உதயநிதி ஸ்டாலினை மிஸ்டர் ரீல் சந்திக்க போன போது அவரது மகன் இன்பநிதி "அப்பா அடுத்த உலக கால்பந்து போட்டி தமிழ்நாட்டில் திருவாரூரில் நடத்தணும். அந்தப் போட்டியில் இந்தியா விளையாடனும் நான் தான் கேப்டன் உலகக் கோப்பை நம்ம கோப்பை இது உறுதி முதல் கையெழுத்து அதைத்தான் நீங்க போட்டு இருக்கணும், "என்று சொல்ல" நான் இப்பதான் அமைச்சராக இருக்கிறேன் முதல இது பற்றி விவரம் கேட்கிறேன் கையெழுத்து எல்லாம் பிரச்சனை இல்லை நீ போய் படி "என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகனை ஒரு மாதிரி சமாளித்து அனுப்பி வைத்தார்.
அப்போது அங்கு வந்த அவர் வீட்டு வேலைக்காரி "தம்பி இந்த தாய கட்டைய தமிழ்நாடு விளையாட்டுபட்டியலில் சேருங்க மாநில அளவில் நான் உங்களுக்கு கப்பு வாங்கி தரேன் "என்று சொல்லிவிட்டு தொடப்பத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார். அப்போது அங்கு வந்த அவரது அம்மா "மினிஸ்டர் சார் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு ஐஸ் பாய், பல்லாங்குழி, கிளித்தட்டு, ஆடு புலி ஆட்டம், கில்லி, கோலி இது எல்லாம் மாநில விளையாட்டுப் போட்டியில் சேருங்க மாவட்ட அளவில் மாநில அளவில் போட்டி நடத்துங்க அவங்களுக்கு எல்லாம் மானியம் தாங்க நான் சிபாரிசு செய்துதான் நீங்க அமைச்சர் அத மறந்துடாதீங்க சார் "என்று சொல்லிவிட்டு எழுந்து போனார் திருமதி துர்கா ஸ்டாலின்.
அப்போது மிஸ்டர் ரீல் "விளையாட்டுத்துறை அமைச்சர் என்றால் விளையாட்டுத்தனமா டைம் பாஸ் பண்ண முடியாது போல இருக்கு உங்க குடும்ப உறுப்பினர்களே நிறைய கோரிக்கை வைக்கிறாங்க "என்று சொல்ல "எங்க தாத்தா ஏற்கனவே சொல்லி இருக்காரு கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகம் அது இதுதான் போல இருக்கு "என்றார் புது அமைச்சர் அப்போது மிஸ்டர் ரீல் "சரி எப்படி நீங்கள் திடீரென்று அமைச்சர் ஆனீர்கள் அதை சொல்லுங்கள் "என்று கேட்க "எல்லாம் இந்த பள்ளிக்கூட இலாகா அமைச்சர் செய்த வேலை அவர்தான் எங்க மம்மியை உசுப்பேத்தி விட்டிருக்கிறார். அவர் உடனே தலைவரை நச்சு பண்ணி இருக்கிறார். ஆனால், தலைவர் முதலில் நோ சொல்லிவிட்டார். அதன் பிறகு எங்கள் மம்மி பழிவாங்கும் நடவடிக்கையாக தேனீரில் கூடுதல் சர்க்கரை சாம்பாரில் அதிக காரம் ரசத்தில் கூடுதல் உப்பு என்று பழிவாங்கியிருக்கிறார் அப்புறம் தளபதி பயந்து போய்சம்மதம் சொல்ல அதன் பிறகு தான் நார்மல் சமையல் நிலைக்கு வந்தது"என்று சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் "திருமதி முதல்வர் அவ்வளவு விவரமானவரா "என்று ஆச்சரியத்துடன் கேட்க அதற்கு விளையாட்டு அமைச்சர் "நீங்க வேற நான் அமைச்சரானால் மாதம் இரண்டு முறை பாதயாத்திரையாக திருப்பதிக்கு சேகர்பாபுவை அனுப்புவதாக வேண்டிக் கொண்டார் "என்று சொல்ல "ஓ அதற்கு சன்மானமாக தான் சி எம் டி ஏ துறையா "என்று மிஸ்டர் ரீல் கேட்க அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "அது எனக்கு தெரியாது சேகர் பாபு நாளை திருப்பதிக்கு பாதையாத்திரை போகிறார் அது எனக்கு தெரியும் "என்றார்.
"சினிமாவை விட்டு விலகுகிறீர்களே கஷ்டமா இல்லையா "என்று மிஸ்டர் ரீல் கேட்க அதற்கு முன்னாள் நடிகர் உதயநிதி ஸ்டாலின்" நான் என்ன சூப்பர் ஸ்டாரா அல்லது இளைய தளபதியா இல்ல தல அஜித்தா சினிமாக்காரங்க ரொம்ப சந்தோஷப்படுறதா நேற்று என் நண்பன் விஷால் போன் பண்ணி சொன்னா போல "என்று சொல்ல அப்போது மிஸ்டர் ரீல் "சரி என் செயல்பாடு பேசும் என்று சொன்னிங்களே அந்த செயல்பாடு என்ன அதை கொஞ்சம் சொல்லுங்கள் "என்று கேட்க அதற்கு அமைச்சர்" அது ரகசியம் சொல்ல மாட்டேன் "என்று சொல்ல உடனே மிஸ்டர் ரீல் "நீட் ரத்து ரகசியம் எனக்கு மட்டும்தான் தெரியும் என்று சொன்னீர்களே அந்த மாதிரி ரகசியமா இது "என்று கேட்க உடனே அமைச்சர் முறைக்க சுதாரித்துக் கொண்ட மிஸ்டர் ரீல் நீங்க நேற்றுதான் அமைச்சர் ஆனீர்கள் அதற்குள் பட்டியலில் பத்தாவது இடத்திற்கு வந்து விட்டீர்கள் சீனியர் அமைச்சர்கள் எல்லாம் கீழே போய் விட்டார்கள் ஏதோ போங்கு ஆட்டம் ஆடுற மாதிரி தெரியுது "என்று கேட்க "இப்பவே இப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்களா என்ற அமைச்சர் அதெல்லாம் இல்லை தமிழ்நாடு அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பத்து தங்கப்பதக்கம் வாங்க வேண்டும் என்பது திட்டம். அதனால் தான் என்னை பத்தாவது இடத்தில் வைத்திருக்கிறார்கள் இது எல்லாம் நீங்கள் விளையாட்டாக பார்க்காதீர்கள் தமிழ்நாடு 10 தங்கப்பதக்கம் என்பது திராவிட மாடல் ஆட்சி லட்சியம் "என்று சொல்ல ஒலிம்பிக் தங்கப் பதக்கம் இதெல்லாம் கூட திராவிடம் மாடல் ஆயிடுச்சு என்று யோசித்தபடியே புறப்பட்டார் மிஸ்டர் ரீல்.
Leave a comment
Upload