கேரள மாநிலம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் பானு கலைவாணி (38). இவரது கணவர் துரைபாண்டி வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 14 வருடங்களாக பானு கலைவாணி மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து வருகிறார்.
இவர் பெங்களூரில் நடைபெற்ற திருமதி தென்னிந்தியா குயின் போட்டியில் பங்கேற்றார். இதில், தமிழ்நாடு பட்டம் வென்றிருக்கிறார். இதுகுறித்து கோவையில் பானு கலைவாணி கூறுகையில், ‘‘பெங்களூரில் கடந்த ஜனவரி 31-ம் தேதி திருமதிகளுக்கான போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்பட 5 மாநிலங்களை சேர்ந்த 21 பெண்கள் பங்கேற்றனர். எனது தாய் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால், போட்டி விதிகளின்படி நான் தமிழகத்துக்கான பிரிவில் பங்கேற்றேன். இதில் வெற்றி பெற்று, திருமதி இந்தியா குயின் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றிருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. திருமணத்துக்குப் பிறகு பல பெண்கள் வீட்டில் முடங்கி விடுகின்றனர். அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும். அப்பெண்களும் தங்களின் வாழ்க்கையை வாழ வேண்டும். கணவரை இழந்து மற்றும் தனியே வாழும் பெண்களுக்கு இலவச மேக்கப் பயிற்சி அளிக்கிறேன்…’’ என பானு கலைவாணி பெருமிதத்துடன் கூறுகிறார்.
Leave a comment
Upload