கடந்த வாரம் நீலகிரிக்கு விசிட் செய்த முதலவர் ஸ்டாலின் உட்சாகமாக வந்து உட்சாகமாக சென்றுள்ளார் .
முதல்வரின் நீலகிரி விசிட் மாவட்ட மக்களை சந்திப்பதும் நல திட்டங்களை அறிவித்து வழங்கவும் மேலும் புதிய அரசு கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்க வந்தார் .
முதல்வரின் வருகையை முன்னிட்டு ஊட்டி நகர் முழுவதும் பளிச் என்று சுத்தம்செய்யப்பட்டது .
கோவையில் இருந்து ஊட்டி வரை சாலை சுத்தம்செய்யப்பட்டு புதுப்பிக்க பட்டது .
முதல்வர் சென்னையில் இருந்து இண்டிகோ விமானத்தில் கோவை வந்து நேராக மேட்டுப்பாளையம் ப்ளாக் தண்டர் சென்று லன்ச் முடித்து விட்டு சிறிது ஓய்வு எடுத்து விட்டு கோத்தகிரி வழியாக ஊட்டி பயணித்தார் முதல்வர் உடன் நீலகிரி எம் பி ராசா வந்தார் .
ப்ளாக் தண்டரில் இருந்து கல்லார் பர்லியார் வழியாக ஊட்டி வருவது தான் முதல் பிளான் ஒரு யானை குடும்பம் இந்த பகுதியில் சுற்றி வருவதால் அவர்கள் முதல்வரை வழிமறைக்கலாம் என்பதால் கோத்தகிரி வழியாக அழைத்துவரப்பட்டார் .
மேலும் புதிய மாவட்ட பொறுப்பாளர் ராஜு கோத்தகிரியை சேர்ந்தவர் அவரின் பிரமாண்ட வரவேற்பும் ஒரு காரணம் என்கிறார்கள் .
நீலகிரி எல்லையான குஞ்சப்பண்ணையில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு எஸ் .பி .நிஷா மாவட்ட பொறுப்பாளர் ராஜு வரவேற்க அங்கு நின்றிருந்த பழங்குடியினரில் ஒரு சிறுமி முதல்வரே ஒரு செல்பீ என்று கேட்டவுடன் தன் வேனை விட்டு இறங்கி அவர்களுக்கு வணக்கம் கூறி "நல்லா இருக்கீங்களா" என்று கேட்டு ராசா சாக்லேட்டுகளை கொடுக்க அதை வாங்கி அங்கு இருந்த குழந்தைகள் அனைவருக்கும் கொடுத்துவிட்டு நகர்ந்தார் முதல்வர் .
மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் குஞ்சப்பண்ணை பகுதியில் ' சாயில் நெய்லிங்' திட்டத்தை நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலுவுடன் ஆய்வு செய்தார் முதல்வர் .
கோத்தகிரி டானிங் டன் ஜங்க்ஷனில் அரசு போக்குவரத்து தொழில் சங்க ஊழியர்கள் சிகப்பு டி ஷர்ட் கருப்பு பேண்ட் அணிந்து முதல்வரை வரவேற்றனர் .
எம் .ஜி .ஆரின் சிலை அருகே முதலவர் வேன் நின்றது என்பது குறிப்பிடத்தக்கது .
கோத்தகிரி செயின்ட் மேரிஸ் பள்ளி அருகே முதல்வர் வர அந்த பள்ளி மாணவிகள் ரோஜா பூ வைத்து கொண்டு நிற்க தன் வாகனத்தை நிறுத்தி இறங்கி மாணவிகளின் கரத்தில் இருந்த ரோஜா மலர்களை பெற்று கொண்டார் முதல்வர் .
கோத்தகிரி வாசிகள் அமோக வரவேற்ப்பை அளித்து முதல்வரை அன்பு மழையில் நனயவைத்தனர் .
மழையும் பெய்து கூலாக இருந்தது கோத்தகிரி .
கட்டபெட்டு வரை அமோக வரவேற்பு தான் .
முதல்வர் ஊட்டி வரும்போது இருள் கவ்விக்கொண்டது .
பேண்ட் செட் வாத்தியம் வரவேற்பு கொடுக்க தன் வாகனத்தை விட்டு இறங்காமல் கைஆட்டிவிட்டு நகர்ந்தார் முதல்வர் .
எந்த ஒரு வி வி ஐ பி ஊட்டி வந்தால் சேரிங் க்ராஸ் பகுதியில் இறங்கி நின்று வரவேற்பை ஏற்றுக்கொண்டு தான் செல்வது தான் வழக்கம் .
முதல்வர் ஸ்டாலின் எனோ நிற்காமல் சென்று விட்டார் ?!.
மாவட்ட தி மு கா இளைஞர் அணி ஹில்பங்க் பகுதியில் பிரமாண்ட வரவேற்பை அளித்தனர் . அதை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார் .
தமிழக மாளிகைக்கு செல்லாமல் நேராக பிங்கர் போஸ்டில் கால்ப் லிங்க் சாலையில் உள்ள இந்து ராம் இல்லத்திற்கு சென்றார் முதல்வர் .
ராம் வாயிலில் நின்று முதல்வரை கைகுலுக்கி வரவேற்று பங்காளக்குள் அழைத்து சென்று தேனீர் கொடுத்து உபசரித்தார் .
சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு ஜெம் பார்க் ஹோட்டலுக்கு சென்று அங்கு காத்திருந்த கட்சியின் மிக முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடி அனைவரும் ஒற்றுமையாக கட்சிக்கும் எதிர் வரும் தேர்தலில் வெற்றி பெற அனைத்து பணிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று அட்வைஸ் கொடுத்துவிட்டு தமிழக மாளிகைக்கு சென்று அங்கு காத்திருந்த ஐ டி விங் உறுப்பினர்களிடம் "இந்த காலத்தில் எல்லாமே கணினி மயம் இன்டர்நெட் இல்லாமல் எதுவுமே இல்லை அதனால் உங்களையும் மாற்றிக்கொள்ளுங்கள் சிறப்பாக செய்யுங்கள் " என்று அட்வைஸ் செய்து விட்டு ஒன்பது மணிக்கு ஓய்வு எடுக்க சி எம் அறைக்கு சென்றார் .
ஞாயிற்று கிழமை 6 ஆம் தேதி காலை அமைச்சர் மா .சுப்ரமணியத்திடம் கால்ப் கிளப் சாலையில் வாக்கிங் போக இருந்த ஐடியா கைவிடப்பட்டு 9.30 மணிக்கு முதல்வர் அரசு மருத்துவ கல்லூரியை திறந்து வைக்க புறப்பட்டார் .
அமைச்சர் .மா சு சாமிநாதன் , அரசு கொறாடா ராமச்சந்திரன் , இந்து ராம் உடன் சென்றனர் .
மருத்துவமனை வாயிலில் சிகப்பு கம்பளம் விரித்து அங்கு தொடர் கோத்தர் படுகர் பழங்குடியினரின் நடனம் நடைபெற ஆவலுடன் அமர்ந்து ரசித்தார் .
பின் புதிய மருத்துவ கல்லூரியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் .
மருத்துவமனையை சுற்றி பார்த்த முதல்வர் பிரமித்து போய்விட்டார் .
எங்குமே கழக கண்மணிகள் கூட்டம் காணப்படவில்லை .
அதே போல முதல்வரின்விசிட்டில் கோவை முதல் ஊட்டி வரை ஒரு கட்டவுட் கூட வைக்கப்படவில்லை என்பது சிறப்பான ஒன்று!.
பின்னர் நேராக நீலகிரி நாடளுமன்ற உறுப்பினர் ஆ .ராசா வீட்டிற்கு சென்று டீ குடித்து விட்டு அரசு நல திட்டங்கள் வழங்க அரசு கலை கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்ட மிக பிரமாண்டமான மண்டபத்திற்கு சென்றார் .
நல திட்டங்களை வழங்கிய பின் மாவட்டத்திற்கு ஆறு சிறப்பு திட்டங்களை அறிவித்தார் .
அதில் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எங்கு வேண்டமானாலும் ஏறலாம் இறங்கலாம் அதற்க்காக சிறப்பு பேருந்து சேவை துவக்கம் .
மேலும் பார்க்கிங் வசதி இல்லாமல் சிரமப்படுவதால் மல்டி லெவல் பார்க்கிங் வசதி கட்டி தரப்படும் என்ற திட்டம் உள்ளுர் வாசிகளை கவர்ந்தது .
மேடையில் முதல்வருடன் அமர்ந்திருந்தார் இந்து ராம் .எதோ முக்கிய பதவி ராமுக்கு வரப்போவது பளிச் என்று தெரிந்தது .
ஆ .ராசா , மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோரை பாராட்டிவிட்டு நீலகிரி எஸ் .பி .நிஷாவை மறந்துவிட்டார் .
விழா முடிந்தவுடன் மிக மகிழ்ச்சியுடன் நீலகிரியை விட்டு சென்றார் முதல்வர் .
நீலகிரி விசிட் முடித்து சென்ற இரண்டே நாளில் ஆளுநருக்கு எதிராக உச்சநீதி மன்ற தீர்ப்பால் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தரானர் முதல்வர் ஸ்டாலின் .
இந்த பரிசு ஊட்டி விசிட்டின் ராசி என்ற பேச்சு மாவட்டம் முழுவதும் எதிரொலித்து கொண்டிருக்கிறது .
Leave a comment
Upload