தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

2022050409262455.jpeg

Heading : அண்ணாமலை புதிய எம்ஜிஆர்? ! -ஜாசன் மூத்த பத்திரிகையாளர்.

Comment : அண்ணாமலை அரசியல் சார்ந்த பேச்சு அருமை. அதனால் அவர் எம் ஜி ஆர் ஆகி விட முடியாது. எம் ஜி ஆர் அரசியலுக்கு வந்த சூழ் நிலையும் தனிக் கட்சி ஆரம்பித்த காலகட்டமும் வேறு. அவருடைய திரையுலக பிம்பமும் அவருக்கு கை கொடுத்தது. நாடோடி மன்னன் நம் நாடு ஒளிவிளக்கு விவசாயி போன்ற படங்கள் அவருடைய அசுர அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்டன.. சுருங்க சொன்னால் அவர் human re (roses ) sources. அண்ணாமலை அரசியல் முற்றிலும் அவருடைய புள்ளி விவர பேச்சையும் சமையோஜித பதிலடி கொடுப்பதில் உள்ள வல்லமையும் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி என்ற பிம்பத்தையும் அஸ்திவாரமாக கொண்டுள்ளது. என்றாலும் அரசியல் தலைவராக வளமுடன் வலம் வர வாய்ப்புள்ளது

ramakrishnan advocate, tiruchy

Heading : ஜட்டியும் மதமும் - நீலமேகம்.

Comment : அவரவர் தேவைகளுக்காக அவரவர் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்..மற்றவர்களின் தேர்வு,நமக்கு சரியான ஒன்றாக இருக்க வாய்ப்பு குறைவு....அது எதுவாக இருந்தாலும்.! பார்க்கவன்

Heading : அண்ணாமலை புதிய எம்ஜிஆர்? ! -ஜாசன் மூத்த பத்திரிகையாளர்.

Comment : இதெல்லாம் சரி. இந்த கூட்டம் ஓட்டாக மாறுமா ?? எலெக்‌ஷன் நேரத்தில் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் கும்பல் நம்ம கும்பல் !!!

kishore, pondichery

Heading : அண்ணாமலை புதிய எம்ஜிஆர்? ! -ஜாசன் மூத்த பத்திரிகையாளர்.

Comment : மக்கள் மனதை வெல்ல வேண்டும்., வாழ்த்துக்கள்...🌷🌷🌷🙏🙏🙏

சுவாமிநாதன் கணேஷ்., முகநூல் பதிலிலிருந்து.

Heading : அண்ணாமலை புதிய எம்ஜிஆர்? ! -ஜாசன் மூத்த பத்திரிகையாளர்.

Comment : ஜனநாயக நாடு, பெரும்பான்மை என்று சொல்லி பிரம்பைச் சுழற்றி, தங்கள் பைகளை நிரப்பிக்கொள்ளும் பல மாநிலத் தலைவர்கள், சாதியைச்சொல்லியே சதிசெய்யும் கூட்டம்,இவர்கள் மத்தியில் சினிமாபுகழ் வேண்டியிருக்கிறது பெரும்பான்மை பெற….

அருணாச்சலம் சுப்ரமணியன், முகநூல் பதில்

Heading : அண்ணாமலை புதிய எம்ஜிஆர்? ! -ஜாசன் மூத்த பத்திரிகையாளர்.

Comment : about Annamalai Excellent article . Very well covered, explained and clarified. 👏👏👏👏

வாசு, பெங்களூரு

Heading : அண்ணாமலை புதிய எம்ஜிஆர்? ! -ஜாசன் மூத்த பத்திரிகையாளர்.

Comment : We have to wait and see Vijaykant had so much popularity and votes finally landed in wheelchair. Similarly Ramadoss. So Annamalai has to be careful.

GKV, hong kong

Heading : “சம்ஹாரம்…!” - வெ.சுப்பிரமணியன்

Comment : அருமை. ஒரு பழைய பாரதிராஜா படம் பார்த்த உணர்வு. சபாஷ்

வேங்கடகிருஷ்ணன், சென்னை

Heading : வலையங்கம்

Comment : சுற்றறிக்கை மட்டுமே தீர்வாகாது என்ற விகடகவியின் செய் நச்! தாலுகா, பத்திரப்பதிவு, ஆர்டீஓ அலுவலகங்களில் நேரடியாக எந்த சான்றிதழையும் பொதுமக்கள் பெறமுடியாது. புரோக்கர்கள் மூலம் எவ்வளவு பணம் அதிகமாக கொடுக்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் கிடைக்கும். இங்கு வேலை செய்யும் அனைவரும் டெய்லி கலெக்ஷன் யாருக்கு அதிகம் என்பதை மட்டுமே பார்க்கின்றனர் என்பதே நிஜம்! இதில் அப்பாவி கலெக்டர் மாட்டிக் கொண்டார்.

வாணி மகாலட்சுமி, திருக்கழுக்குன்றம்

Heading : அண்ணாமலை புதிய எம்ஜிஆர்? ! -ஜாசன் மூத்த பத்திரிகையாளர்.

Comment : தமிழக பாஜக தலைவராக தமிழிசை இருந்தபோதும், பிரதமராக மோடி, அமைச்சராக பொறுப்பேற்ற பிறகுதான், தமிழகத்தில் இப்படியொரு கட்சி இருப்பது தெரியவந்தது. தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை வந்ததும் அக்கட்சி ஆக்டிவ் ஆக உள்ளது. இதனால் அண்ணாமலை புதிய எம்.ஜி.ஆராக முடியாது. திமுக, அதிமுகவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கலாம்!

சவுந்திரராஜன், ராஜகோபால், செங்கல்பட்டு

Heading : ஆன்மீக ஆசான் - 92 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

Comment : மகா பெரியவா குறித்து கவி கண்ணனின் அனுபவங்கள் அடங்கிய link கிடைக்காததால் வீடியோ பார்க்க முடியவில்லை... ஒருசில வாரங்களாக இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதை கண்டு வருத்தம் ஏற்படுகிறது.

மாயகிருஷ்ணன், தஞ்சாவூர்

Heading : நமிநந்தியடிகள் நாயனார்!! ஆரூர் சுந்தரசேகர்.

Comment : திருவாரூரில் சிவபெருமானை போற்றி வணங்கிய நமிநந்தியடிகள் நாயனாரின் வரலாறு மிக அற்புதம்.

மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை

Heading : எதில் சுவை ?- லாவண்யா மணிமுத்து

Comment : ஆவியில் வெந்த இட்லியை அசத்தல் ஆக்கும் சட்னியை மறப்பது நன்றன்று. எந்த ஒரு செயலிலும் அதன் சுவை செயலில் இல்லை. அதை செய்யத் தூண்டி அது நிறைவடைந்தவுடன் கிடைக்கும் மன நிறைவில் இருக்கிறது என்ற வரிகள் நிஜம்!

ஜமுனா பிரபாகரன், அண்ணாநகர்

Heading : “சம்ஹாரம்…!” - வெ.சுப்பிரமணியன்

Comment : பூசாரி மகளை கற்பழித்த காமப்பித்தனான ஊர் தலைவர் சண்முகத்தை, திருவிழாவில் குழுமாயி அம்மன்’ வடிவில் குட்டி குடித்து, மருளாளி சாமிக்கண்ணு ‘சம்ஹாரம்’ செய்த விதத்தை சுப்பிரமணியன் கதையில் சஸ்பென்சாக வைத்து முடிந்திருந்தது மிக அருமை!

ரேணுகா ஹரி, சாலிகிராமம்

Heading : தட்டோடு பூவைப் போட்ட முதல்வர் - மீம்ஸ் கொண்டாட்டம். வலைக்கள்ளன்.

Comment : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி ஆகிய இருவரும் ஏதாவதொரு விஷயத்தில் காமெடி பண்ணுகிறார்களா என பார்ப்பதே மீம்ஸ் போடுபவர்களுக்கு வேலையா போச்சு. நாங்க மத்தவங்க சொல்றதை கேட்டு நடக்கும்போது, இப்படி சிலது நடக்கத்தான் செய்யும் என்கின்றனர் இருவரும் கண்ணை கசக்கியபடி.

லாவண்யா கார்த்திக், அகமதாபாத்

Heading : நட்பதிகாரம் - பா அய்யாசாமி

Comment : நட்பதிகாரம், சம்ஹாரம், பட்டாம்பூச்சி பேசுது போன்ற தரமான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கவிதைகள், புதினங்கள் கொண்டு வருவதில் விகடகவி முடிசூடா மன்னராக உயர்ந்துவிட்டது. மிக்க மகிழ்ச்சி!

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்

Heading : ஆன்மிகம் தெரிந்து தெளிவோம் - 2 _சுந்தரமைந்தன்.

Comment : போன வாரம்தான் சுருட்டப்பள்ளியில் சாமி தரிசனம் செய்தேன். அங்கிருந்த தட்சிணாமூர்த்தியின் மகிமை தெரியாமல், மற்ற கடவுளை போல் வணங்கிவிட்டு வந்தேன். இதை படித்ததும் தப்பு செஞ்சிட்டோமேனு, அடுத்த வாரம் ஒருமுறை சாமி தரிசனம் செய்வதாக வேண்டிக் கொண்டேன்.

செண்பகவல்லி சிவராமன், செங்கல்பட்டு

Heading : "மும்பைச்சா பட்டாட்டா வடா" யாரிந்த யாஸின் மல்லிக் - பால்கி

Comment : ஆனந்த் ரங்கனாதனி tweet இது முஸ்லிம்கள், ஹிந்துக்களாகிய நம்மனைவரையும் அழித்து கொலையே செய்ய நினைத்தாலும், நாம் அவர்கள் மீது கோபம் கொள்ளக்கூடாது. மரணத்தை நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். இந்துக்களை கொன்று முஸ்லிம்கள் தங்கள் ஆட்சியை நிறுவினால் நாம் அனைவரும் *மலரும் புதிய இந்தியா* வில் நுழைந்திடுவோம்- மகாத்மா காந்தி யாசின் மாலிக், தன்னை காந்தியவாதி என்று சொன்னதில் ஆச்சரியமில்லை

பாரதிமைந்தன், திருவான்மியூர்

Heading : கோமல் என்கிற கோமளம் - ரேணு மிரா

Comment : ரேணு மீராவின் கதை மிக அருமை. இதேபோல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறைய பேரை பார்க்கலாம். இதில் ஒருசிலர்தான் மாறுவார்.

பத்மஜா சுகுமாரன், திருவள்ளூர்

Heading : காஞ்சி மாமரம் காய்க்கத் துவங்கியது - மாலா ஶ்ரீ

Comment : 3500 வருடங்களாக ஒரு மாமரத்தை பேணிக் காத்து விட்டு வைத்திருப்பதே பெரிய விஷயம் என்ற வரிகள் செய் நச்! ஏன்னா, இப்ப பெயரளவுக்கு மரக்கன்றுதான் பண்றாங்க. தண்ணீர் ஊற்றி வேலி போட்டு மரமாக வளர்ப்பதில்லை!

சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை

Heading : தியேட்டரில் திருமணம் - மாலா ஶ்ரீ

Comment : தியேட்டரில் திருமண நேரடி ஒளிபரப்பா? காஸ்ட்லி ஐடியா! இந்த திரைப்படத்தில் தான் சந்தோஷ் கிளைமாக்ஸ் உத்தரவாதம்னு காமெண்ட் வேற... நக்கல் ஆசாமிய்யா நீர்!

கலா கார்த்திக், வடபழனி

Heading : செஸ் வீரனுக்கு செக் வைத்த சமூகம் - மாலா ஶ்ரீ.

Comment : பதக்கங்கள் வாங்கிய செஸ் வீரனின் அவலநிலை படித்து கண்கள் கலங்கின. நம்ம ஊர்ல தான் கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் மத்தவங்களுக்கு கண் அல்ல ணு தெரியாதே... இந்த ஏழை வீரனை தமிழக முதல்வராவது கண்டு, அவன் வாழ்க்கையில் ஒளி வீசட்டும்.

சிவகாமி ராகவன், லால்குடி