தொடர்கள்
அரசியல்
திமுகவின் புதிய அவதார் 1-ஜாசன்

20221116184958885.jpg

உதயநிதி ஸ்டாலினுக்கு கிட்டத்தட்ட யோக ஜாதகம் தான் போலும், எல்லாமே திடீர் திடீர் என்று இன்ப அதிர்ச்சியாக அவருக்கு கிடைத்து விடுகிறது. அவர் இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொண்டதாக சிரமப்பட்டதாகவோ தெரியவில்லை. ஒரு ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் ஒரு பேட்டியில் எனது மகனும் மருமகனும் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று உறுதி பட தெரிவித்திருந்தார்.

ஆனால் 2019 பாராளுமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் திமுகவுக்காக பிரச்சாரம் செய்தார். ஒரு வேளை சினிமா பிரபலம் என்று அழைக்கப்பட்டு இருந்தாரோ அல்லது ஸ்டாலினின் வாரிசு என்று அழைக்கப்பட்டிருந்தாரோ அது ஸ்டாலின் குடும்பம் மட்டும் அறிந்த ராஜ ரகசியம். பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரமும் ஒரு காரணம் என்று மூத்த தலைவர்கள் சிலரே பாராட்டினார்கள் அது ஒரு வேளை ஜால்ராவாக கூட இருந்து இருக்கலாம். ஆனால், அந்த குடும்பம் அதை ரசித்தது.

சட்டமன்றத் தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இதுவும் எதிர்பார்க்கப்பட்டது தான் சட்டமன்றத் தேர்தலின் போதும் உதயநிதி ஸ்டாலின் எல்லா தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார் வாக்கு எண்ணிக்கை தொடங்கி திமுக முன்னிலை உதயநிதி ஸ்டாலின் முன்னிலை என்ற அறிவிப்பு வரும்போது உதயநிதி ஸ்டாலின் தான் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்ற பேச்சு வரத் தொடங்கியது. அமைச்சரவை பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இல்லை என்று தெரிந்ததும் அந்த சர்ச்சை காணாமல் போனது. சில மாதங்களுக்கு முன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் , பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று பொது மேடையில் பேசினார். அதன் பிறகு சில மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார்கள். இதை ஸ்டாலின் அவ்வளவாக ரசிக்கவில்லை. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் பெயரில் எனக்கு அமைச்சர் பதவியில் விருப்பமில்லை நான் சினிமாவில் நடிக்க விரும்புகிறேன். தீர்மானம் எல்லாம் நிறைவேற்ற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியானது. ஸ்டாலினை பொருத்தவரை பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்.

மருமகன் சபரீசன் முடிவும் அதுதான். ஆனால், திருமதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று உறுதியாக இருந்தார். முதலில் மருமகன் சபரீசனை சம்மதிக்க வைத்தார். அதன் பிறகு கணவரின் சம்மதம் சுலபமாக நிறைவேறியது. பதவி ஏற்புக்கான நாள் நேரம் எல்லாம் திருமதி ஸ்டாலின் முடிவு செய்தது.

டிசம்பர் 14 உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக என்ற தகவல் முதலில் அன்பில்மகேஷ், பொய்யாமொழிக்கு தான் தெரிந்தது. அவர்தான் தனது ஓட்டை வாயால் எல்லோருக்கும் சொல்லி ஊடகங்களிலும் வெளிவந்தது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் என்று முடிவு செய்துவிட்ட பிறகு சில அமைச்சர்களின் இலாக்காக்களையும் மாற்ற முதல்வர் முடிவு செய்தார். ஏற்கனவே ஐ.பெரியசாமிக்கு தந்த வாக்குறுதி படி அவரை கூட்டுறவுத் துறையில் இருந்து ஊரகத் துறைக்கு மாற்ற முடிவு செய்தார். வளம் கொழிக்கும் சென்னை பெருநகர குழுமம் துறையை முத்துசாமியிடமிருந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு மாற்றம் இப்படி சின்ன சின்ன மாற்றங்களை செய்தார்.

உதயநிதி ஸ்டாலின் விஷயத்துக்கு வருவோம். உதயநிதி ஸ்டாலின் மீது சொல்லப்படும் வாரிசு அரசியல் என்ற விமர்சனம் எடுபடாது எல்லா அரசியல் கட்சித் தலைவர்களில் வாரிசுகளையும் அவர்கள் ஐடி கம்பெனியில் சேரவோ தாலுகா ஆபிஸ் சேரவோ அனுப்பவில்லை அவர்களையும் அரசியலில் தான் கோர்த்து விடுகிறார்கள். இது டாக்டர் ராமதாஸ் முதல் ஓபிஎஸ் திருநாவுக்கரசர் திராவிட கழக தலைவர் வீரமணி என்று சொல்லிக் கொண்டே போகலாம். அதேசமயம் உதயநிதி ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் என்ன தொடர்பு அவர் இந்த கட்சிக்கு செய்த தியாகம் என்ன இந்த விஷயத்துக்கு வருவோம்.

அவரது தாத்தா அவரது அப்பா அரசியல் பின்புலம் பற்றி பார்த்தோம் என்று ஆனால், சரியோ தவறோ கருணாநிதி ஒரு அரசியல் சாணக்கியர் அவர் ஒரு தலைவர் திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் அவருக்கும் ஒரு பங்கு உண்டு என்பது வரலாறு. நிறைய போராட்டங்கள் நிறைய எதிர்ப்புகளை சமாளித்து அவர் தன்னை முன்னிறுத்துக் கொண்டார். எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை அவரால் ஆட்சியில் அமர முடியவில்லை. ஆனாலும் திமுகவை கட்டுக்கோப்பாக தனது கட்டுக்குள் உயிரோட்டமாகத்தான் வைத்திருந்தார். அவருக்குப் பின் அந்த இடம் காலியாகத்தான் இருக்கிறது. அதை யாராலும் நிரப்ப முடியாது. ஸ்டாலினை பொருத்தவரை அவர் அவசரப்பட மாட்டார் இளைஞர் அணி சட்டமன்றத் தேர்தலில் தோல்வி பிறகு கொஞ்ச காலம் மேயர் பிறகு சட்டமன்ற உறுப்பினர் ஆளுங்கட்சி அப்போது கூட கருணாநிதி அவரை உடனே அமைச்சராக ஆக்கவில்லை. 1989இல் சட்டமன்ற உறுப்பினரான ஸ்டாலின் 2006இல் தான் அமைச்சரானார். அதன் பிறகு ஒரு ஆண்டு கழித்து அவர் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். அது கூட அவரது குடும்பத்தில் தரப்பட்ட அழுத்தம் தான் கருணாநிதியை சம்மதிக்க வைத்தது.

உதயநிதி ஸ்டாலின் விஷயத்துக்கு வருவோம் 2019இல் பாராளுமன்றத் தேர்தலில் உதயநிதி பிரச்சாரம் அப்போது அவர்சினிமா பிரபலம் என்பதால் பிரச்சாரத்திற்கு பயன்படுவார் என்று சொல்லப்பட்டது. உதயநிதி பிரச்சாரம் நன்றாக எடுபட்டது என்பதும் உண்மை. அதன் பிறகு மெல்ல அவருக்கு கட்சி பிரமுகர்கள் முக்கியத்துவம்தர தொடங்கினார்கள். சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இதுவும் எதிர்பார்க்கப்பட்டது தான் சட்டமன்றத் தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். வாக்கு எண்ணிக்கை அன்று திமுக முன்னிலை, உதயநிதி ஸ்டாலின் முன்னிலை என்று அறிவிக்கப்பட்ட போது உதயநிதி ஸ்டாலின் தான் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்ற பேச்சும் வரத் தொடங்கியது. திமுக ஆட்சிக்கு வர காரணம் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரமும் ஒரு காரணம் என்று மூத்த தலைவர்களே சொல்ல தொடங்கினார்கள். அதை ஸ்டாலின் குடும்பம் ரசித்தது.

அமைச்சரவை பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இல்லை உதயநிதி ஸ்டாலினை உடனே அமைச்சராக்க வேண்டாம் என்று ஸ்டாலின் முடிவு செய்தது தான் காரணம். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இல்லாவிட்டாலும் அமைச்சர்கள் நடுவே அவர் செல்வாக்கு உயர்ந்திருந்தது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இல்லாவிட்டாலும் அவர் சொல்வதை அமைச்சர்கள் செய்யத்தான் போகிறார்கள் அப்புறம் ஏன் அமைச்சர் பதவி இளைஞர் பொறுப்பாளர் பதவி என்ற கேள்வி எல்லாம் எழக்கூடும். ஸ்டாலினின் அரசியல் வாரிசு உதயநிதி ஸ்டாலின் என்று அடையாளம் காட்டப்பட இளைஞர் அணி பதவி அமைச்சர் பதவி எல்லாம் தேவைப்படுகிறது. கருணாநிதி ஸ்டாலின் தான் தனது அரசியல் வாரிசு என்று அறிவிக்கவில்லை அப்போது மு.க.அழகிரி, கனிமொழி ஆகியோரும் தீவிர அரசியலில் இருந்தார்கள். கருணாநிதி உடல்நிலை சரியில்லாத நேரத்தில் கட்சியை மெல்லதன் கட்டுக்குள் கொண்டு பொதுக்குழுவைக் கூட்டி தன்னை இடைக்கால தலைவராக அறிவிக்க வைத்தார். இந்த சங்கடங்கள் எல்லாம் உதயநிதிக்கு இருக்கக் கூடாது என்பதில் ஸ்டாலின் குடும்பம் உறுதியாக இருக்கிறது. அதற்கான சூழலை ஸ்டாலின் ஏற்படுத்தி விட்டார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உதயநிதி ஸ்டாலின் எப்போதோ துணை முதல்வராக இருந்திருக்க வேண்டும். இதுவே ரொம்பவும் லேட் என்கிறார் அமைச்சர் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலினை உட்கார வைத்து கையெழுத்து போட வைக்க எல்லா மூத்த அமைச்சர்களும் ஆஜர். இப்போது கிட்டத்தட்ட ஸ்டாலின் அடுத்து உதயநிதி என்ற நேர்கோட்டுக்கு திமுக அரசியல் வந்துவிட்டது இப்போதே மூத்த அமைச்சர்கள் உதயநிதி புகழ் பாட ஆரம்பித்து விட்டார்கள்.

உதயநிதி பிறந்தநாள் கிட்டத்தட்ட கருணாநிதி பிறந்தநாள் மாதிரி கொண்டாடப்படுகிறது இன்றும் பல மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று முரசொலியில் 71 பக்க விளம்பரம் உதயநிதி பிறந்த நாள் விளம்பரங்கள். ஸ்டாலின் பிறந்தநாளை கூட அவ்வளவு விமர்சையாக கொண்டாடி இருப்பார்களா என்பது சந்தேகம். டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஏழு பக்கம் விளம்பரம் அதுவும் உதயநிதி புகழ் பாடி கட்டுரையோடு. இவை எல்லாமே திட்டமிடல் தான்.அதேசமயம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்ற அன்று முரசொலியில் ஒரு விளம்பரம் கூட இல்லை இதுவும் திட்டமிடல் தான் உதயநிதி ஸ்டாலின் முரசொலி ஆசிரியர்.உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற மறுநாள் முரசொலியில் உதயநிதியே வருக என்று தலையங்கம்.இப்படி யோசித்து யோசித்து உதயநிதி வருங்கால வாரிசாக செதுக்கப்படுகிறார்.

திமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆருக்கு பிறகு எந்த தலைவருக்கும் வாக்கு வங்கி கிடையாது கருணாநிதிக்கும் சேர்த்துதான் கருணாநிதியே பலமுறை எனக்கு கூட்டம் வரும். ஆனால், அவையெல்லாம் வாக்காக மாறாது என்று பேசி இருக்கிறார் திமுகவின் வெற்றி கூட்டணி அது வலுவான கூட்டணி உதயசூரியன் தொண்டர்கள் கட்டமைப்பு இதுதான் இதேபோல் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் இவர்களுக்கும் வாக்கு வங்கி எல்லாம் எதுவும் இல்லை

ஸ்டாலின் சில சமயம் கோபப்படுவார் ஆனால் உதயநிதி ஸ்டாலின் சிரித்தபடியே பதில் சொல்லி சமாளிப்பார் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் திருவல்லிக்கேணி தொகுதியை உதயநிதி ஸ்டாலின் நன்கு கவனித்து வருகிறார் வாரிசு அரசியல் விமர்சனம் பற்றிய கேள்விக்கு எனது செயல்பாடு தான் பதில் என்று உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார் பார்ப்போம்.