தொடர்கள்
விளையாட்டு
ஐபிஎல் 18 : வாரம் 3 – பால்கி

20250311185050353.jpg

"தல" தோணிக்கு வந்த நெருக்கடி

இன்னும் ரெண்டு மாசத்தில் 44 வயஸேயாகும் தோணிக்கு தலைவலி விட்ட பாடில்லை. 2008லிருந்து சீஎஸ்கேக்கு, தொடர்ந்து (இடையில் சீஎஸ்கே இரண்டு வருடம் தடை செய்யப்பட்டிருந்த காலம் விடுத்து) ஆடி ஐந்து முறை ஐபிஎல் கப் ஜெயிச்சி கொடுத்திருக்கிறார். 2023ல் ஜெயிக்கும் போது சீஎஸ்கே அணியை சீனியர் சிடிசன் அணி என்றே அனைவரும் கிண்டலடித்தனர்.

நல்லாதான் போயிட்டிருந்தது. கூடவே சின்ன தலன்னு அழைக்கப்பட்ட சுரேஷ் ரைனா. கொரானா டையத்தில் பயந்து விலக அப்படியே போகவே போயிட்டார் ஐபிஎல்லிலிருந்தே. தோணி தொடர்ந்தார்.

20250311190013545.jpg

அடுத்து இந்திய அணிக்கு ஆடிக்கொண்டிருந்த சூப்பரான ரவீந்த்ர ஜடேஜா, ஏனோ தெரியல, முதல்ல ம் என்றவர் தன்னம்பிக்கை இழந்துவிட்டாரோ என்று தான் தோணுகிறது. பாதியில் பதுக்கிவிட்டார். வேற என்ன? தோணி தொடர்ந்தார்.

அடுத்து, ருதுராஜ் கெய்க்வாட் என்பவரைத் தயார் செய்திருக்கிறார்கள் சீஎஸ்கேவின் தலைமை. ஆனால் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை பெரிதாக. இப்ப இப்ப இப்ப வந்த கடைசி செய்தியின் பிரகாரம் கையில் பட்ட காயம் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் 18ன் ஆட்டங்களில் அவர் ஆடமுடியாதாம். வேற, வேற என்ன? தோணி தொடர்கிறார். ரெடியாகா ஓக்கேவும் சொல்லி விட்டார்.

ஐபிஎல்லின் வரலாற்றில் ஒரு uncapped ப்ளேயர் ஒரு அணியின் கேப்டனாவது. இந்தியாவிற்கு ஆடிக் களைத்து ஓய்வு பெற்றுவிட்டவர்.

ரிடையர் ஆனவர்லாம் லெஜண்ட்ஸ் லீக்கில் சச்சின், யுவராஜ் போன்றவர்களெல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இங்கு....

20250311185354922.jpg

ஏனோ அணியின் தலைமையும் சரி தோணியும் சரி, தோணிக்கு அடுத்து என்பதை சரியான நேரத்திலோ, சரியானவரை தக்க தருணத்தில் தேர்ந்தெடுக்காதததாலோ இப்போது வயஸாகியும் தோணியின் தலைதான் இன்றும் உருளுகிறது.

இதற்கு காரணங்கள் பல உண்டு.

அணித் தலைமை தோணி தான் நிரந்தரம் என்பது போல் கிட்டத்தட்ட 2021 வரை அடுத்தவரை தயார் நிலைக்கு கொண்டு வராதது.

2025031118551302.jpg

காலம் தாழ்ந்து வந்தது, கொரோனாவினால் ரைனாவும் விலகிவிட்டது.

நல்ல ப்ளேயர் தான் ரவீந்த்ர ஜடேஜா, கேப்டனுக்கு தான் லாயக்கில்லை என்று பயந்து விட்டது.

இதற்கிடையில், தோணியின் லாயத்தில் ஒண்ணுத்துக்கும் உதவாத ஒதுக்கி வைக்கப்பட்ட, வயசான, ரிடையரான, கச்சா, இன்னும் புதிய நபர்கள் நாட்டுக்கும் கூட ஆடியிராத ஆட்டக்காரர்அவர்களைகளை லட்சங்களுக்கு வாங்கி, அவர்களை ஜொலிக்கும் நட்சத்திரங்களாக ஆக்கிவிடும் மாயச் செயல் ஒன்று இன்றும் உண்டு.

இந்த முயற்சியில் நிலையான ஆட்டக்காரர்கள் என்று ஒருவரும் சொல்லும்படியாக இல்லை. இப்போது அஸ்வின் வந்திருக்கிறார். பார்ப்போம். கொஞ்சம் பர்ஸ்ஸை தொள தொளவாக்கி பேட்டிங்க் போலிங் ஆல் ரௌண்டர் இடங்களுக்கு தக்க ஆட்களை நியமித்தால் தான் சென்னை அணி தனது ப்ரீமியர் அணி என்ற மதிப்பை இழக்காது. தோணியை, ஒரு பெரிய இந்திய கிரிக்கிட்டரை, வொய் நாட் என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டது நல்லதல்ல.

இனி ஒரு அணியில் கேப்டன் உப கேப்டன் என்று நியமித்து அவர்களுக்கு தக்க மேலாண்மை (management) சம்பந்தப்பட்ட பயிற்சி அளிப்பது முக்கியம்.

கார்பொரட் கம்பனியில் ஒரு வழக்கமுண்டு. அதாவது, தொடர்ந்து அடுத்த தலைமுறை தலைவர்களை உருவக்குவது. இது ஒரு அன்றாட அலுவலாக இருக்கும். இளமையிலேயே ஒருவரது திறமையை அறிந்து, அவர்களை ஃபாஸ்ட் ட்ராக்கில் போட்டுவிடுவார்கள். இறுதியில், பெரிய தலை விலகும் முன் மூன்று வருடங்களுக்கு முன்னமேயே அவரது வாரிசுடன் நித்திய அலுவல் மூலமாகவே அவருக்கு ஒப்படைக்கும் பணி தடையின்றி நடக்கும். இதைப் போலவே இங்கும் நடை பெறின் நலம். அதற்கு சில ப்ளேயர்களாவது நிரந்தரமாக இருக்க வேண்டும்.

முட்டி வலி காரணமாக முன்பு போல் மிடில் ஆர்டரில் அவர் வருவது என்பது சாத்தியமில்லை என்று தலை கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங்க் கூறியிருக்கிறார். இதுவும் ஒரு தலைவலிதான்.

இதில் இன்னொன்றும் கவனிக்கத்தவறக்கூடாது. இந்த ஐபிஎல்லின் பெரிய தலைகள் என்பதாலேயே சென்னையைப்போன்றே மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு தங்களது சந்தையில் சொல்லும்படியான (perception) ஒரு கெத்துக்குகீழ் போய்விடக்கூடாது என்ற பயத்திலேயே பார்த்து பார்த்து ஆடி 160, கஷ்டப்பட்டாவது 180 என்ற இலக்கை அடிக்கிறார்களே ஒழிய டமால் டுமீல் என்று பயமில்லாமல் ஆடுவதில்லை. இதனால் இப்போது 200 ரன்களுக்குக்கீழ் அடிப்பது ரிஸ்க் தான் என்பதாகிவிட்டது. பெருசுகள் ஒரு ஓவருக்கு ஆறு அடித்தால் பெருசு. இளசுகள் அதே ஆறு பந்துகளில் 18 அடிக்கிறார்கள். தோணிக்கும் தெரியும், ஒவ்வொரு மேட்ச்சும் புதியது, அதனால் முதல்லேயிருந்து தான் எண்ணுவாங்க என்று. ஆனால் அவருடன் இணையும் புதியவர்கள் தத்தம் சுய ஆட்டங்களை ஏனோ ஆடாமல் பயந்தே ஆடுகிறார்கள்.

இன்று இந்த ஐபிஎல்லின் 25 ஆவது மேட்ச். சென்னைக்கும் கொல்கத்தாவுக்கும் இடையே. யார் யாருக்கு விட்டுக்கொடுக்கிறார்களோ. பார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள், நான் தவறா என்று.

பஞ்சாப், டெல்லி, லக்னௌ, குஜராத், தங்களது சுய ஆட்டங்களை காண்பிக்கின்றனர். பார்க்கவும் த்ரில்லாகவும் இருக்கிறது.

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஜெயிச்ச கேகேஆரோடு ஆடி ஜெயிச்ச மேட்ச்சில் மும்பை இண்டியன்ஸின் ஹார்திக் பாண்ட்யாவை ஆதரித்து மேட்ச்சுக்கு வந்திருந்தார் அவரது புது காதலி ஜாஸ்மின் வாலியா. அவர் ஒரு பிரிட்டிஷ் பாடகியும் டீவீ நடிகையும் கூட. பாவம், அந்த ஒரு மேட்ச் மட்டும் தான் மும்பை ஜெயிச்சிருக்கு.

மே 2014 ல் முதல் மேட்ச் அப்புறமா 3,974 நாட்களுக்குப் பிறகு (கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு) அதே சீஎஸ்கேக்கு ஆடினார் விஜய் ஷங்கர் ராஜஸ்தான் ராயல்ஸுடனான ஆட்டத்தில் பங்கு கொண்டார்.

இது ஒரு ஃப்ரான்சைஸ் (அணி) ரெகார்ட். இதற்கிடையில் டெல்லி, ஹைதராபாத், குஜராத் அணிகளுக்கு ஆடியிருக்கிறார். இதே போல தான் அஸ்வின் கூட கிட்டத்தட்ட 3, 591 நாட்களுக்குப் பிறகு

அதே சீஎஸ்கேக்கு ஆடினார். இதற்கிடையில் மற்ற அணிகணுக்கு மாறிவிட்டு தாயகம் திரும்பியிருக்கிறார் விஜய் ஷங்கர் போலே.