தொடர்கள்
பொது
ஜெயில் ….பெயில் …பணம்?! –ஆர்.ராஜேஷ் கன்னா

20221115084734914.jpg

தில்லாங்கடி சிறைபறவை “ சுகேஷ் சந்திரசேகர்” என்ற கட்டுரை விகடகவி மின்னிதழில் வெளியாகியது.

டெல்லி ரோஹினி சிறைச்சாலையில் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக விசாரணை கைதியாக இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் அவதார் ஆங்கில படங்களையே மிஞ்சியது.

சுகேஷ் சந்திரசேகர் தனது வாட்ஸ் அப் மற்றும் செல்போன் பயன்படுத்தி ருபாய் 200 கோடி மேல் பணபரிவர்த்தனை நடந்துள்ளது என பொருளாதார குற்றப்பிரிவு சொல்லும் குற்றசாட்டு .

சிறையிலிருந்தே 200 கோடி சம்பாதித்த குற்றவாளி தான் இந்திய அளவில் ஹைலெட்டாக பேசப்படும் ஹாட் டாக் .

டெல்லி ரோஹினி சிறைச்சாலையில் சுகேஷ் சந்திரசேகர் ஹாயாக அமைதியான தோற்றத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

சுகேஷ் சந்திரசேகர் தனது 17 வயதில் ஏமாற்று வேலை தொடங்கி தனது சாதுர்யத்தால் பெங்களுரு மற்றும் சென்னையில் பல கோடி சொத்துக்களை வாங்கியவர் என்று பொருளாதார குற்றபிரிவினர் வலைவீசி சல்லடை போட்டு அலசி கொண்டு இருக்கின்றனர்.

சுகேஷ் சந்திரசேகர் தனது 17 வயதில் குற்ற உலகின் முடிசூடா மன்னனாக திகழ ஆரம்பித்தவர் மீது 25 மேற்பட்ட எப்.ஐ .ஆர் போலீசார் பதிவு செய்து விசாரனை நடைபெற்று வருகிறது.

சிறையில் இருந்து தனது நெட்வொர்க்கை நாடு முழுவதும் விரிவாக்கி கொண்ட சுகேஷ் சந்திரசேகர்,இவரது மனைவி பாலிவுட் திரைப்பட நடிகையான லீனா மரியா பாலை டெல்லி பொருளாதார போலீசார் தங்கள் வளையத்தில் கைது செய்து கொண்டு சிறையில் அடைத்துவிட்டனர்.

சுகேஷ் சந்திரசேகரின் இன்னொரு பெயர் பாலாஜி. சுகேஷ் சந்திரசேகர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் தன் 17 வயது வரை பள்ளிக்குச் சென்றார் பின்பு படிப்பு பிடிக்கவில்லை பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.சுகேஷ் சந்திரசேகர் தன் இளமைப் பிராயத்திலேயே பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்து எதிராளியை தன் பேச்சில் மயக்கும் மந்திரவித்தைக்கு சொந்தக்காரர்.

சுகேஷ் சந்திரசேகர் தன்னுடைய பதினேழாவது வயதில் தான் கர்நாடகா முன்னாள் முதல் மந்திரி மகன் என்று ஒரு வயதான முதியவரிடம் இருந்து ரூபாய் ஒரு கோடி மோசடி செய்து தன் குற்றச்செயலுக்கு அச்சாரம் போட்டு துவக்கினார்.

சிபிஐ ஆபீசர் முதல் மத்திய அரசின் மிக முக்கியமான இன்டலிஜென்ஸ் ஏஜென்சி மற்றும் மத்திய அரசின் மிக முக்கிய அமைச்சரவை இலாகாகளில் முக்கிய பொறுப்பு வகிப்பதாக தன் செல்போனில் பேசி ஏமாற்றுவதில் வல்லவரானார்.இதனால் பெங்களுரு , சென்னை என்று மட்டும் தனது நெட்வொர்க்கினை இந்திய முழமைக்கும் ஏமாற்றும்தொழிலை தொடங்கி திறம்பட நடத்தி வந்துள்ளார்.

சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தாலும் அவரது நெட்வொர்க் விசாலமானது அதே நேரம் அவரின் செயல்பாடுகள் ரகசியமானது என போலீசார் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

இப்போது சுகேஷ் சந்திரசேகர் தனது சிறைவாழ்க்கையை விசாரணை கைதியாக ஜாமீன் கிடைக்காமல் ஹாயாக தொடர்ந்து வருகிறார். ஜெயில் வாழ்க்கையை சொகுசு வாழ்க்கையாக மாற்றி கொண்டு விட்டார் என்று காவல்துறையினர் மூக்கின் மீது விரல் வைக்கின்றனர்.

சமீபத்தி சுகேஷ் சந்திர சேகர் மனைவியின் பெயில் மனு விசாரணைக்கு வந்த போது போலீசார் தாக்கல் செய்த அபிடவிட்டில் உச்சநீதிமன்ற நீதியரசர்களையே புருவத்தை உயர வைத்தது. தன்கைவரிசையை நீதித்துறை மீதே காட்டியவிவகாரம் தான் லேட்டஸ் ஹாட் டாக்.

சிறையில் இருந்தபடியே உச்ச நீதிமன்ற நீதிபதி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் சட்டத்துறை செயலர் போன்றோரை சுகேஷ் சந்திரசேகர் ஆள்மாறாட்டம் செய்து, நீதித்துறையில் செல்வாக்கு தனக்கு இருப்பதாக நம்பவைத்து ஜெயிலில் இருக்கும் தொழிலதிபர் சிவ்விந்தர் சிங் மனைவியிடம் ருபாய் 214 கோடி பணம் பறித்து, தனக்குத் தேவையான வசதிகளை சிறையில் அடைந்ததாக தில்லி போலீஸார் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் சுகேஷ் மனைவி ஜாமீன் மனு வந்த போது நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதில் மேலும் , சுகேஷ் சந்திரசேகர் 2020 ஆண்டு சிறையில் இருந்த போது டெல்லி சிறைதுறை அதிகாரிகளுக்கு மாதம் தோறும் ரு 1.5 கோடி பணம் கொடுத்துள்ளார். மூன்று ஜெயில் சூப்பிரடெண்டுக்கு மாதம் தோறும் ருபாய் 66 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.3 டெப்புடி ஜெயில் சூப்பிரடெண்ட் ருபாய் 5 முதல் ருபாய் 6 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.5 உதவி ஜெயில் சூப்பிரடெண்டுக்கு ருபாய் 2 லட்சம் வீதமும், தாரம் சிங் மீனா என்ற ஜெயில் உதவி சூப்பிரடெண்டுக்கு ருபாய் 10 லட்சம் வரை பணமாக கொடுத்துள்ளார். இப்படி ஜெயில் இருந்து சிறைப்பறவையான சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் பெறாமல் தில்லாங்கடி வேலை செய்து இவ்வளவு பணம் பெற்று ஜாலியாக ஜெயிலில் செலவு செய்த விபரம் உச்சநீதிமன்ற விசாரணையின் போது காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்தது.

உலக வாழ்க்கையே ஓரு ஜெயில் வாழ்க்கை தான் என்ற பாடல் தில்லாங்கடி சுதேஷ் சந்திரசேகருக்கு கச்சிதமாக பொருந்துகிறது.