ஆரோக்கியம் நம் கையில்...!! - 5 - ஆரூர் சுந்தரசேகர்
Nam Arokiam kurithana.Aarur.Sundarsekarin.katturai..melum adu kurithana .vizhyangalai ariyum. PASI.yai Thoondivittadey! R.S.Mani kudanthai.
ஆர்.எஸ். மணி, குடந்தை.
குட்டீஸின் சமையல் ஸ்பெஷல் (குட்டி ரெசிபி) - அமுதா தினகரன்
குட்டி பையன் மனோஜ் சமையல் சூப்பர். சமையல் ஸ்பெஷலிலேயே அந்த குட்டி பையன் ரொம்ப அசத்திட்டான். அவனுக்கு எனது வாழ்த்துகள்.
ஆர். சுந்தரம்
‘பிடிவாதக்காரி’... - வெ.சுப்பிரமணியன்
காதல் தோல்வியை விட நிச்சயித்த திருமணம் நின்று போவதால் ஏற்படும் ரணம் ஆழமானது. எத்தனையோ அருந்ததிகள் அந்த ஆறாத ரணத்துடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
சூரியா, சென்னை.
மாண்புமிகு மனிதர்கள்...! - ஜாசன்
மிக அருமை.. Friends and Relatives are god’s gift. Akka paati pondru uravugal amaivadhu ellaor vaazhvilum amaivadhyu kadiname!
அனு ஃபாசில், ஹாங்காங்.
சுகர் ப்ரீ பாதுகாப்பானதா..? - மாலாஸ்ரீ
எங்க ரெண்டு பேருக்கும் ஷுகர்தான். கடந்த தீபாவளி அன்னிக்கு கொஞ்சமா ஸ்வீட் செய்ய உட்கார்ந்தா... ‘நீ ஏம்மா ஸ்வீட் செய்றே? அதான் ஷுகர் ஃப்ரீ ஸ்வீட் இருக்கே!’னு வாங்கி வந்து கொடுத்தா. சாப்பிட பிடிக்கலை. நாம லிமிட்டா செஞ்சு சாப்பிடறதுதான் கரெக்ட்!
ஹேமா மணி, வியாசர்பாடி.
சமையல் யூடியூப் வீடியோக்கள்..! - ராம்
சமையல் யு-டியூப்களை பாரத்து கற்று கொண்டு இருக்கிறேன். அதேபோல், செட்டிநாடு கைப்பக்குவத்தில் ஏகம்மையின் பிஷ் 65 ரெசிபியை, வஞ்சிரம் மீனில் சமைத்து ருசித்தேன். செம டேஸ்ட்! என்ன... எங்க வீட்டுக்காரருக்கு எலும்புகூட மிஞ்சலை, பூனை தூக்கிட்டு போயிடுச்சு! ஹும்... அவருக்கு வேற தனியா சமைத்து தரணும்!
பத்மஜா ராஜகணபதி, மதுரை.
சேலம் மாநகரில் மோடி இட்லி... - மாலாஸ்ரீ
சேலம் மகேஷின் தன்னலமற்ற பொது சேவை பாராட்டுக்குரியது. ₹10-க்கு இட்லி, சாம்பார் என்பது மிகக் குறைவு. இதுவே சென்னையில் ₹50, மதுரையில் ₹30 என கூடுதல் விலை. ஆனால், ஏழைகளுக்கு சகாய விலையில் தரமாக வழங்குவதை எண்ணி பெருமையடைகிறோம்.
பார்த்திபன், சந்திரசேகரன், நாகப்பட்டினம்
வாசகர் விஷுவல்!
வாசகர் விஷுவல் படங்கள் மிக அருமை! கூடுதல் படங்களை வெளியிடலாமே!
அருண் காவ்யா, மும்பை
மடப்பள்ளி மகிமைகள்.. - 4 - ஆரூர் சுந்தரசேகர்
எந்தெந்த கோயில்களில் என்னென்ன மடப்பள்ளி பிரசாதங்கள் பிரசித்தம் என மடப்பள்ளி மகிமைகள்-4ல் மிக அழகுற விளக்கினார் சுந்தரசேகர். மிகச் சிறப்பு!
வள்ளிதாசன், கோயம்புத்தூர்
கல்யாணமாம் கல்யாணம்... – பா.அய்யாசாமி
ஐ... இந்த ஐடியா நல்லாயிருக்கே! என்னோட காதலை பொண்ணோட அப்பாகிட்ட எப்படி சொல்றதுனு தவிச்சுட்டு இருந்தேன்... உங்க கதையைப் படிச்சதும் சூப்பரான ஐடியா வந்துடுச்சு! வெற்றி கிடைக்க வாழ்த்துங்க அய்யாசாமி சார். உங்க தலைமையிலதான் கல்யாணம்!
ஜானகிராமன், வந்தவாசி
தேவையான அளவு... - பா. ராகவன்
தேவையான அளவு உப்பு பிரச்னையில் பா.ராகவன் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பார் போலும். எல்லா சமையல் பொருட்களுக்கும் ஒரு அளவீடு உள்ளது. ஆனால், கடைசியாக சுவைக்கு சேர்க்கப்படும் உப்புக்கு விரலளவே சரி! இந்தளவு காரத்துக்கு மூன்று விரலளவு உப்பிட்டால் சரியாக இருக்கும் என்பது மனக்கணக்கு. அது சாப்பிடும்போதுதான் தெரியும்!
ஜமுனா பிரபாகரன், ஊத்துக்கோட்டை
ச்சும்மா அதிருதுல்ல.. - தில்லைக்கரசி சம்பத்
ஆதிமனிதன் காலம் தொட்டு தற்கால மனிதர்கள் வரை எந்தெந்த உணவு வகைகளை எவ்விதம் சாப்பிடுவது, நவீன கால காஸ்ட்லி கிச்சன் அறைகள் எத்தனை வகை என நண்பிகள் சொன்ன விதம் பிரமிக்க வைத்தது.
ஆதிவராகவராஜன், காஞ்சிபுரம்
பாண்டியன் நினைவலைகள்… - பா. கிருஷ்ணன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் மறைவு எங்களை போன்ற தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பு. அவரது பேச்சு, செயல் , நடவடிக்கை என ஒவ்வொன்றும் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவே அமைந்திருக்கும். இனி எவர் உள்ளனர், அவரை போல் திகழ்வதற்கு?
விவேகானந்தன், பெரம்பலூர்
ஆண்கள் சமையல் போட்டி!! - ராம்.
ஹாங்காங்கில் ராமின் கைவண்ணத்தில் ஆண்கள் சமையல் போட்டி செம அசத்தல். இந்த தகவலை சென்னையை சேர்ந்த நண்பர் ஶ்ரீதரன் அனுப்பியிருந்தார். இதைப் படித்ததும் நாங்க இம்ப்ரஸ் ஆகிட்டோம். உடனே வார விடுமுறை நாட்களில் ஐடி நண்பர்கள் சேர்ந்து சமையல் போட்டிக்கு ரெடியாகிறோம். ஹாங்காங்கில் நடுவரா இருந்தவர்கள் வந்து ருசிபார்த்து தீர்வு சொல்வார்களா? இன்னொண்ணு, இதுல ஜெயிச்சுட்டா... அப்புறம் கிச்சனை நம்ம பக்கம் தள்ளிடுவாங்களோனு பயமா இருக்கு!
ராஜேஷ், சுப்பிரமணியன், வாசுதேவன், மும்பை, பெங்களூர்
வந்தார்கள்... வென்றார்கள்... - 28 - மதன்
ஆட்டம் போட்ட ஆதாம்கானைப் பார்த்ததும் ஆட போயிட்டேன். எல்லோருக்கும் ஒரு முட்டுக்கட்டை இருப்பதைப் போல், அக்பருக்கும் செவிலித் தாய் அமைந்திருக்கிறாள். இதற்கு விடிவுகாலம் பிறக்குமா?
சிக்கந்தர் பாட்சா, வாணியம்பாடி
விகடகவியார்
திமுக செய்திகளை முழுமையாகத் தரும் விகடகவியார், அதிமுக மற்றும் பாஜ தரப்பு நியூஸை கேட்டதும் நைஸாக நழுவிவிடுகிறாரே... ஒருவேளை அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களா? ராமதாஸ் வேற 23னோட சைலண்ட் ஆயிட்டார்! தேமுதிகவுக்கு அல்வாதானா?
சசிகுமார், விளவங்கோடு
சிறுநீரக நோய்களை தீர்க்கும் மூக்கிரட்டை கீரை... - மீனாசேகர்
அடடா... இந்த கீரை வீட்டை சுத்தி அதிகளவில் படர்ந்திருக்கேனு காலையிலதான் வெட்டி வீசியெறிஞ்சேன். சாயந்திரம் உட்கார்ந்து, அது முக்கிரட்டை கீரை என்பதை அறிந்து ஷாக்காயிட்டேன். இன்னும் குப்பையில் போடலை. காலையில் எடுத்து கழுவி யூஸ் பண்ணணும்!
சௌம்யா நாராயணன், திருவள்ளூர்
பழைய சாதம் குணமாக்கும் குடல் அழற்சி நோய்! – ஆர்.ராஜேஷ் கன்னா.
அக்காலத்தில் நமது தாய் மண்பானையில் வைத்திருக்கும் பழைய சாதத்தை நீர்மோர் விட்டு நன்கு பிசைந்து, தனது குடும்பத்தை ஒன்றாக அமரவைத்து ஒவ்வொரு உருண்டையாகவோ, இன்னும் நீர் விட்டு ஒரு கிளாஸ் நீராகாரமாகத் தந்தனர். இன்று அதேபோல் குடல் அழற்சி நோய்க்கு டாக்டர்கள் தரும்போது, தற்கால தலைமுறையினருக்கு அதன் சிறப்பு புரிகிறது.
ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை
குட்டீஸின் சமையல் ஸ்பெஷல் (குட்டி ரெசிபி) - அமுதா தினகரன்
குட்டீஸ் ஸ்பெஷல் இன்ஸ்டன்ட் சமையல் செம சூப்பர்! அதுவும் சாய் மனோஜ் கிருஷ்ணா மழலை மொழியில் வீடியோவில் விளக்கியதை பார்த்து, எனது மகனும் மகளும் களமிறங்கி விட்டனர். நாங்களும் விகடகவியின் ஆண்கள் சமையல் போட்டிக்கு தயாராகி வருகிறோம். எங்களை ஊக்கப்படுத்துங்க!
லாவண்யா கார்த்திக், புனே, மகாராஷ்டிரா
பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 05 - கலைமாமணி பாரதி திருமகன்
கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் நினைவலைகள் மற்றும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேய பண்பு நெகிழ வைக்கிறது. வாரா வாரம் அடுத்து என்ன வரப்போகிறது என்ற விறுவிறுப்பை கூட்டுகிறது. தொடரட்டும் பாரதியின் கைவண்ணம்!
அங்கயற்கண்ணி, விருத்தாசலம்
‘இட்லி’ க்கு வயது 700..! - ஆரூர் சுப்ரமணியன்
Healthy and harmless food always.
‘பிடிவாதக்காரி’... - வெ.சுப்பிரமணியன்
Pidivathakkari interesting to read.. Twist and turns are very entertaining.
‘பிடிவாதக்காரி’... - வெ.சுப்பிரமணியன்
மனைவியை இழந்து வாழும் கணவருக்கு கிடைக்கும் ஆதரவும், அரவணைப்பும், இந்த சமுதாயத்தில், ஏனோ கணவனை இழந்து வாழும் மனைவிக்கு கிடைப்பதில்லை என்பதே உண்மை. நிஜத்தில், பெரும்பாலும், இணையை இழந்த ஆண்களை விடவும், பெண்களே அதிக காலம் தனித்து வாழ்கிறார்கள். “அருந்ததி” பிடிவாதம் பிடித்தவளல்ல... அவள் பத்தினி.
மடப்பள்ளி மகிமைகள்.. - 1 - ஆர்.ராஜேஷ் கன்னா
மடப்பள்ளி பிரசாத மகிமைகள்-1... ஆரம்ப கட்டுரையாக வந்ந திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சர்க்கரை பொங்கல், பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்த சுவை குறித்த விவரங்கள், எங்களை மெய்மறக்க செய்து, ‘ம்ம்ம்... ச்சும்மா அதிருதுல்ல..!’ சொல்ல வைத்தது.
மாயா குப்புசாமி, வடபழனி
வலையங்கம்
டிஜிபி ராஜேஷ்தாஸ் போன்ற பல்வேறு காவல்துறை அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம், பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாலியல் தொல்லை போன்றவற்றால் தமிழக காவல்துறைக்கு தீராத களங்கம், அவப்பெயர் நிலவுகிறது.
ராதா வெங்கட், ஆலப்பாக்கம்
தேவையான அளவு... - பா. ராகவன்
சமையல் மற்றும் சாப்பாட்டு விஷயங்களை சிரிக்கச் சிரிக்க எழுதுவதில் பாராவை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. அவரது ‘ருசியியல்’ கட்டுரைகள் அட்டகாசமாக இருக்கும். இன்னும் நிறைய எழுதுங்கள் பாரா.
ரங்கப்ரியா கனேஷ், சென்னை
பேசிக்கறாங்க...
பேசிக்கிறாங்க... வில்லங்கமாதான் இருக்கு! ஒவ்வொருத்தர் டயலாக்கும் சூடேத்துதே..! ஆனால், குவார்ட்டர் கட்டிங் போட்ட மாதிரி ‘கிக்’காதான் இருக்கு!
மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை
தங்க ஜரிகையுடன் பிரியாணி... - அலமேலு கிருஷ்ணா
தங்க ஜரிகையுடன் ராயல் பிரியாணி படிக்கும்போதே நாவில் அருவி கொட்டுகிறது. ஆனால், விலையை கணக்கிட்டால் தலை சுற்றுகிறது!
பார்த்தசாரதி, மயிலாடுதுறை
வாவ் வாட்ஸப்!
வாட்ஸ் அப் படங்கள் அனைத்தும் சூப்பரா இருக்கு! அதிலும் ஸ்வீட் ஸ்விம்மர், எப்படா தருவே, எதிலும் படைப்பாளி செம டச்சிங்!
கௌஷிக், தீட்சிதா, பெங்களூர்
ஆண்கள் சமையல் போட்டி!! - ராம்.
What an innovative idea! Thoroughly enjoyed reading the details. சமையல் அனுபவம் இல்லாதவர்கள் கரண்டி பிடித்த அனுபவம் அருமை.
வரலக்ஷ்மி வெங்கடராமன், நேபர்விலே
மடப்பள்ளி மகிமைகள்.. - 1 - ஆர்.ராஜேஷ் கன்னா
சக்கரை பொங்கல் தயாரிப்பு முறை விளக்கம் அருமை
வரலக்ஷ்மி வெங்கடராமன், நேபர்விலே
மக்கள் கருத்து.. - தில்லைக்கரசி சம்பத்
திருமதி வரலக்ஷ்மி மோகன், ஒரு புரிதலுடன் கருத்து தெரிவித்து உள்ளார். நன்றி.
மடப்பள்ளி மகிமைகள்.. - 1 - ஆர்.ராஜேஷ் கன்னா
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை எடுத்துக்க இது வரை கொடுத்து வைக்கவில்லை. பழனி பஞ்சாமிர்தம் பல முறை எடுத்து கொள்ள முருகன் அருள் இருந்தது.!
வலையங்கம்
தன் மீது தவறு இல்லை எனில், எதற்கு, புகார் கொண்டு போனவரை தடுக்க வேண்டும்.?
மடப்பள்ளி மகிமைகள்.. - 1 - ஆர்.ராஜேஷ் கன்னா
Nice article. 👌🏼👌🏼👌🏼
செளந்தர்யா பார்தா
மடப்பள்ளி மகிமைகள்.. - 3 - விஜய மகாதேவ்
Madaipalli allikkum prasatha vagaigalai.padikkail Navil jalam .oori antha koil sellum asai varugirathy..!.
ஆர். விக்ரம், ஸ்ரீனிவாசநல்லூர்
புத்துயிர் பெறும் மரச்செக்கு எண்ணெய்.... - மீனாசேகர்.
Meenasekar oil matter I sakkaiyaga pizhindu marasekku Ennaiai Sivalingam alavukku perumai thanduvittar! லலிதாசாய், மதுரை-17.
Leave a comment
Upload