தொடர்கள்
ஜோக்ஸ்
மு.முத்தண்ணா & ரெ.ரெங்குடுவுக்கு ஒரு நியூ நார்மல் காணிக்கை!- தில்லை & வெங்கட்

20201013223930170.jpg20201013223950634.jpg

கார்ட்டூன் கிங், ஒன் & ஒன்லி ஜீனியஸ் நம்ம ஆசிரியர் மதன் சாருக்கு இது எங்கள் அன்பு காணிக்கை...! அவரது ‘அக்மார்க்’ கேரக்டர்களான முன் ஜாக்கிரதை முத்தண்ணாவுக்கும், ரெட்டை வால் ரெங்குடுவுக்கும் நாங்கள் யோசித்த புதிய ஜோக்குகள்! அவர் லெவலுக்கு காமெடி இல்லியேன்னு ஆயிரம் பொற்காசு தர மறுக்க வேண்டாம்! கொஞ்சம் கூட்டி கழிச்சுப் பாருங்க...கணக்கு சரியா வரும்!!!! ஹிஹிஹி!!!

20201013221242396.jpg

முன் ஜாக்கிரதை முத்தண்ணா....

ரயில் ஓட்டுநர்: “சார்.. சொன்னா புரிஞ்சிக்குங்க.. மத்த கம்பார்ட்மெண்ட்ல எல்லாம் கூட்டமா இருந்தாலும், நீங்க அங்க தான் ஏறனும். இப்படி “ கூட்டத்துல போனா கொரோனா வந்துடும்.. டிரைவர் கேபின்ல நீங்க ஒருத்தர் மட்டும் தானே இருக்கீங்க..!”னு இங்க ஏற அடம் பண்ணக் கூடாது..!”


20201013214343865.jpg

மனைவி: “என்னங்க..!!? கொரோனா வந்துடப்போகுதுன்ற பயத்துல ஊருலேருந்து வந்த உங்க சித்தப்பாவை யாருனே தெரியாதுனு சொல்லி வாச கதவை சாத்திட்டீங்களே.. நியாயமா?”


20201013221703851.jpg

மேனேஜர்: “ஏன் சார்? கொரோனாக்கு ஜாக்கிரதையா இருக்கிறது நியாயம் தான்.. அதுக்காக இப்படி ஆஃபிஸுக்கு ரெயின்கோட் போட்டுக்கிட்டு வந்து, ஷவர் மாதிரி சானிடைசர் கொட்டிக்கறது நல்லாவா இருக்கு?”


20201013224631643.jpg

ஹோட்டல் சர்வர், முத்தண்ணாவிடம்: “சார் நீங்க கேட்டது வெறும் ரெண்டு இட்லி பார்சல். அதை வாங்கறதுக்கு முன்னாடி எங்க ஹோட்டல் கிச்சனை சுத்தி பாத்துட்டு, மாஸ்டரெல்லாம் மாஸ்க், கிளவுஸெல்லாம் போட்ருக்காங்களான்னு செக் பண்ணிட்டு தான் வாங்கிப்பேன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர் சார்.”


ரெட்டை வால் ரங்குடு...

20201013220900997.jpg

“அம்மா.. ‘பக்கத்து வீட்டு மாமி பாத்தாலே போதும்..பச்சை மரம் கூட பத்திக்கிட்டு எரியும்’னு சொன்னேயில்ல?! இப்ப நான் பட்டாசை எதிர்த்தாப்புல வச்சுட்டு ‘பாருங்க.. பாருங்க..!’ னு சொல்றேன்..கேக்காம உன் கிட்ட பேசனும்னு இங்க வந்துருக்காங்க பாரு..”


20201013222307609.jpg

“அப்பா.. அம்மா செஞ்ச அல்வாவ நம்ம டாமிக்கு வச்சா அது முகர்ந்து கூட பாக்காதுனு சொன்னியே.. ஆனா இந்த மாமா லபக்குனு சாப்டுட்டாரே...!”


20201013222055946.jpg

அப்பா: ரெங்குடு இங்க வா! உன்னோட ஆன்லைன் எக்ஸாம் ரிசல்ட் வந்திருக்குன்னு சொன்னியே, ரிப்போர்ட் கார்டை எடுத்துட்டு வா...

ரெங்குடு: எடுத்துட்டு வருவேன். ஆனா, நீங்க சமூக இடைவெளியை கடை பிடிக்கணும்.... என் கிட்டெல்லாம் வரவே கூடாது.....


20201013223100438.jpg

வாசலில் இருந்து ரெங்குடு அப்பாவிடம் சத்தமாக: “உங்க அம்மா பண்ற கல்லு மாதிரி இருக்கற அதிரசத்தை சாப்பிடறதுக்குன்னே அலைஞ்சிண்டு ஒரு கடோத்கஜன் வருவான்னு சொல்வியே, அது இந்த மாமாவாப்பா...?!”