தொடர்கள்
தொடர்கள்
கருத்து கதிர்வேலன்

20220630080509933.jpeg

மக்களுக்காக கண்ணகி போல் நியாயம் கேட்டு வருவேன் பிரேமலதா விஜயகாந்த்!

வன்முறையா பேசுகிறீர்கள் என்று வழக்குப் போடப் போறாங்கஜாக்கிரதையாக பேசுங்க.

ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு எடப்பாடி பழனிச்சாமி!

நீங்க யாரையோ திட்டுறீங்க தெரியுது அது மோடியா ஸ்டாலின் ஆன என்று தெரியவில்லை.

அண்ணாமலை உட்பட 1800 பேர் மீது வழக்கு!

என்னது 1800 பேரா அப்போ தமிழ்நாட்டில் பி ஜே பி உள்ள வந்துடுச்சா.

செல்போன் நகை திருடிய புகார் இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் !

காவல்துறை உங்கள் நண்பன் சொன்னாங்க.

ஓட்டு போட்ட மக்களுக்கு பம்பர் பரிசு பஸ் கட்டண உயர்வு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

பஸ் கட்டணம் பம்பர் பரிசு என்றால் தயிர் விலை உயர்வு சூப்பர் பம்பர் பரிசா.

டேவிட்சன் தேவாசீர்வாதம் நேர்மையான அதிகாரி உயர் நீதிமன்ற நீதிபதி!

கூடவே அண்ணாமலை ஜனநாயக காவலர் என்று சொல்றீங்க ஒரே குழப்பமா இருக்கு கனம் நீதிபதி அவர்களே.

தமிழக பாரதிய ஜனதா தலைவர் ஒரு ஊசி வெடி மாதிரி கே எஸ் அழகிரி!

பார்த்து பேசுங்க ஜட்ஜ் அய்யா அப்புறம் கோபித்துக் கொள்வார்.

மாணவி உயிரிழப்பு ஏராளமான கேள்விகள் மார்க்சிஸ்ட் கட்சி!

விட்டா முதல்வர் பரீட்சை எழுதணும் சொல்வீங்க போல தெரியுது.

அதிமுகவை ஸ்டாலினால் அழிக்க முடியாது எடப்பாடி பழனிச்சாமி!

அதெல்லாம் உங்களால்தான் முடியும் அவருக்கு இதில் சர்வீஸ் கிடையாது.

அமலாக்கத் துறைக்கு கைது செய்யும் அதிகாரம் உள்ளது உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

அப்ப இனிமே கூப்பிட்டு விசாரணை எல்லாம் கிடையாது ஸ்ட்ரைட்டா கைது தான்.

இந்தித் திணிப்பு என்று கூறி ஏமாற்றுகிறார்கள் தமிழிசை சௌந்தரராஜன்!

இதெல்லாம் கூட ஆளுநர் அதிகாரத்தில் வருதா.

குடியரசுத் தலைவருக்கு கி.வீரமணி வாழ்த்து

கூடவே இந்த சமூகநீதி வீராங்கனை பட்டத்தை அனுப்பி வையுங்கள்.

பிரதமர் வருகையை ஒட்டி பலூன்கள் பறக்க தடை!

ஆளுங்கட்சியாக இருந்தா இப்படித்தான்.