதில் நிறைய பேர் போட்டி போட்டுக்கொண்டு ஸ்கைப்பில் ஸ்லோகம், அடுக்கடுக்காக வேதம், உபனிஷத்துக்கள், நாராயணீயம், கர்னாட்டிக் மியூஸிக் போன்றவை எந்த சோஷியல் மீடியா கிளாஸ் ரூமாக அமைகிறதோ அதன் மூலம் நடத்த ஆரம்பித்தனர்.

திடீரென்று மறு தினமே, உலகம் இந்த புதிய மாற்றத்துக்கு இசைந்து விட்டது. கல்விக்கூடங்களும் தொழில் நிற்வனங்களும் வீட்டிலிருந்தபடியே தத்தம் தொழிலை நடத்த ஆரம்பித்தன. இந்த மாதிரியான புதிய முயற்சியில் பூகோளம் வரலாறு ஆனதுதான் ஹைலைட்(GEOGRAPHY BECOMES HISTORY).

ன்னைக்கேட்டால் கோரோனா வரமா, சாபமா என்று கேட்டால் வரம் என்று தான் சொல்லுவேன். இதுநாள் வரையிலும் வருடக் கணக்கா ஒத்திப்போட்டுக்கொண்டே வந்த பல பல நீண்ட நாள் கிரியேடிவ் ப்ராஜக்ட்டுகள் தொடங்க முடிந்தது.

ந்த மாதிரி நேரத்தில் எனக்கொரு வாட்ஸப் குழுவில் சேர ஒரு அழைப்பு வந்தது. அதுதான் தமிழிலக்கணம் கற்போம் என்பது. அதை நடத்தியவர் திரு பரணீதரன் அவர்கள்.

முதலில் இது போரடிக்குமே என்று இருந்தேன். நாளுக்கு நாள் இந்த திராபை பாடமும் தித்திக்க ஆரம்பித்தது தான் நிஜம். பல்வேற் தரப்பட்ட வயது, வாழும் நிலம், பதவி என்றில்லாமல் அனைவரும் தத்தம் கேள்விக்க்கணைகளைத் தொடுக்க நடத்துனர் மட்டும் என்றில்லாது அனைத்து குரூப் அங்கத்தினர்களும் தங்களுக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ள பதிவுகள் சுவாரஸியம் கொள்ள ஆரம்பித்தன.

ந்த ஐடியாவின் செயலாக்கியவரை தொடர்பு கொள்ள ஏராள விஷயங்கள் தெரியவந்தன.

எப்படி இந்த ஐடியா உதித்தது ??

கொரோனா காலத்தில் லாக்டவுண் நிலவியதால் எனக்கு மதுரை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய நேரிட்டது. அந்தச் சமயத்தில் எனக்கு அலுவலகப் பயணமும் இல்லாததால் ஒரு நாளுக்கு சுமார் நான்கு மணிநேரம் அவகாசம் கிடைத்தது. முதலில் சிறிது நாட்களுக்கு அந்த நேரத்தை மிகவும் சந்தோஷமாக தூக்கத்திலும் தொலைக்காட்சியிலும் செலவழித்தேன். நாட்கள் செல்ல செல்ல ஒரு சோர்வு தட்ட ஆரம்பித்தது. இதை சரிசெய்வதற்கு என்ன செய்யலாமென்று சிந்திக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் என்னுடைய அம்மா மற்றும் சகோதரிகள் பல்வேறு விதமான வகுப்புகளை (சமையல், ஆன்மீகம், குழந்தைகளுக்கு கதைகள் மற்றும் மந்திரங்கள், சமஸ்கிருதம், நாட்டு மருத்துவம் மற்றும் பாட்டி வைத்தியம்) வாட்ஸ்அப் மூலமாக எடுத்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டருகில் இருந்த நிறைய குழந்தைகள் பள்ளிகள் இயங்காததால் வீட்டில் இருப்பவர்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்கள். வீட்டிலேயே இருந்த அவர்களுடைய பெற்றோர்களால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. அப்போது தான் நானும் ஏன் என்னுடைய அம்மாவையும் தங்கைகளையும் போல ஏதேனும் செய்யலாம் என்று எண்ணினேன்.

குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு தினமும் கதைகள், பாடல்கள், மந்திரங்கள், நல்வழி சிந்தனைகள் மற்றும் செய்திகளை கூற ஆரம்பித்தேன். அது ஹிட் ஆகிப் போக முதலில் ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட வகுப்புகள் பிறகு இரண்டு மணி நேரமாக மாற்றப்பட்டது. இந்த வகுப்பிற்கு “வாங்க கற்கலாம்” என்று பெயர் சூட்டினோம். இவ்வாறாக இந்த வகுப்புகள் நன்றாக சென்று கொண்டிருந்தது.

இதன் அடுத்த கட்ட பரிமாணமாக என்ன நடந்தது ??

“அந்த சமயத்தில் இதை மற்ற குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாமே என்று ஒரு எண்ணம் தோன்றியது. அதனால் இந்த வாங்க கற்கலாம் குழுவை வாட்ஸ்அப் குழுவாக உருமாறி அடுத்தடுத்து பல குழுக்கள் ஆரம்பித்தோம்.”

“இவை நன்றாக சென்று கொண்டிருந்த பொழுது, தமிழ் சார்ந்த விஷயங்களையும் சொல்லி கொடுக்கலாமே என்று ஒரு எண்ணம் தோன்றியது.” என்றார்

மிழில் தனக்கு ஒரு தனிப்பட்ட இன்ட்ரஸ்ட் எப்போதுமே உண்டாம். அவருடைய தமிழ் ஆசிரியர் கூட பிஏ அல்லது எம் ஏ தமிழ் படி என்று கூறுவாராம். அந்த அளவுக்கு தமிழில் மேல் ஆர்வம் உண்டு.

தாத்தாவின் தாக்கம்

து மட்டும் இல்லாமல் இவருடைய தாத்தா கிரந்தம், பழைய கல்வெட்டு தமிழ், தமிழும் சமஸ்கிருதமும் கலந்து மணிப்பிரவாளம் போன்றவற்றை இவருக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவரிடம் கற்பதற்கு அந்த காலத்தில் சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்து அனைவரும் வருவார்களாம். அவரிடம் பாடம் கற்றதால் தாமும் தமிழ் சார்ந்த விஷயங்களை சொல்லிக் கொடுக்கலாமே என்ற எண்ணம் தோன்றியதாம்.

அப்படி ஆரம்பிக்கப்பட்ட ஒரு குழு தான் “தமிழ் இலக்கணம் கற்போம்” என்ற வாட்ஸ்அப் குழு.

லக்கணத்தை முதலில் தேர்ந்தெடுத்த காரணம் என்ன என்றதற்கு, “இலக்கணத்தை அனைவரும் ஒரு கஷ்டமான விஷயமாகவே பார்க்கிறார்கள். அதை ஒரு கசப்பு பொருள் போல வேண்டா வெறுப்பாகவே பார்க்கின்றனர். இந்த சிந்தனையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இதை முதலில் முன்னெடுத்தோம். இலக்கணத்தை சுவையாக சொல்லித் தரவேண்டும். சொற்சுவையும் குறையாமல் பொருட்சுவையும் மாறாமல் மக்களுக்கும் பிடித்ததுபோல் சொல்லித்தர வேண்டும் என்பதாலேயே இந்த குழு உருவாக்கப்பட்டது” என்றார்.

வரே தொடர்ந்து,” இப்போது நமது குழுக்களில் நிறைய குழந்தைகளும் பல பெரியவர்களும் இருந்தார்கள். அனைவருடனும் பழகியதால் ஒவ்வொருவரின் மனநிலையும் புரிந்தது. ஒவ்வொருவரும் இலக்கணத்தை எவ்வாறு புரிந்து கொள்வார்கள் என்பது ஓரளவிற்கு புலப்பட்டது. அனைத்து வயதுக்காரர்களுக்கும் புரியுமாறு இந்த இலக்கணத்தை எடுக்கவேண்டும் என்று மனதில் எண்ணி அதற்கான செயலில் இறங்கினோம். குழந்தைகளுக்கு எடுக்கும் பொழுது அவர்களுக்கு புரியும்படி எடுக்க வேண்டும் அதே நேரத்தில் பெரியவர்கள் இது என்ன வகுப்பு இவ்வளவு குழந்தைத்தனமாக செல்கிறது என்ற எண்ணம் வரக்கூடாது. அதனால் தமிழ் சூத்திரங்களை பெரியவர்களுக்கும் அதனுடைய விளக்கங்களை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தோம். விளக்கங்களை அனைவரும் புரிந்து கொள்வதற்காக மிகவும் சுலபமான முறையில் சொல்லிக் கொடுத்தோம்.

இலக்கணம் மட்டும் தானா ????

லக்கணம் மட்டுமே சொல்லிக் கொடுத்தால் அனைவருக்கும் ஒரு சலிப்பு தட்டும் என்பதால் பல்சுவைப் பகுதியில் சேர்த்து எடுத்தோம். பல்சுவைப் பகுதியில் காளமேகப்புலவர் பாடல்கள், இரட்டைப் புலவர்கள் பாடல்கள், அந்தகக்கவி வீரராகவ முதலியார் பாடல்கள், சங்ககால தமிழ் மன்னர்கள் வரலாறு, சங்ககால தமிழ் மண்ணின் வரலாறு, ஆசுகவி (பாடல்களை வைத்து சாபமிடுதல், வரம் கொடுத்தல் மற்றும் எமகண்டம் போன்ற பாடல்களை பாடுதல்), மதுரகவி (ஓசை மற்றும் சுவை நயம் மிக்க பாடல்கள்), சித்திரக்கவி ( ஜாலக் கட்டம், சர்வதோ பத்திரம், மாலைமாற்று போன்றவை), வித்தாரக்கவி (ஒன்றில் ஆரம்பித்து மிகப்பெரிய எண்கள் வரை செல்லும் பாடல்கள் தங்களுடைய வீரதீர செயல்களை கூறக்கூடிய பாடல்கள்), பந்தங்கள் (தேர் பந்தம், நாக பந்தம், கருட பந்தம், வேல் பந்தம், மயில் பந்தம், போன்றவை), தெரியாத ஔவையார் பாடல்கள், தமிழிசை, நமக்கு பொதுவாக தெரிந்த தமிழ் பாடல்கள் மற்றும் செய்யுளில் உள்ள சித்த மருத்துவம் போன்றவை எடுக்கப்பட்டன. இவற்றில் பல விஷயங்கள் மற்றும் செய்திகள் வரலாற்றிலேயே தெளிவாகவோ முழுமையாகவோ இருக்காது. அப்படிப்பட்ட செய்திகளையே இந்த பல்சுவைப் பகுதியில் பாடமாக எடுத்தோம்.

குழுவினரின் பங்களிப்பு பற்றி கூறுகையில்,”அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. பல்வேறு குழந்தைகள் தங்களுடைய பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாக கூறினார்கள். இந்த குழுவில் பல்வேறு தமிழ் ஆசிரியர்களும் இருந்தார்கள். அவர்களும் இந்த பாடங்கள் மிகவும் எளிமையாகவும், உதவிகரமாகவும், சுவாரசியமாகவும் இருந்ததாக கூறினார்கள். அந்த ஆசிரியர்கள் இப்பொழுது கூட தொடர்பில் உள்ளார்கள்” என்று கூறுகிறார்.

இந்த பயணத்தில் ஏற்பட்ட சில சுவாரசியமான நிகழ்வுகள்..???

ருமுறை புறநானூறில் கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அந்த வரிக்கு நான் வேறு விதமான ஒரு பொருளை கூறினேன். அதாவது,” யாது உம் ஊரே ( எது உனது ஊர் ? எதுவுமே உனது ஊர் கிடையாது). யாவர் உம் கேளிர் ( யார் உனது உறவினர் ? எவருமே உனது உறவினர் இல்லை) என்று கணியன் பூங்குன்றனார் கூறியிருப்பார் என்று கூறினேன். அந்த செய்யுள் முழுவதுமே இந்த உலகில் உள்ள மாயை, விரக்தி மற்றும் வைராக்கியத்தை பற்றியே கூறியிருக்கும். அந்த இடத்தில் அனைத்தும் உன் ஊர் தான் அனைவரும் உனது உறவினர் என்று வருவதற்கான வாய்ப்பே கிடையாது. இந்த பகுதி முடிந்ததும் அனைத்து ஆசிரியர்களும் இதுவே சரியாக இருக்கலாம் என்றும் கூறினார்கள். இதன் மூலமாக நிறைய சொல்லாடல்கள் மற்றும் விவாதங்கள் நடந்தது. கணியன் என்பதே அவர் ஜோதிடம் கணிக்கும் வேலை பார்த்ததால் வந்த பெயர் என்று கூறியதும் அவர்களுக்கு புதுமையாக இருந்தது. வரலாற்றிலிருக்கும் நிறைய புலவர்களுக்கு இவ்வாறு காரணப் பெயர்களும் சிறப்பு பெயர்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை.

தேபோல் டைனோசருக்கும் யாளிக்கும் சரபத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி விவாதங்களை இலக்கியங்களில் மற்றும் வரலாற்று சுவடுகளில் இருந்து எடுத்து விவாதித்தோம். இதற்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. சிற்பக்கலை, நாட்டியக்கலை, யோகக்கலை மற்றும் வர்மக்கலை ஆகியவற்றிற்கான தொடர்புகளைப் பற்றியும் பேசினோம்.

வாட்சப்பில் குழு அங்கத்தினர்களைப் பற்றி…..

மெரிக்கா, கனடா, மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை போன்ற பல நாடுகளில் இருந்து தமிழர்கள் இந்தக் குழுக்களில் இருந்தார்கள். 80 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து தென்னாப்பிரிக்காவில் குடியேறிய ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் இந்த குழுவில் இருந்தார். அவருக்கு தமிழ் தெரியவில்லை. இருந்தாலும் அவரும் இந்த குழுவில் இருந்து தமிழை ஆர்வமாக கற்றார். இன்றும் அவர் தொடர்பில் இருக்கிறார்.

இந்த வகுப்பு எவ்வளவு நாள் நீடித்தது என்றேன்.

தற்கு அவர்,”ஒரு இரண்டு மாதங்களுக்கு பொதுவாக இலக்கணத்தை நடத்தி முடித்து விட வேண்டும் என்று நினைத்தேன். கடைசியில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் எடுத்து முடிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உருவானது. இந்த இலக்கண வகுப்பு எட்டு மாதங்களுக்கு சென்றது.


லக்கண வகுப்புகள் முடிந்தபிறகு வாசகர்களின் உந்துதலால் இலக்கிய வகுப்புகளும் ஆரம்பித்தது. “தமிழ் இலக்கியம் கற்போம்” என்று ஒரு குழுவை உருவாக்கினோம். திங்கட்கிழமை - சிலப்பதிகாரம் (பௌத்த சமயம்) , செவ்வாய்க்கிழமை - சீவகசிந்தாமணி (சமண சமயம்), புதன்கிழமை - வில்லிபாரதம் (வைணவ சமயம்), வியாழக்கிழமை - பெரியபுராணம் (சைவ சமயம்), வெள்ளிக்கிழமை - பதினெண் மேல்கணக்கு நூல்கள் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் (பொதுவான நீதி மற்றும் சமய நூல்கள்) என்ற அட்டவணையில் இந்த குழு இயங்கியது. இதனோடு சேர்த்து கிரந்தம், வட்டெழுத்து, தமிழ் பிராமி( தமிழி) போன்ற சிறப்பு குழுக்களும் உருவாக்கப்பட்டன.

கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கிட மீண்டும் அலுவலக பயணங்கள் ஆரம்பித்தன. இதனால் இந்த பகிரும் சேவையும் ஒரு முடிவுக்கு வந்தது.

BITS Pilani யில் பி.டெக் முடித்துவிட்டு, TCS ல் Chief Architect ஆக பணியில் உள்ளார். சிறு வயதில் பெற்றோர், மாமா மற்றும் தாத்தா பாட்டி உந்துதலால் கர்னாடக சங்கீதம், சமஸ்கிருதம், தற்காப்பு கலைகள் (சிலம்பம், குத்துவரிசை, பாதவிஞ்ஞானம்), யோகாசனம், இசை வாத்தியங்கள் (வீணை, கொன்னக்கோல்) ஹிந்தி, வான சாஸ்திரம் போன்றவற்றைக் கற்றுக் கொண்டுள்ளார்.

விகடகவியிலும் இது போன்ற நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள இசைந்திருக்கிறார்.... விரைவில்.... தொடர் வரக் கூடும்.