மேயரின் துணிச்சல் செயலை பாராட்டணும் பிரியா தொங்கியது பற்றி சேகர்பாபு
விட்டா அண்ணன், அண்ணா பதக்கத்துக்கு சிபாரிசு பண்ணுவார் போல இருக்கு.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் சில எம்பிக்களுக்கு பொறாமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இப்ப இதுக்கெல்லாம் கூட பொறாமை பட ஆரம்பிச்சுட்டாங்களா !
15 லட்சம் நிர்வாகிகள் நியமிக்க திமுக தீர்மானம்
இதெல்லாம் ஓகே அமைச்சர் பதவிக்கு எல்லாம் ஆசைப்படக்கூடாது என்கிறார் தலைவர்
திராவிட மாயை அகற்ற ரஜினி வாய்ஸ் தரணும் இந்து மக்கள் கட்சி விருப்பம்
உங்கள் விருப்பம் சரி மக்கள் விருப்பம் அப்படி இல்லையே
கோர்ட்டுக்கு வந்த ரவுடி கொலை
அப்ப கோர்ட்டு பாதுகாப்பு வளாகம் இல்லையா
விளையாட்டின் தலைநகரமாக தமிழகத்தை மாற்றுவேன் உதயநிதி ஸ்டாலின்
அவர் அரசியல் விளையாட்டு சொல்லலையே
பாஜக கூட்டணி புதிய கட்சிகள் இணையும் பொன் ராதாகிருஷ்ணன்
இந்த விஷயம் அண்ணாமலைக்கு தெரியுமா தலைவரே
வசூலிக்க முடியாத 10 லட்சம் கோடி கடன் தள்ளிவைப்பு மத்திய நிதியமைச்சர்
இதற்கும் பண வீக்கத்துக்கும் விலைவாசி உயர்வுக்கும் சம்பந்தமில்லை தானே மேடம்
பாஜக எம்எல்ஏக்கள் பார்த்து சத்தம் சட்டசபையில் நிதீஷ் குமார்
எதுக்கு பாதி ஆட்டத்துல விட்டுட்டு போனீங்கன்னு கோவம் இருக்கும்
அரசுத் துறையில் 9.79 லட்சம் பணியிடங்கள் காலி.
அப்ப எதிர்க்கட்சி சொல்கிற வேலையில்லா திண்டாட்டம் உண்மைதானா
இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் உதயநிதி ஸ்டாலின்
ஆமாம் அரசியல் நடிக்க தயாராகி ஆச்சு
பாஜக ஆளும் மாநில எல்லை பிரச்சினை அமித்ஷா பேச்சுவார்த்தை
கூட்டணிக் கட்சி என்றால் சுலபமாக பேசி தீர்த்து விடுவார் சொந்தக் கட்சி ஆச்சே
ஆன்லைன் ரம்மி விளையாட்டு அறிவுப்பூர்வமானது சரத்குமார்.
வாங்கிய கூலிக்கு மேலேயே கூவுறாரு நடிகர்
காங்கிரஸ் இல்லாமல் திமுக வெற்றி பெறாது கே எஸ் அழகிரி
திமுக இல்லாமல் காங்கிரஸ் வெற்றிபெருமான்னுகேக்குறாங்க தலைவரே
2000 ரூபாய் நோட்டு புழக்கத்தை நிறுத்த வேண்டும் மாநிலங்களவை பாஜக எம்பி கோரிக்கை
ஆமா அது ஆளுங்கட்சி கிட்ட மட்டும் தான் பொழங்குது
Leave a comment
Upload