தொடர்கள்
அரசியல்
செஸ் ஒலிம்பியாட் திருவிழா - ஹைலைட்ஸ் - விகடகவியார்.

2022063008254125.jpeg

செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடக்க இருந்தது. கொரோனோ நோய்த்தொற்று காரணமாக அவர்கள் நடத்த முடியாது என்று சொல்ல செஸ் கூட்டமைப்பு இந்தியாவை அணுக இந்தியா அதற்கு ஒப்புக்கொண்டு தமிழ்நாட்டில் மகாபலிபுரத்தில் நடத்துவது என்று முடிவு செய்தது. ஏற்கனவே சீன அதிபர் பிரதமர் சந்திப்பு மகாபலிபுரத்தில் நடந்தது எனவே உலகத்தில் உள்ள அனைத்துசெஸ் போட்டியாளர்களும் கலந்து கொள்ளும் செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை போட்டி ஏற்பாடுகளை 4 மாத அவகாசத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடி பார்வையில் ஏற்பாடுகள் நடந்தது எல்லோரும் பாராட்டும் படி ஏற்பாடுகள் பார்த்து பார்த்து கவனித்து செய்தது தமிழக அரசு.

பிரதமர் மோடிக்கு சதுரங்காட்டம் ரொம்பவும் பிடிக்கும்.

20220630082605164.jpeg

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பேசும்போது பிரதமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டார். சதுரங்கம் அன்று அரசர்களின் விளையாட்டு என்று சொல்லப்பட்டது. இன்று மக்கள் விளையாட்டாக மாறிவிட்டது. இது அதிர்ஷ்ட விளையாட்டு அல்ல அறிவுத் திறனை வெளிப்படுத்தும் விளையாட்டு.போர் மரபிற்கும் தமிழரின் தொடர்பை சதுரங்கம் நமக்கு காட்டுகிறது. ஆனைகுப்பு என்ற பெயர் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. ஆனைகுப்பு ஆடுவதைப் போல என்று 4000 திவ்விய பிரபந்தம் சொல்கிறது. அந்த அளவிற்கு பல்லாயிரம் ஆண்டுகளாக சதுரங்கத்திற்கும் தமிழகத்திற்கும் தொடர்பு இருக்கிறது.

4000 திவ்விய பிரபந்தம் போன்றவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி இது ஆன்மீக அரசு மறைமுகமாக ஆசிரியர் கி.வீரமணிக்கு உணர்த்தினார். இதேபோல் ஒன்றிய அரசு ஒன்றிய பிரதமர் என்று சொல்லும் முதல்வர் இந்திய பிரதமர் என்றுகுறிப்பிட்டார். அதே சமயம் மத்திய அமைச்சர்களை ஒன்றிய அமைச்சர் என்றே குறிப்பிட்டார்.

என்ஜாய் எஞ்சாமி

20220630082833784.jpg

செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் பாடகி தீ என்ஜாய் எஞ்சாமிபாடலைப் பாடி அசத்தினார். தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. அதில் தான் என்ஜாய் பாட்டு பாடப்பட்டது. பாடகி தீ மற்றும் நாட்டுப்புற பாடகி மாரியம்மாள் இருவரும் சேர்ந்து பாடி கூட்டத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்கள்.இந்தப் பாடல் இதுவரை யூடியூப் சேனலில் 42 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் கலைஞர்கள் இருந்த அரங்கத்தில் இந்த பாட்டு எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது. இந்தப் பாடலை பாடலாசிரியர் அறிவு எழுத சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில்இருந்து எட்டு பேர்

20220630082954908.jpg

சென்னையில் நடைபெறும் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த எட்டு பேர் களத்தில் இருக்கிறார்கள். நம் இந்தியா ஓபன் பிரிவில் மூன்று அணிகளையும் பெண்கள் பிரிவில் மூன்று அணிகளையும் போட்டியில் கலந்து கொள்ள வைத்திருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா அவரது சகோதரி வைசாலி அதிபன் பாஸ்கரன் கிருஷ்ணன், எல்.நாராயணன் , குகேஷ் கார்த்திகேயன் ,முரளி சேதுராம் 8 தமிழர்கள் கோதாவில் இறங்கி இருக்கிறார்கள்.

இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

20220630083050841.jpg

இந்தியாவின் ஏ அணி மற்றும் பி அணி வெற்றி வாய்ப்புபிரகாசமாக இருப்பதாக உலகச் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் சொல்கிறார். 5 வயதிலிருந்து செஸ் பயிற்சியில் ஈடுபட்டுவரும் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா ஏழு வயதில் உலகச் சாம்பியன் பட்டத்தை 2013இல்8 வயதுக்கான போட்டியில் சாம்பியன், 2015இல் பத்து வயதுக்கான போட்டியில் தொடர் வெற்றியில் இளம் சாம்பியன் பட்டத்தைப் பிரக்ஞானந்தா. 2016இல் யங் இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம், 2017இல் இத்தாலியில் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் வெற்றி, 2018இல் கிராண்ட் மாஸ்டர் இதன் மூலம் உலகிலேயே மிகக்குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற இரண்டாவது வீரர் பிரக்ஞானந்தா என்ற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது.

யார் இந்த பிரக்ஞானந்தா என்று உலக நாடுகளையே பேச வைத்திருக்கிறார். தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அவர் கலந்து கொள்கிறார். எனவே அனைவரது கவனமும்அவரை நோக்கியே இருக்கிறது. அவருடன் விளையாடும் போது எதிர் போட்டியாளர் ரொம்பவும் கவனத்துடன் விளையாட வேண்டும். எளிதில் அவரை தோற்கடிக்க முடியாது. இந்தியபோட்டியாளர்கள் மிகவும் சவாலான போட்டியாளர்கள் தான் என்கிறார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு.

20220630083213769.jpg

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகளின் கொடி அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பில் நாடுகள் பெயர் பொறித்த பதாகைகளை ஏந்திக் கொண்டு அந்த நாட்டு வீரர்களை வழிநடத்தி சென்றவர்கள் தமிழக அரசு பள்ளி மாணவர்கள். இவர்கள் அனைவரும் மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் 186 நாடுகள் 186 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இந்த பெருமையான வாய்ப்பு கிடைத்தது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது பிரபல தொகுப்பாளர் பாவனா. ஆரம்பத்தில் ஆர்ஜேவாக அறிமுகமாகிய பாவனா பிறகு விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். இவரது தெளிவான உச்சரிப்பு எல்லோரின் பாராட்டையும் பெற்றது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டி வர்ணனையாளராக இருந்துவரும் பாவனா இப்போது முதல்முறையாக அரசு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறப்பாக தொகுத்து வழங்கி பிரதமர் முதல்வர் என்று எல்லோருடைய பாராட்டுக்கும் சொந்தக்காரர் ஆனார் பாவனா.

தமிழ்நாடு இந்தியாவின் சதுரங்க கோட்டை

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசும்போது வழக்கப்படி திருக்குறள் எல்லாம் சொல்லி குறுகிய காலத்தில் தரப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி ஏற்பாடுகளை பிரமாதமாக செய்துவிட்டது. தமிழக அரசு என்று முதல்வரை பார்த்தபடி பாராட்டினார். கூடவே திருப்புவலூரில் சதுரங்க வல்லபநாதர் கோயில் உள்ளது. இளவரசியுடன் சிவபெருமான் சதுரங்க ஆட்டம் ஆடினார் என்று வரலாற்று குறிப்புகளும் சொல்லி இதன் மூலம் சதுரங்கத்தின் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு நிரூபணமாகிறது. அதனால் தான் தமிழ்நாடு இந்தியாவின் சதுரங்க கோட்டையாக இருக்கிறது என்றும் பாராட்டினார் பிரதமர் மோடி.

திமுக எப்போதும் ஒன்றிய அரசு ஒன்றிய பிரதமர் என்று சொல்வதுதான் வழக்கம். ஆனால் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது முதல்வர் ஸ்டாலின் பாரத பிரதமர் மோடி என்று குறிப்பிட்டார் அதே சமயம் மத்திய அமைச்சர்களை ஒன்றிய அமைச்சர் என்று சொன்னார்.

அமைச்சர் முருகன் புதிய ஜனாதிபதி தேர்வின் மூலம் சமூகநீதிக் காவலர் மோடி என்பது நிரூபணமாகிவிட்டது என்று அரசியல் பேசினார்.

அசத்தல் உபசரிப்பு

20220630083301433.jpg

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை பார்த்துவிட்டு சர்வதேச வீரர் கிராண்ட் மாஸ்டர் ஒருவர் பிரமாதம் என்று புகழ்ந்து தள்ளினார். வெளிநாட்டிலிருந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு வரவேற்பு உபசரிப்பு தங்க வைக்க ஏற்பாடு என்று தனித்தனி குழுக்கள் அவர்களை கவனித்துக் கொள்கிறது. ஒரு வீரர் தனது ட்விட்டர் பதிவில் இப்போதுதான் சென்னை வந்தேன் புகார் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்று தேடினேன் ஏமாந்து போனேன். அன்பான உபசரிப்பு உடனடி கவனிப்பு என்று இருப்பது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

3500 உணவு வகைகள் எழுபத்தி ஏழு மெனு கார்டு

20220630083403285.jpg

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்கள் விரும்பும் உணவை தர முடிவு செய்து யோசித்து யோசித்து ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். 3500 வகை உணவுகள் எழுபத்தி ஏழு மெனு கார்டு. வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் நாட்டு உணவுடன் இந்திய உணவு வகைகளில் விதவிதமாக தயாரித்து அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். முதல் நாள் சாப்பிட்ட உணவு மறுநாள் இருக்காது ஒவ்வொரு நாள் விதவிதமாக புதிய புதிய உணவு வகைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். காலை உணவு மதியம் உணவு இரவு உணவு தேநீர் ஜூஸ் வகைகள் தயாரிக்க சிறந்த சமையல் கலைஞர்களை ஈடுபடுத்தி இருக்கிறார்கள். முன்னோடி சமையல் கலைஞரான சென்னையைச் சேர்ந்த 75 வயது ஜி என் தல்வார் மேற்பார்வையில் இந்த விருந்து உபசரிப்பு நடக்கிறது.

அண்ணாவின் தம்பி

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட் ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் நடக்கிறது இருபத்தி எட்டாம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை போட்டிகள் நடக்கும் 187 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. இந்த போட்டி பற்றிய விழிப்புணர்வு ஏற்பாடுகளை பல விதங்களில் மக்களுக்கு கொண்டு சென்றது தமிழக அரசு.அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது தம்பி சிலை சென்னை உள்பட வேறு முக்கிய நிகழ்வுகளில் தம்பி சிலை மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரபலப்படுத்தியது தமிழக அரசு பல இடங்களில் தம்பி சிலையுடன் செல்பி பாயிண்டுகளை உருவாக்கி வைத்திருந்தது. இவற்றையெல்லாம் மக்கள் பெரிதும் ரசித்தார்கள். அண்ணா தனது கட்சி தொண்டர்களை தம்பி என்றுதான் அழைப்பார் அந்த தம்பி தான் இந்த தம்பி தயாரிப்பு.

வேண்டாம் திரும்பி விடுங்கள்

20220630083522880.jpg

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள பாகிஸ்தானை சேர்ந்த 19 வீரர்கள் முந்தைய தினம் பூனாவில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தார்கள். அவர்களை தமிழக அரசு சிறப்பான முறையில் வரவேற்பு அளித்து அவர்களை சிறுசேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைத்தனர். ஆனால் திடீரென அவர்கள் நாங்கள் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லிவிட்டு பூனா வழியாக பாகிஸ்தான் திரும்பிவிட்டார்கள். திடீரென கலந்து கொள்ளாமல் திரும்பிப் போனதற்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் காரணத்தை தெரிவித்திருக்கிறது. ஒலிம்பியாட் ஜோதி இந்தியாவின் பல நகரங்களில் சுற்றிவந்து சென்னை வந்தடைந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதி காஷ்மீர் நகரத்திலும் வலம் வந்தது. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமான பகுதியாம். அவர்கள் அனுமதி இல்லாமல் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கொண்டு வந்ததை கண்டித்து இந்த போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பாகிஸ்தான் இப்படித்தான் தேவையில்லாமல் பிரச்சனை செய்து எல்லாப் போட்டிகளிலும் கலந்துக் கொள்ளாமல் ஓடி விடுகிறது. பாகிஸ்தான் வீரர்கள் திரும்பிப் போய் இருக்க கூடாது. ஒரு போட்டியிலாவது கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.