கத்தாரில் நடந்து கொண்டிருக்கும் உலக கால் பந்து போட்டியில் எத்தனையோ லட்சம் ரசிகர்கள் நேரடியாக சென்று போட்டிகளை கண்டு களித்து கொண்டிருக்கும் வரிசையில் நமக்கு அறிமுகமான இரண்டு பேரை தொடர்பு கொண்டு பேசினோம் .
ஊட்டியை சேர்ந்த தோஷி பெலிக்ஸ் ஒரு கால்பந்து வீரர் மற்றும் தீவிர ரசிகர் . நண்பரும் இவரும் இணைந்து கத்தார் பயணத்தை திட்டமிட்டனர் .
" ஒரு நீண்ட திட்டமிடலுக்கு பின் எங்கள் பயணத்தை துவங்கினோம் .நவம்பர் 26 ஆம் தேதி கத்தாருக்கு பயணித்தோம் . ஏர்போர்ட்டில் இருந்து ஒரே விழாக்கோலம் தான் எங்கு சென்றாலும் புட் பால் ரசிகர்கள் ஆடல் பாடல் கொண்டாட்டம் தான் .
நாங்கள் எங்கள் நண்பர் வீட்டில் தங்கினோம் .28 ஆம் தேதி தான் போர்த்துக்கல் உருகுவே போட்டியை நேரடியாக பார்த்தோம் .
நேரடியாக பார்ப்பது ரொம்பவே த்ரில்லிங் தான் .அதிலும் ஸ்டேடியம் முழுவதும் 88 ஆயிரம் ரசிகர்கள் குவிந்துஇருந்தனர் அதிலும் எங்கு பார்த்தாலும் இந்திய தலைகள் தான் .
போர்த்துக்கல் உருகுவே போட்டி லுஸைல் ஸ்டேடியத்தில் நடந்தது .
ஸ்பெயின் ஜப்பான் கலீபா ஸ்டேடியத்தில் நடந்தது மற்றும் பிரேசில் ஜப்பான் லுஸைல் ஸ்டேடியத்தில் நடந்தது
எல்லோருக்கும் தங்களின் முக்கிய வீரர்களை பற்றி தான் ஆவல் ரொனால்டோ போன்ற வீரர்களை எதிர்பார்த்து தான் உட்சாகம் அடைவதை பார்க்கும் போது நமக்கே பரவசம் ஆகி விடுகிறது .
ஸ்பெயின் மற்றும் ஜப்பான் போட்டி அருமையாக இருந்தது அதில் கடும் போட்டிக்கு பின் ஜப்பான் ஒரு கோல் போட்டு ஸ்பெயினை வீழ்த்தியதும் ஸ்பெயின் ரசிகர்கள் கண்ணீர் சிந்த அவர்களை ஜப்பான் ரசிகர்கள் ஆறுதல்படுத்தி தேற்றியதை பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது .
பிரேசில் மற்றும் கேமெரா போட்டி சூப்பர் அதற்கு தான் ஏகப்பட்ட கூட்டம் .நாங்கள் ஸ்டேடியதின் மேல் வரிசையில் அமர்ந்திருந்தோம் அதனால் சற்று தூரமாக தான் மேட்ச் பார்க்க முடிந்தது. நாங்க வாங்கின டிக்கெட் விலை ஒன்று 16 ஆயிரம் .
மற்ற ஒரு சிறப்பான விஷயம் Fans match அதாவது ஸ்டேடியம் சென்று பார்க்க முடியாதவர்களுக்காக பெரிய ஸ்க்ரீனில் பகல் 12 மணி முதல் எல்லா போட்டிகளும் திரையிடப்படும் அதை கண்டு களிக்க ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருப்பார்கள் .
மற்ற ஒரு விஷயம் கத்தாரில் எங்கு சென்றாலும் இலவச டிரான்ஸ்போர்ட் .மெட்ரோ மற்றும் பஸ் FIFA பாஸ் இருந்தால் ப்ரீ ட்ராவல் தான் அது சூப்பர் என்கிறார் தோஷி .
நாங்கள் 26 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை கத்தாரில் புட் பால் உலக போட்டிகளில் மூழ்கி இருந்தோம் இன்னும் அதே தான் கண் முன் இருக்கிறது என்று கூறும் தோஷியின் தந்தை பெலிக்ஸ் ஒரு கால்பந்து வீரர் நீலகிரியில் ஒரு காலத்தில் அப்பா கலக்கியுள்ளார் 37 வருடங்கள் விளையாடி பின்னர் ரெபிரியாக இருந்தார் .
அவரை கத்தார் கூட்டி செல்ல ஆசையாக இருந்தது அவர் தன் பாஸ்போர்ட்டை ரீனிவ் செய்யவில்லை அது ஒரு வருத்தமான ஒன்று என்று கூறும் தோஷி அடுத்த உலகக்கோப்பை கால் பந்து போட்டிக்கு தன் மனைவி மினியுடன் செல்ல இப்பொழுதே ரெடியாகியுள்ளார் .
ஊட்டியை சேர்ந்த ரெனால்டு ஓமனில் வங்கியில் பணிபுரிந்து குடும்பத்துடன் வசிக்கிறார் .
அவர் பணி செய்யும் வங்கி அவரையும் உடன் பணிபுரியும் நண்பர்களை FIFA பார்க்க அனுப்பிவைத்தது தான் சிறப்பான ஒன்று என்று கூறுகிறார் .
நாம் ரெனால்டை தொடர்பு கொண்டு பேசியபோது புட் பால் மேட்ச் காமெண்ட்ரி போல பேசினார் , " நான் இருக்கும் ஓமனில் இருந்து கத்தார் தோவாவிற்கு ஒரு மணிநேரம் இருபது நிமிட விமானத்தில் சென்றோம் . நான் பணிபுரியும் ஓமான் தேசிய வங்கி தேர்ந்திடுத்த சில ஊழியர்களை வங்கி செலவில் புட் பால் உலக போட்டியை காண அனுப்பிவைத்தனர் என்பது எங்களுக்கே ஆச்சிரியமான ஒன்று என்று பூரித்து சிரிக்கிறார் .
நாங்கள் இரண்டுநாள் FIFA மேட்ச் பார்க்க சென்றோம் . இரண்டு நாளும் திரில்லிங் தான் .ஏர்போர்ட்டில் இருந்து இறங்கியவுடன் புட் பால் மேட்சின் மூட் வந்து விடுகிறது .எல்லா இடங்களிலும் ஒளி மையம் தான் சாலை ஓரம் ...பெரிய கட்டிடங்களில் எல்லாம் மேட்ச் டிஸ்பிளே ஸ்கோர் டிஸ்பிளே .என்று ஒரே கலக்கல் தான் .
மொத்தம் இங்கு எட்டு ஸ்டேடியம் கம்பிரமாக கட்டப்பட்டுள்ளது .ஒரு ஸ்டேடியம் மட்டும் பிரித்து எடுக்க கூடியது .
இங்கிலாந்து , யு எஸ் ,பிரேசில் , கேமரோன் , ஜெர்மனி போன்ற மேட்ச் களில் கி பிளயர்ஸ் விளையாடியது காண தான் ஏகப்பட்ட கூட்டம் .
எங்கு பார்த்தாலும் பீலே , ரொனால்டோ படங்கள் . அந்தந்த நாடுகளின் தேசிய கொடிகள் தேசிய கீதங்கள் பாடி ஆடிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது எங்கும் விழா கோலம் தான் .
FIFA Fans festival என்று நடைபெற்று கொண்டிருக்கிறது அதற்க்கு தனி கட்டணம் வசூலிக்க படுகிறது .
அங்கு ஏகப்பட்ட கூட்டம் எல்லா மேட்ச்சும் பிக் ஸ்க்ரீனில் தெரியும் .
நாங்க பார்த்த மேட்ச் சூப்பர் எண்பது ஆயிரம் முதல் எண்பத்தி ஐந்தாயிரம் ரசிகர்களின் கூட்டம் .
அதே சமயம் பாதுகாப்பு வசதிகள் எல்லாம் அருமை எந்த குறையும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .
நம் நாடு இல்லாமல் இருக்க நமக்கு விருப்பம் உள்ள டீமுக்கு நம் ஆதரவை சூட்டினது ஒரு ரசனை தான் .
மேட்ச் எல்லாம் பார்த்து முடித்த பின் ரிலாக்ஸ் பண்ண கார்னேஷ் என்ற பகுதியில் வாட்டர் விளையாட்டு , வாணவேடிக்கை , ஷோஸ் என்று சூப்பர் .
மேட்ச் டிக்கெட்டுடன் ஒரு பெரமிட்போல கொடுக்கிறார்கள் அதை வைத்து கொண்டு மெட்ரோ , பஸ் என்று பொது போக்குவரத்தில் எங்கு வேண்டுமென்றாலும் இலவசமாக பயணிக்கலாம் .
பாதுகாப்பு அம்சங்கள் என்பது அருமையான ஒன்று எந்த பயமும் இல்லாமல் சென்று வருவதை உணரமுடிந்தது .
பத்து லட்சத்திற்கு மேல் ரசிகர்களின் வெள்ளத்தை நெரிசல் இல்லாமல் நகர்த்தியது கத்தார் அரசின் நிர்வாக திறமையை பார்க்க முடிந்தது .
போக்குவரத்து நெரிசல் என்பது இல்லை .
அதே போல ஏர்போர்ட்டில் இமிகிரேஷன் எல்லாம் ஸ்கேனிங் மூலம் தான் எந்த டென்ஷனும் குழப்பமும் இல்லாமல் இருந்தது .
உணவு சுத்தம் எல்லாமே சூப்பர் ..
எங்கு திரும்பினாலும் FIFA தான் ஸ்டார் புட் பால் வீரர்களின் படங்கள் டிஸ்பிளே .
ஸ்டேடியத்திற்கு சென்று பிரமாண்ட ரசிகர்களின் கூட்டத்துடன் மேட்சை பார்ப்பது திரில்லிங் .
கோவிட் வந்ததால் FIFA தள்ளி போனது ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் தான் இந்த புட் பால் போட்டிகள் நடத்த இருந்தனர் .அப்பொழுது கத்தாரில் கோடை வெயில் சுட்டெரிக்கும் அதனால் ஸ்டேடியங்களில் சென்ட்ரலைஸ்ட் ஏ சி பொருத்தப்பட்டு மேல் கூரை முழுவதும் மூடப்பட்டு ஸ்டேடியம் ஒரு கிளோஸ்ட் ஆக இருந்தது .தற்போது போட்டிகள் நவம்பர் டிசம்பரில் பனி குளிர் இருப்பதால் ஏ சிக்கு வழியில்லாமல் போக மேல் கூரை திறக்கப்பட்டுள்ளது ,மேலும் எல்லா ஸ்டேடியமும் ஓப்பனாக வைக்கப்பட்டது .
மிடில் ஈஸ்ட் முழுவதும் இந்தியர்கள் தான் .
அதே சமயம் இந்திய புட் பால் டீம் இருந்திருந்தால் எப்படிருந்திருக்கும் என்று பேசி கொண்டோம் .
மறக்க முடியாத கத்தார் FIFA விசிட் என்கிறார் ரெனோல்ட் .
தோஷியும் சரி ரெனால்டும் சரி இந்திய அணி உலக கால் பந்து போட்டியில் இடம்பெறவேண்டும் கேரளாவில் ஏகப்பட்ட புட் பால் வீரர்கள் இருக்கிறார்கள் நீலகிரி படுகு சமுதாயத்திலும் நாட்டில் பல மாநிலங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் ஏகப்பட்ட புட் பால் வீரர்களை அரசு அடையாளம் கண்டால் கட்டாயம் உலக கோப்பையை இந்தியாவிற்கு எடுத்து வர முடியம் என்று கூறினார்கள் .
தமிழகத்தின் இளம் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி இதை யோசித்தால் நல்லது .
Leave a comment
Upload