பொங்கலுக்கு விஜய் நடித்த வாரிசு படமும், அஜித் நடித்த துணிவு படமும் வெளியாகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் அஜித்தின் துணிவு படத்தை தமிழக தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை வாங்கியிருக்கிறது.
ஆளுங்கட்சி தற்சமயம் அவர் அமைச்சர் வேறு என்பதால் அவர் வெளியிடும் துணிவு படத்துக்கு தான் அதிக திரையரங்குகள் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதனால் விஜய் நடித்த வாரிசு படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளரான தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தில் ராஜு சமீபத்தில் சென்னை வந்தார். அவர் சொன்ன விஷயம் இதுதான். தமிழ்நாட்டில் அஜித்தை விட மாஸ் ஹீரோ விஜய் தான் எனவே உதயநிதி ஸ்டாலின் துணிவு படத்துக்கு இணையான அளவு வாரிசு படத்திற்கும் தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் இது என் பிசினஸ் தேவைப்பட்டால் நான் உதயநிதி ஸ்டாலினை சந்திப்பேன் என்றார். இதன் மூலம் விஜய் படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பது சிக்கல் என்பதை வெளிப்படையாக வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு போட்டு உடைத்து விட்டார்.
அதன் பிறகு யார் என்ன பேசினார்களோ என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீர் திருப்பமாக வாரிசு படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னார் காடு, கோவை ஏரியாக்களுக்கு உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இதன் மூலம் இந்த ஏரியாக்களில் வாரிசு படமும் திரையிடப்படும் என்ற உத்தரவாதம் மறைமுகமாக கிடைத்திருக்கிறது.
வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசும் போது "வாரிசுக்கு வாழ்த்துக்கள் "என்றார்.
தயாரிப்பாளர் தில் ராஜூக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது . அதைக் வாரிசுக்கு வாழ்த்துக்கள் என்றார் நடிகர் விஜய். முதல்வர் ஸ்டாலினின் வாரிசு உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அமைச்சரானார் அவருக்கு தான் வாழ்த்து சொன்னார் என்று யாரும் நினைக்க கூடாது என்று பிறந்த குழந்தைக்கு வாழ்த்து சொன்னேன் என்று விளக்கம் சொன்னார். வாரிசு 2 எப்போ என்று கேட்டார். அவர் கேட்டது அடுத்த குழந்தை எப்போது வாரிசு இரண்டாம் பாகம் எப்போது என்பதுதான். ஆனால், உதயநிதி வாரிசு இன்பநிதிக்கு வாய்ப்பு எப்போ என்று நினைக்கக் கூடாது என்று அதற்கும் ஒரு விளக்கம் சொன்னார். அந்த விழாவில் விஜய் பேசியதில் அரசியல் நெடி கொஞ்சம் ஓவர் தான் என்பதற்கு அவர் சொன்ன குட்டி கதையும் ஒரு சான்று.
1990 காலகட்டத்தில் ஒரு நடிகர் எனக்கு போட்டியாளராக மாறினார் பின்னர் அவர் தீவிர போட்டியாளராக மாறினார் அவரது வெற்றியால் நானும் கடினமாக ஓடினேன் நான் அவரை விட கடினமாக ஓடி சென்று வெற்றி பெற்றேன். அத்தகைய போட்டியாளர் நமக்கு தேவைதான் அந்தப் போட்டியாளர் தான் ஜோசப் விஜய். அதாவது எனக்கு யாரும் போட்டி இல்லை எனக்கு போட்டி நான்தான் என்று குறிப்பிடுகிறார். நடிகர் விஜய்யை பாஜக தலைவர்கள் ஜோசப் விஜய் என்று தான் குறிப்பிடுவார்கள். அதனால் ஜோசப் விஜய் என்று சொல்லி ஆமாம் நான் ஜோசப் விஜய் தான் என்று பாஜகவுக்கு மறைமுகமாக பதில் சொல்லி விட்டார். அந்தக் கூட்டத்தில் தனது ரசிகர்கள் ரத்த தானம் செய்வது பற்றி பெருமையாக பேசினார் ரத்த தானத்திற்கு என்று நாங்கள் தனியாக ஒரு செயலியை வைத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார் விஜய் என்கிற ஜோசப் விஜய். இனம் மதம் ஜாதி வேறுபாடு இல்லாதது ரத்தம் மட்டுமே குறைந்தபட்சம் இந்த ஒரு நல்ல குணத்தை நாம் ரத்தத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ரத்தத்திலிருந்து நான் சமத்துவத்தை கற்றுக் கொண்டேன் என்று அரசியல் பேசினார் நடிகர் விஜய் என்கிற ஜோசப் விஜய்.
நடிகர் விஜய்யின் இந்த பேச்சு அஜித் ரசிகர்கள் உதயநிதி ஸ்டாலின் பாஜக என்று எல்லோருக்குமான பதிலாக அது இருந்தது.
விஜய் கடந்த மூன்று மாதமாக இன்னொரு வேலையையும் செய்து வருகிறார். பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தனது ரசிகர்களை சந்திப்பது , சென்ற வாரம் கடலூர், அரியலூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார் அதற்கு முன்பு நாமக்கல் சேலம் புதுக்கோட்டை மாவட்ட ரசிகர்களை சந்தித்தார். அவர்களுக்கு பிரியாணி விருந்து தந்து உபசரித்தார் விஜய் கூடவே அவர்களுடன் சலித்துக் கொள்ளாமல் செல்பி எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர்களிடம் அவர் பேசும்போது அவர்களது தொகுதி நிலவரம் திமுக ஆட்சி பற்றி மக்கள் கருத்து அவர்கள் தொகுதியில் மக்களுக்கு தேவையான வசதிகள் குறைகள் இவற்றை கேட்டறிந்தார் கூடவே சின்ன சின்ன மக்களின் கோரிக்கைகளை நாமே நிறைவேற்றலாம். ஆனால், அதற்காக யாரிடமும் பணம் எல்லாம் வசூல் செய்யாதீர்கள் தேவையான பணத்தை நான் தருகிறேன் என்ன கோரிக்கை என்று மட்டும் என்னிடம் சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார் நடிகர் விஜய்.
இனிமேல் எல்லா மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை தொடர்ந்து சந்திக்க திட்டமாம். விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி போட்டு கணிசமான இடத்தில் வெற்றி பெற்றது இப்போது விஜயின் அடுத்த இலக்கு பாராளுமன்றத் தேர்தல் ஆனால் அவசரப்படாமல் அரசியல் சதுரங்கத்தில் காய்களில் நகர்த்துகிறார் வாரிசு நடிகர் ஜோசப் விஜய்.
Leave a comment
Upload