தொடர்கள்
Daily Articles
விண்வெளிக்கு கிளம்பிய ஸ்பேஸ் எக்ஸ்... - சவுந்தர்யா சுந்தர்

20201017152849629.jpg

அமெரிக்காவின் ‘கொலம்பியா’ ராக்கெட் கடந்த 2003-ம் ஆண்டு வெடித்தது. இதன் காரணத்தால், தற்போது தனியார் நிறுவனமான ‘எலான் மஸ்கின்’ ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலமாக விண்வெளிக்கு வீரர்களை அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பி வருகிறது.
அவ்வகையில், கடந்த மே மாதம் நாசாவின் 2 வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான்-9’ என்ற ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் விண்ணுக்கு மனிதர்களை பத்திரமாக அனுப்பி, திரும்ப கொண்டுவர முடியும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன சோதனை ஓட்டத்தில் நிரூபணமானது.

2020101715294952.jpg

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி (இந்திய நேரப்படி) அதிகாலை 5.57 மணியளவில் நாசாவின் 4 வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘டிராகன்’ எனும் விண்கலம் புறப்பட்டு சென்றது. அதன் பயணத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன துணை தலைவர் மைக் பென்ஸ், கரேன் பென்ஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த விண்கலத்தில் மைக்கேல் ஹாப்கின்ஸ், விக்டர் குளோவர்,

20201017153037622.jpg

ஷன்னான் வாக்கர் ஆகிய 3 அமெரிக்கர்கள் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த சோய்சி நொகுச்சி என்ற வீரரும் பயணமாகியுள்ளனர். இதில் குளோவர் மட்டும் நடுத்தர வயது, மற்ற 3 பேரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ரெசிலியன்ஸ்’ எனும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4 மணியளவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடையும். இந்த 4 பேரும், ஏற்கெனவே அங்குள்ள 2 ரஷ்யர்கள், ஒரு அமெரிக்கர் ஆகியோருடன் 6 மாதங்கள் ஆய்வு பணிகளை மேற்கொள்வர். க்ரூ டிராகன் ரெசிலியன்ஸ் விண்கலம் நாசாவால் அங்கீகரிக்கப்பட்ட முதல் விண்கலமாகும்.
ராக்கெட்டில் இருந்து விண்கலம் தனியாக பரிந்து பயணிக்க துவங்கியதும், ராக்கெட் பூஸ்டர் பூமிக்கு திரும்பி, கடலுக்குள் ஒரு கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து புதிய அமெரிக்க அதிபரான ஜோ பிடென், தனது ட்விட்டர் பதிவில் ‘அறிவியலின் ஆற்றலுக்கும் நமது புதுமை, புத்திக்கூர்மை மற்றும் உறுதியை பயன்படுத்துவதன் மூலம் எங்களால் சாதிக்க முடியும்’ என பாராட்டியுள்ளார். அதே நேரத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப்பும் ‘பெரியது’ என குறிப்பிட்டுள்ளார்.