தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா- லைட் பாய்

கறார் டாப்ஸி

20221115214429697.jpg

எனது அனுமதி இல்லாமல் போட்டோ எடுப்பதை நான் விரும்பவில்லை. கார் ஜன்னலில் மறைத்து வைத்து நான் நடந்து செல்லும் போது வீடியோ எடுப்பது எந்த வகை நியாயம் என்பது எனக்குப் புரியவில்லை. பல்வேறு இடங்களில் மோசமான சம்பவங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. பொறுமைக்கும் எல்லை உண்டு என்று சொல்கிறார் டாப்ஸி.

முதலில் நோ சொன்னார்.

20221115214659857.jpg

கட்டா குஸ்திவிஷ்ணு, விஷால் நடித்த படம். இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா லட்சுமியை அணுகியபோது அவர் நோ சொல்லிவிட்டார் காரணம் படத்துக்காக கொஞ்சம் புஷ்டி ஆக வேண்டும் என்று இயக்குனர் சொன்னார் அதுதான் அதன் பிறகு இயக்குனர் பிரியா பவானி சங்கர் உடன் பேசியிருக்கிறார். ஆனால், அவரால் அப்படி புஷ்டியாக முயற்சி செய்து நடக்கவில்லை எனவே வேறு வழியின்றி மீண்டும் ஐஸ்வர்யா லட்சுமியை அணுகி ஒரு மாதிரி பேசி சம்மதம் வாங்கினார்கள். படம் ஓஹோ என்று போக ஐஸ்வர்யா லட்சுமிக்கும் வாழ்த்து மழை சென்னை மழை போல் கிடைக்க அடடா இந்தப் படத்துக்கு போய் நோ சொன்னோமே என்று ஃபீல் பண்ணுகிறார்.

ஜோடி எல்லாம் இல்லை

20221115215256162.jpg

துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடி எல்லாம் இல்லை மஞ்சுவாரியாரும் அஜித்தும் சேர்ந்து சில பல காட்சிகளில் நடிக்கிறார்கள் அம்புட்டு தான் என்கிறார்கள் படம் தயாரிப்புக் குழு.

ஐஸ்வர்யா ராஜேஷ்

20221115215731176.jpg

இசையமைப்பாளராக சினிமாவில் நுழைந்த ஜிவி பிரகாஷ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் எப்படியும் இவர் நடித்த படங்கள் வருடத்துக்கு நாலு, ஐந்து படம் ரிலீஸ் ஆகும். இப்போது திடீரெனஞானோதயம் வந்து மீண்டும் இசையமைப்பாளராக முயற்சிச் செய்கிறார். சமீபத்தில் பெயர் முடிவு செய்யாத படத்தில் ஜிவி பிரகாஷ் படத்துக்கான பூஜை நடந்தது. அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார் அப்போதுதான் படப்பிடிப்பு குழு இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடி ஐஸ்வர்யா ராஜேஷ் என்று அறிவித்தார்கள். தற்சமயம் ஐஸ்வர்யா ராஜேஷ் வசம் 10 படங்கள் இருக்கிறது.

ஆசைப்படுகிறார்

20221115220043977.jpg

தமிழில் பூஜாஹெக்டே நடித்த முகமூடி படம் போடவில்லை. விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இவர்தான் ஜோடி அதுவும் சொல்லிக் கொள்கிறார் போல் இல்லை. அடுத்து ராதே ஷியாம் அந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இதனால் பூஜாஹெக்டேவை பாவம் ராசி இல்லாத நடிகை என்று கதை கட்டி விடுகிறார்கள். சம்பளத்தை குறித்துக் கொண்டு தமிழில் நடிக்க தயார் என்கிறார் பூஜா. தெரிந்த தயாரிப்பாளர் உங்களிடம் இருந்தால் அவரிடம் சொல்லுங்கள்.

காசு ...பணம் ..துட்டு

20221115221212721.jpeg

பாகுபலி , பாகுபலி 2 , கேஜிஎஃப் , கேஜிஎஃப் 2 , விக்ரம் , காந்தாரா , பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் பல மொழிகளில் திரையிடப்பட்டுப் பணத்தை வாரி வழங்கியது. இந்தத் தொழில் ரகசியத்தை தெலுங்கு பட உலகம் கெட்டியாக பிடித்துக் கொண்டு விட்டது. அடுத்த வருடம் பத்து தெலுங்கு படங்கள் ரிலீஸ் அத்தனையும் பான் இந்தியா படங்களாக வெளிவர இருக்கிறது. பிரபாஸ் நடிக்கும் ஆதி புரூஷ், அல்லு அர்ஜுனா நடிக்கும் புஷ்பா 2 சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படம் இது தவிர பவன் கல்யாண் ஜூனியர் என்டிஆர் நாணியின் அடுத்த படம் எல்லாமே பன்மொழி படம் எப்படியும் சில ஆயிரம் கோடி வருமானத்துக்கு வாய்ப்பு.

கவர்ச்சி ஸ்ரேயா

20221115220505288.jpg

அம்மா ஆகிவிட்ட ஸ்ரேயாவுக்கு மீண்டும் ஹீரோயின் ஆசை வந்திருக்கிறது. இதற்காக கவர்ச்சி படம் ஆல்பம் தயாரித்து வலைதளத்திலும் முக்கிய தயாரிப்பாளர்களுக்கும் அனுப்பி இருக்கிறார் தயாரிப்பாளர்களும் இப்போது யோசிக்கிறார்கள்.

இப்ப சொல்லுங்க

நடிகர் விஜய் சேதுபதி தமிழ், இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர்களும் இவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்திய இவரது படங்களில் இவர் கொஞ்சம் வெயிட் போட்டு இருப்பதாக விமர்சனங்கள் வந்தது உடனே வெயிட் குறைக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கி வெயிட் குறைக்கவும் செய்திருக்கிறார். இப்போது புதிய படத்தைத் வலைதளத்தில் பதிவு செய்து, இப்ப சொல்லுங்க என்கிறார் விஜய் சேதுபதி.