தொடர்கள்
அரசியல்
சுவாச்சு பாரத்து எட்டாத கிராமம் - மாலா ஶ்ரீ

20221117093213657.jpeg

கர்நாடக மாநிலம், சிவமோகா மாவட்டம், பருவே பஞ்சாயத்துக்கு உட்பட்ட எலிகே குக்கிராமத்தில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை. மேலும், இங்குள்ள கழிவறையின் கதவுகள், கழிவுநீர் தொட்டிகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் சேதமடைந்த கழிவறையை சுற்றி, திறந்வெளியில் அக்கிராம மக்கள் சேலையை கட்டி வைத்துள்ளனர்.

தற்போது இந்த சேலையின் பின்பக்கமாக சென்று, திறந்வெளி பகுதியில் அப்பள்ளி மாணவ-மாணவிகள் இயற்கை உபாதைகளை தனித்தனியே கழித்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ பல்வேறு சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாக பரவியது.

மாவட்ட கல்வித்துறை துணை இயக்குநர் பரமேஸ்வரப்பா கூறுகையில், ‘‘எலிகே கிராம அரசு பள்ளியில் சேதமான கழிவறை கட்டிடம் நீண்ட காலமாக சீரமைக்கப்படவில்லை. இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் திறந்தவெளியை கழிவறையாகப் பயன்படுத்தி வருகின்றனர். அப்பள்ளிக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்!’’

மத்திய அரசு சுவாச் பாரத் என்று பல திட்டங்கள் வைத்து வீடுதோறும் கழிவறை கட்டித் தரும் முயற்சியில் பாஜக ஆளும் கர்நாடகாவில் இப்படி ஒரு பள்ளி இருப்பது வேதனை.

பள்ளியில் நல்ல கழிவறை வசதிகள் இல்லையெனில் அது நரகம் என்பது அந்த சூழ்நிலையில் வாழ்ந்து பார்த்தால் தான் புரியும்.