தொடர்கள்
பொது
ஆதார் இணைப்பு  அவசியமா?! – ஆர்.ராஜேஷ் கன்னா

2022112919084338.jpg

இந்திய குடிமகன் ஓவ்வொருவரின் வாழ்விலும் ஆதார் அட்டை ஒரு முக்கிய அங்கமாகி விட்டது.

ஆதார் அட்டையின் பயன்பாடு நாளுக்கு நாள் அரசின் அனைத்து திட்டங்களுக்கும் இன்றியமையாதாக மாறிவிட்டது.

ஆதார் அட்டையின் தரவுகள் பாதுகாப்புடன் இருக்கிறதா என்று அடிக்கடி நம் மக்களுக்கு எழும் சந்தேகம் இன்று வரை தீர்ந்தபாடில்லை.

அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் அட்டை பதிவு செய்தால் தான் கிடைக்கும் என்ற நிலை தற்போது உள்ளது.

சமீபத்தில் மானியம் பெறும் மின் இணைப்புக்களில் ஆதார் அட்டை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்குள் தமிழக அரசின் அறிவிப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்காக மானியம் பெறும் மின்சார இணைப்புக்கு ஆதார் எண்ணை இணைக்கும் உத்திரவினை ரத்து செய்ய தொடரப்பட்டது. இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

தமிழகத்தில் மின் இணைப்புடன் 1 கோடி வீட்டு இணைப்பில் மானியம் பெறும் மின் நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பில் இணைத்து விட்டனர்.

தமிழகத்தில் 100 யூனிட் மானியம் மின்சார இணைப்பு பயன்படுத்தும் அனைத்து வீடுகளுக்கு தடையின்றி வழங்கப்படும் என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துவிட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு KYC திட்டத்தில் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவரும் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து விட்டனர்.

வருமான வரித்துறையினர் வழங்கும் Pan card ஆதார் எண்ணை இணைத்துவிட்டனர். விடுப்பட்ட நபர்கள் வரும் நாட்களில் இணைக்க வேண்டும் என கால அவகாசம் வருமான வரித்துறையினர் அளித்துள்ளனர்.

தமிழக தேர்தல் ஆணையம் அனைத்து வாக்களர்களின் ஆதார் எண்ணையும் தனது வாக்களர்கள் லிஸ்ட்டில் சேர்த்து வருகிறது.

வீட்டில் புழுங்கும் எல் பி ஜி கேஸ் வரைக்கும் ஆதார் கார்டின் எண் இணைக்கப்பட்டு விட்டது.

20221129190918286.jpg

விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கும் பயிர் கடன் முதல் பயிர் காப்பீடு திட்டம் வரைக்கும் அனைத்திற்கும் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது.

அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அரசிடம் பென்சன் பெறும் அனைவரின் ஆதார் எண் ஏற்கனவே இணைக்கப்பட்டு விட்டது.

இது இப்படி இருக்க , கடலூர் நகரத்தை சுற்றியுள்ள கிராமத்தில் பலருக்கு ஆதார் அட்டையை இதுவரை பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து ஆதார் அட்டை பெறாத நபர்களுக்கு உடனடியாக வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்ற சமுக நல ஆர்வலர்களின் குரலாக உள்ளது.

வீட்டு மின்சார இணைப்பு மற்றும் ரேஷன் அட்டையில் ஆதார் இணைந்துள்ளதால் வரும் காலத்தில் மின்சார மானியம் அல்லது ரேஷன் பொருட்களின் மானியம் மட்டும் ஏதேனும் ஒன்று பெற்றுகொள்ள அரசு அறிவுறுத்த இந்த ஆதார் அட்டை எண் இணைப்பு அரசால் நடத்தப்படுகிறதா என்று சந்தேகம் எழப்புகின்றனர் நுகர்வோர் ஆர்வலர்கள்.

தற்போது கோயம்புத்தூர் நகராட்சியில் வீட்டு வரிவிதிப்பிலும் வீட்டின ஓனர் ஆதார் எண் மற்றும் ரேஷன் அட்டை எண் இணைக்கப்படுகிறது என்ற சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் காவிரி டெல்டா பாசன் விவசாயிகள் தங்கள் மின் இணைப்புக்கள் ஆதார் எண் இணைக்கப்படுவதால் தங்களுக்கு வரும் மத்திய-மாநில அரசுகளின் விவசாய மானியம் தங்கு தடையின்றி இடைதரகர்கள் தொல்லையின்றி கிடைக்கும் என்று டெல்டா விவசாய சங்க பிரதிநிதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்கு பயன்படுத்தும் எல் பி ஜி சிலிண்டர் நுகர்வோர் கணக்கில் ஆதார் அட்டை இணைப்பிற்கு அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தற்போது அரசின் அனைத்து திட்டங்களுக்கும் மானியம் பெற ஆதார் இணைப்பு அவசியம் அத்துடன் தகுதியற்ற பயனாளர்களை நீக்கி தகுதியானவர்களுக்கு மானியங்கள் வழங்க ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்கிறார் தலைமை நிலைய மக்கள் தொடர்பு பிரிவு மற்றும் முன்னாள் திமுக எம் பி டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆதார் தரவுகள் பாதுகாப்புடன் இருக்கிறது. ஆதார் எண் கொண்டு ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஓரே திட்டத்தில் பயன் பெறுவதை ஆதார் எண் கொண்டு சரிபார்த்து தடுக்கலாம் என்கிறார்கள் அரசு அதிகாரிகள் .

20221129193437321.jpg

சமீபத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கி கடன்களில் இருக்கும் நகைக்கடன்கள் தள்ளுபடி திட்டத்திற்கு ஆதார் கார்டு முலம் பலரின் தள்ளுபடி கனவு தகர்ந்தது.

ஒன்றிற்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் ஓரே நபர்கள் நகைகளை வைத்து நகைகடன் பெற்றதையும் பயனாளிகளின் ஆதார் முலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசிற்கு பல கோடி ருபாய் விரயமாவது ஆதார் எண் இணைப்பால் கண்டுபிடிக்கப்பட்டு தவிர்க்கப்பட்டு பல தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய பயனிகளுக்கு நகைகடன் தள்ளுபடி கிடைத்தது.

ஆதார் எண் முலம் தன்னுடைய சிறப்பான சேவையின் முலம் பயனாளிகளுக்கு தமிழக அரசின் நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சர் டாக்டர் P.தியாகராஜன் (PTR) எடுத்த அதிரடி முடிவு முதல்வர் வரை அவருக்கு பாராட்டு குவிந்தது.

முதியோர்கள் ஓய்வு ஊதியம் வாங்குபவர்கள் ஆதார் அட்டையில் எல் பி ஜி சிலிண்டர் இணைப்பு இருந்தால் திமுக ஆட்சிக்கு வந்த பின் ஓய்வு ஊதியம் நிறுத்தப்படுவதாக பரவலான தகவல் உள்ளது. ஏழை முதியோர்கள் தங்கள் பெயரில் அல்லது தங்களது மகன் பெயரில் எல்.பி.ஜி கேஸ் இணைப்பு இருந்தாலும் மீண்டும் தங்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டவர்களின் குரலாக உள்ளது.

20221129190950974.jpg

இந்தியா முழுவதும் ஆதார் அட்டையின் பயன்பாடு சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் நிலையில் , தமிழக அரசின் 12 எண்கள் கொண்ட ஆதார் அட்டைப்போன்றே மக்கள் ஐடி என்ற புதிய வகை அடையாள அட்டை அறிமுக படுத்தப்படும் என்ற அறிவிப்பு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான டெண்டர் விரைவில் விடப்படும் என்றும் தமிழக அரசின் நலதிட்டங்களுக்கு இந்த மக்கள் ஐடி பயன்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஆதார் அட்டையே போதுமானதாக இருப்பதால் தமிழக அரசின் மக்கள் ஐடி என்பது திட்டம் தேவையற்றது அத்துடன் பண விரயம் என்பதே தலைமை செயலக அதிகாரிகள் இடையே பேச்சாக உள்ளது.

ஆதார் எடுத்து பத்து வருடங்கள் ஆகிவிட்டதால் தற்போது நாம் அதனை அப்-டேட் செய்து கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

எது எப்படியோ, இனி வரும் காலத்தில் அனைத்து துறைகளிலும் பயனாளிகள் ஆதார் எண் இணைப்பு அவசியம் என்பதே நிதர்சனம்.

20230001091736963.jpg