திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளராக பொறுப்பேற்ற பின் நீலகிரி தொகுதிக்கு முதல் முறையாக விசிட் செய்தார் எம்.பி. ராசா.
அவரை கேஷுவலாக அவரின் அலுவலகத்தில் சந்தித்தோம் .. வழக்கம்போல டிபன் சாப்பிடுங்க.. டீ குடிங்க என்று முதலில் கேட்டுவிட்டு தான் பேசினார் ராசா.
“கழகத்தின் துணை பொது செயலாளரான பின் எப்படி இருக்கிறது..?” என்று பேச்சைத் துவக்கினோம்..“கட்சி நிர்வாகம் எனக்கு எம்.பி. சீட் கொடுத்து, என்னை மத்திய அமைச்சராக்கி பெருமைப்படுத்தி கௌரவித்தார்கள்... தற்போது எங்கள் தலைவர் ஸ்டாலின், கட்சி நிர்வாகத்திலும் என் பங்கு இருக்கவேண்டும் என்று விரும்பி, இந்த முக்கியமான பொறுப்பை எனக்கு கொடுத்திருக்கிறார்... அந்த பணியை சிறப்பான முறையில் கழகத்தை வழிநடத்த பயன் படுத்தி வருகிறேன்”
“இந்த புதிய பதவியால், உங்களின் நீலகிரி தொகுதி மேல் கவனம் குறையுமா?”
“என்ன கேட்கிறீர்கள்.... இந்த கழகத்திற்கு அடுத்தது என் பாசமிகு நீலகிரி தொகுதி தான். ஒரு பக்கம் கட்சி நிர்வாக பொறுப்பு நடந்து கொண்டே இருக்கும்... தொகுதியின் மேம்பாட்டு பணிகள் தொடரும்... இந்த கோவிட் இல்லை என்றால் எத்தனை முறை விசிட் இருந்திருக்கும்... எனக்கு வருவதை பற்றி தயக்கம் இல்லை... நீலகிரி மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு தொந்தரவை இந்த தொற்று காலத்தில் கொடுக்க கூடாது என்பது என் எண்ணம்...!”
“எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து...”
“எங்கள் தலைவர் தன் தேர்தல் பணியை மிகச் சிறப்பாக துவக்கியுள்ளார்.. முதலில் கழக நிர்வாகிகள் அனைவரையும் ஒன்றிணைத்து மாவட்டம் தோறும் “தமிழகம் மீட்போம்” என்ற தலைப்பில் காணொளி காட்சி வாயிலாக சந்தித்து, தொண்டனையும் மக்களையும் தேர்தலுக்கு தயார் செய்து வருவதை தமிழகமே உற்று பார்த்துக்கொண்டிருக்கிறது... ஆளும்கட்சியும் மற்ற கட்சியும் எங்கள் தலைவரின் உரையைக் கேட்டு ஆழமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்...
நீலகிரியில் இந்த நிகழ்வு குன்னூரில் மாவட்ட செயலர் முபாரக் மற்றும் கழக நிர்வாகிகளால் சிறப்பாக நடைபெற்றது... நீலகிரி கழக முன்னோடிகள் 136 நபரை பாராட்டி மாவட்ட கழக சார்பாக பொற்கிழிகள்... 700 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை... 186 பேருக்கு மருத்துவ உதவித் தொகை மற்றும் கேடயம் வழங்கப்பட்டன... தலைவரின் எழுச்சி உரையை தொடர்ந்து, தேர்தல் பணியை துவக்கியுள்ளோம்.... நீலகிரி மூன்று தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெரும் என்பது உறுதி... தேர்தல் பிரச்சாரத்திற்கு நான் நேரில் வந்து பணி செய்வேன்!”
“பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி குறித்து பேச்சு திரும்ப.....
“அ.தி.மு.க. - பி.ஜே.பி-யின் அடிமை என்பது தெளிவாக தெரிகிறது... பி.ஜே.பி-யின் எண்ணங்களை எடப்பாடி அரசு பிரதிபலித்து கொண்டிருக்கிறது. அவர்கள் என்ன சொல்லுகிறார்களோ அதை செய்ய இவர்கள் ரெடி... இது தான் தேர்தலிலும் நடக்கப்போகிறது.”
“ஊட்டியில் முதல்வர் எடப்பாடி, பி.ஜே.பி-யின் வேல் யாத்திரையை பற்றி கூறும் போது.... தடையை மீறி செல்பவர்கள் மேல் சட்டம் தன் கடமையை செய்யும்.. என்று சொன்னாரே. அது பற்றி...”.
முதல்வர் சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறியதற்கு அவரை பாராட்டுகிறேன்......!
“தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு பெற்றோர்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளது பற்றி..”
“எங்க தலைவர் எடுக்கும் முடிவையும், அவர் சொல்வதையும் தான் இந்த அரசு கேட்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மருத்துவ படிப்புக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்க வேண்டும் என்று கூறினார். அவரின் அழுத்தத்தால் அந்த இட ஒதுக்கீட்டை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலே நிறைவேற்றியது அரசு.. இதற்கு யார் காரணம்.. அதே போல 16 ஆம் தேதி பள்ளிகளை திறப்பது சரியில்லை என்று தலைவர் கூறியுள்ளார்... அதனால் தான், பெற்றோரிடம் கருத்து கணிப்பு நடக்கிறது... எல்லா நல்ல முடிவுகளையும் நம் தலைவர் எடுக்கிறார், அதை வழி மொழிகிறது இந்த அரசு!”
“இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். சமாதான ஃபார்முலா பற்றி சொல்லுங்க”
“இவர்களின் பனிப்போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது... சமாதானம் என்பது தேர்தல் ஸ்டண்ட் என்று கூட எடுத்து கொள்ளலாம்.... எடப்பாடியும்... பன்னீர் செல்வமும் ஒரு ப்ரோக்கன் மிர்ரர் தான். அதை எப்பொழுதும் ஒட்ட வைக்க முடியாது என்பது தான் முற்றிலும் உண்மை....!”
“எந்த அரசியல் கட்சியும் சமூக இடைவெளியை பின்பற்றுவது இல்லையே... அதில் முதல்வர் ஊட்டி விசிட்டின் போது சமூக இடைவெளி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது.... இது சரியா?”...
“ஆளும் கட்சியே கொரோனா தடுப்பின் மிக முக்கியமான சமூக இடைவெளியை பின்பற்றுவது இல்லை என்பது வருத்தமான விஷயம்... முதல்வர் ஊட்டி விசிட்டின் போது எந்த சமூக இடைவெளியை ஆளும் கட்சி பின்பற்றவில்லை... இதை முதல்வரே கண்கூடாக பார்த்துள்ளார்... முதல்வர் ஊட்டிவரை வரமால் காணொளி காட்சியில் நிகழ்ச்சியை நடத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.... எங்கள் தலைவர் ஸ்டாலின் காணொளி காட்சியில் தான் இதுவரை கட்சியின் முக்கிய நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.... அனைத்து நிகழ்வுகளிலும் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை நீங்களே பார்க்கலாம்... ” என்று முடித்தார்.
Leave a comment
Upload