தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

கல்யாணி

20221130111534414.jpg

இயக்குனர் பிரியதர்ஷன் நடிகை லிசி தம்பதியின் மகள் கல்யாணி. இவர் ஹலோ என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகம். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ சிம்பு நடித்த மாநாடு படத்தில் நடித்திருக்கிறார். இப்போது கன்னட நடிகர் ராஜ்குமார் மகன் நடிகர் ராகவேந்திரா ராஜ்குமார் இவரது மகன் யுவராஜ் குமார் நாயகனாக அறிமுகமாகும் படத்தில் கல்யாணி கதாநாயகி. நான் சினிமாவுக்கு வந்து ஐந்து வருடம் ஆகிவிட்டது என்கிறார் கல்யாணி.

அங்கீகாரம்

20221130111931173.jpg

வாரிசு படத்தில் நடிகை ஜெயசுதா விஜய் அம்மாவாக நடிக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் தென்னிந்திய நடிகர் நடிகைகளுக்கு மத்திய அரசு உரிய அங்கீகாரம் தர மறுக்கிறது. 44 படங்கள் இயக்கி கின்னஸ் சாதனை படைத்த விஜய் நிர்மலாவை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், பத்து படங்களில் நடித்த கங்கன ராணாவத்திற்கு பத்மஸ்ரீ பட்டம் தந்திருக்கிறது என்று வருத்தப்படுகிறார். ஜெயசுதா அதே சமயம் பட்டங்கள் நம்மை தேடி வர வேண்டும் நாம் கேட்டுப் பெறக்கூடாது என்றும் பொடி வைத்து சொல்லி இருக்கிறார்.

ராதிகா ஆப்தே

20221130112238946.jpg

இந்தி நடிகையான ராதிகா ஆப்தே தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிச்செல்வன், சித்திரம் பேசுவது 2 உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ராதிகா ஆப்தே மூன்று வருடங்களாக திரைக்கதை எழுதுவது எப்படி என்று பயிற்சி பெற்று வருகிறார். விரைவில் திரைக்கதை எழுதி படம் இயக்க இருக்கிறாராம். தயாரிப்பாளர்களே ராதிகா ஆப்தே ரெடி நீங்க ரெடியா.

திரிஷா

20221130112610196.jpg

சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவம் நமக்கு கிடைக்கும். நான் அரசியல் கட்சியில் இணையப்போவது இல்லை காங்கிரஸ் கட்சியில் நான் சேர போகிறேன் என்று யாரோ கதை கட்டி விட்டார்கள் நம்பாதீர்கள் அது உண்மை இல்லை என்று உறுதிப்பட தெரிவிக்கிறார் திரிஷா. அவர் திருமணம் பற்றி கேட்டபோது இப்படி நீங்கள் கேட்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். திரிஷாவை பொறுத்தவரை தமிழில் பிடிக்காத வார்த்தை திருமணம்.

ராஷ்மிகா

20221130112834253.jpg

விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் ஆடினார். விஜய் நடித்த கில்லி படத்தை அவர் அப்பாவுடன் சேர்ந்து பார்த்தாராம் அது முதல் அவர் விஜய் ரசிகராகிவிட்டாராம். விரைவில் ரசிகர்களை சந்திக்க இருக்கிறாராம் அது ஜூம் அமைப்பின் மூலமா அல்லது இன்ஸ்டா நேரலையா என்பதை விரைவில் முடிவு செய்ய இருக்கிறார் ராஷ்மிகா.

ஆஷிகா ரங்கநாத்

20221130113009627.jpg

ஆஷிகா ரங்கநாத் கன்னட நடிகை ஆன இவர் அதர்வா நடித்த பட்டத்து அரசன் மூலம் தமிழில் என்ட்ரி. இப்போது சித்தார்த்துடன் நடித்து வருகிறார். அவருடைய லட்சியம் பான் இந்தியா படங்களில் நடித்து பிரபலமாவது தான் என்கிறார் ஆஷிகா ரங்கநாத்

ஜான்வி

20221130113253221.jpg

தயாரிப்பாளர் போனி கபூர் நடிகை ஸ்ரீதேவி வாரிசு ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். அவரது தென்னிந்திய என்ட்ரி தமிழா தெலுங்கா என்று இன்னும் முடிவு செய்ய வில்லையாம் அப்பா தான் தயாரிப்பாளர் ஆச்சே தமிழ் தெலுங்கு இரண்டிலும் என்ட்ரி தர வேண்டியதுதானே.

ஜிவி பிரகாஷ்

20221130113709861.jpg

கல்லூரி கட்டணம் செலுத்த உதவி கேட்டு ஜிவி பிரகாஷ் ட்விட்டர் தளத்தில் ஒரு மாணவர் பதிவு செய்திருந்தார். அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு ஜிவி பிரகாஷ் அந்த மாணவருக்கு பதில் அனுப்பி இருந்தார். ஜி பே மூலம் பணம் அனுப்பி ஆகிவிட்டது. நன்றாக படியுங்கள் என்பது தான் அந்த பதில். இப்படி உதவி கேட்டு பதிவு செய்பவர்களுக்கு உடனே உதவி செய்வது ஜி .வி. பிரகாஷ் பழக்கவழக்கமாம்.

20230001091839108.jpg