தொடர்கள்
Other
மீண்டு வா பாரதி மீண்டும் வா! - காரை.சீனி.சௌரிராஜன்,

20221116132527313.jpeg

பாப்பா பாட்டு

பாடிய பாரதியை

பறங்கிய மனிதனை

சாடிய பாரதியின்

140வது பிறந்த தினம்

எட்டயபுரம் அவரின் பிறந்த புண்ணிய பூமி

இலக்குமி அம்மை அவனை ஆக்கிய தெய்வத்தாய்

கவிஞன் என்பவன் பொய்யே சொல்பவன்

உண்மையை சொல்லி உலகை வென்ற ஒரே கவிஞன் பாரதி என்பேன்

அவன் கனவில் கூட காதலே கொண்டான்

அவன் காதல் தேவதை நம் இந்திய தாய் தான்

தன் தலைமுடியில் கூட வெள்ளையனை காண விரும்பாததாலோ என்னவோ

இளமையிலேயே கருகிப்போனது அந்த இளமை கவி

மகா கவியின் 141 வது ஆண்டு பிறந்த தினத்தில் [ 11.12.2022 ] காரை சீனி சௌரிராஜன் அவர்களின் கவி வாழ்த்து

ஆடியும் பள்ளு பாடியும் கனவில் நீ
தேடிய சுதந்திர பாரதம் காண
மீண்டு வா பாரதி மீண்டும் வா!

ஆலையும் கல்விச் சாலையும் இங்கு நாட்டிட
சாலையில் நீ அன்று பாடிய காட்சி பலித்ததைக் காண
மீண்டு வா பாரதி மீண்டும் வா!

வங்கத்து ஓடிவரும் நீரின் மிகையை நம் தென்
அங்கத்தில் பாய்ச்சிடும் நின் கனவை நிஜமாக்கிட
மீண்டு வா பாரதி மீண்டும் வா!

ஆங்கில பேய்தனை அன்று விரட்டிய கவியால்
ஆங்கில மோக பேய்களை ஓட்டிட இன்று
மீண்டு வா பாரதி மீண்டும் வா!

சிந்தனை ஒன்றுடையாள் என நீ வந்தனை செய்ததை
நிந்தனை செய்திடும் மந்தை மனிதரை மாற்றிட இங்கு
மீண்டு வா பாரதி மீண்டும் வா!

மாசிலா காஞ்சி தமிழ்ப் புலவர் பேசும் உரைதனை
காசிச் தமிழ் சங்கமத்தில் இன்று கேட்டு மகிழ்ந்திடவே
மீண்டு வா பாரதி மீண்டும் வா!

கனவை நினைவாக மாற்றிடும் வித்தையை
உணவில் உணர்வில் எங்கட்கு ஊட்டிட இன்று
மீண்டு வா பாரதி மீண்டும் வா!