பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளி காரணமாக ஒத்திவைப்பு முடக்கம் என்ற நிலையில் தான் இருக்கிறது. இதுவரை மாநிலங்களவை மக்களவை இரண்டிலும் சேர்த்து 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தற்காலிக நீக்கம் ரத்து செய்யப்பட வேண்டும். விலைவாசி பற்றிய விவாதத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு 50 மணி நேர தர்ணாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அடுத்த வாரம் விலைவாசி பிரச்சினை பற்றி விவாதம் நடத்தப்படும் என்று சொல்லி இருக்கிறார். மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா அவையை அமைதியாக நடத்த விடுங்கள். மக்கள் நம்மிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். விலைவாசி உயர்வு உணவு பொருட்கள் மீது ஜிஎஸ்டி ஒத்திவைப்பு தீர்மானம் தந்திருக்கிறார்கள் . ஆனால் அதற்கு இதுவரை அனுமதி தரவில்லை.இதன் நடுவே பாராளுமன்றத்தில் நடந்த அமளியின் போது சோனியா காந்தி ரமாதேவி என்ற பாரதிய ஜனதா உறுப்பினர் உடன் பேசிக்கொண்டிருந்தார்.
சோனியா காந்தியின் வழியை மறித்துக் கொண்டு நின்றிருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சோனியா காந்தியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருக்கிறார். இதை அங்கிருந்த எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சோனியா காந்தி நான் உங்களிடம் பேச வில்லை என்று சொல்லியவுடன் இன்னும் ஆவேசமாக என்னை யார் என்று கேட்கிறீர்கள். என்னை உங்களுக்கு தெரியாதா என்று இன்னும் ஆவேசமாக பேசி இருக்கிறார். இதையெல்லாம் விவரித்து காங்கிரஸ் கட்சி அனுப்பிய செய்தி குறிப்பில் சோனியா காந்தியை தரக்குறைவாக பேசிய ஸ்மிருதி ராணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது.
ஒரு மூத்த காங்கிரஸ் தலைவரை ஒரு கட்சியின் தலைவரை ஒரு மத்திய அமைச்சர் இப்படி தரக்குறைவாக விமர்சிக்கலாமா என்று கேட்டு இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் வாய் தவறி சொன்ன ஒரு வார்த்தை தான். காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதுரி மத்திய அரசை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி விட்டு புறப்படும் போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் எங்கு போகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அவர் ராஷ்டிரபதி பவன் என்பதற்கு பதிலாகவாய் தவறி ராஷ்ட்ர பத்தினி என்று சொல்லிவிட்டார் இதை வலுவாகப் பிடித்துக் கொண்ட பாரதிய ஜனதா குடியரசுத் தலைவரை அவமானப்படுத்தி விட்டார்.
இதற்காக ரஞ்சன் சவுத்ரி மற்றும் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் பிரச்சனை செய்தது. இதுதொடர்பாக ரஞ்சன் சவுத்ரி நான் வாய்தவறி தவறுதலாக சொல்லிவிட்டேன். இதற்காக நான் ஜனாதிபதியை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன் என்றார் இதைவைத்து சோனியா காந்தி மன்னிப்பு கேட்டு விட்டார் என்று சொல்லி பிரச்சனையை முடித்தார். ஆனால் பாரதிய ஜனதா இப்போது சோனியா காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரச்சனையை பெரிது படுத்த பார்க்கிறது.
பிரதமர் படம் எங்கே?
செஸ் விளம்பரம் போஸ்டர்களில் முதல்வர் படம் இருந்தது ஆனால் பிரதமர் படம் இல்லை இது ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியது. செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியா நடத்துகிறது தமிழ்நாடு விருந்தினர்களை உபசரிக்கும் ஒரு மாநிலம் அவ்வளவுதான் என்பது பாரதிய ஜனதா செஸ் ஒலிம்பியாட் போட்டி பொருத்தவரை எல்லாவற்றுக்கும் மத்திய அரசு ஒப்புதல் அவசியம்அப்படி இருக்கும் போதுபிரதமர் படம் ஏன் விளம்பர சுவரொட்டியில் இல்லை என்பது அவர்கள் கேள்வி. இது பற்றிய பொது நல வழக்கில் தமிழக அரசு இந்த சுவரொட்டி தயாரிக்கும் போது நிகழ்ச்சி நிரலுக்கு பிரதமர் ஒப்புதல் கடிதம் வரவில்லை. ஒப்புதல் கடிதம் வந்த பிறகுதரப்பட்ட பத்திரிகை விளம்பரங்களில் பிரதமர் படம் இருக்கிறது என்று சுட்டிக் காட்டியது.
ஆனால் இதை தலைமை நீதிபதி அமர்வுஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு வரலாற்று நிகழ்வுபாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதுஇந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் கருதிபிரதமர் கலந்து கொள்கிறார் . எனவே விளம்பரங்களில் பிரதமர் ஜனாதிபதி படம் அவசியம் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதன் நடுவே பாரதிய ஜனதா ஸ்டாலின் படம் உள்ள சுவரொட்டியில் பிரதமர் படத்தை சில இடங்களில் ஒட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். இதைத் தொடர்ந்து பெரியார் திராவிட கழகம் மோடி படத்தை கிழித்தது தார் பூசி மறைத்தது. இதைத் தொடர்ந்து சில பெரியார் திராவிட கழக தொண்டர்களை போலீஸ் விசாரித்து வழக்கு பதிவு செய்தது. ஆனால் பாரதிய ஜனதா தொண்டர்கள் மீது எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. இதைக் குறிப்பிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பாரதிய ஜனதாவை பார்த்து ஏன் காவல்துறை ஏன் பயப்படுகிறது என்று கேட்கிறார்.
Leave a comment
Upload