தொடர்கள்
விளையாட்டு
ஐபிஎல் துளிகள்- ஜாசன்

20250311202607590.jpeg

சாதிக்கிறார் சாய் சுதர்சன்

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இரண்டு புதிய ரெகார்டுகளை படைத்திருக்கிறார் சாய் சுதர்சன். ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முந்தி இருக்கிறார். முதல் 30 மேட்ச்களில் அதிக முறை 30 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனை படைத்திருக்கிறார் இவர்.

ஐயோ பாவம் சிஎஸ்கே

ஐந்து முறை சாம்பியன் என்று பெருமையாக பேசிக் கொண்டிருந்த சிஎஸ்கே இப்போது தடுமாற்றத்தில் இருக்கிறது. தொடர்ச்சியாக நான்கு முறை தோல்வி என்பதால் ரசிகர்களும் நொந்து போய்விட்டார்கள். இதுவரை நடந்த கடைசி 11 போட்டிகளில் ஒரு முறை கூட சிஎஸ்கே வெற்றி பெறவில்லை.

இந்த ஆண்டு ஆச்சரியம்

இதுவரை கோப்பையை வென்றிடாத அணிகளான டிசி, ஆர் சி பி, பி பி கே எஸ், எல் எஸ் ஜி ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்திருக்கின்றன. கோப்பை எங்களுக்கே என்று சொல்லிக் கொண்டிருந்த அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே எட்டு மற்றும் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றன.

மிரட்டலான கேட்ச்

எப்போதும் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஏதாவது ஒரு வீரர் ஆட்டம் இழப்பு போட்டியை அப்படியே திசை திருப்பி விடும். அப்படி ஒரு சம்பவம் பெங்களூர் அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே நடந்த போட்டியில் நடந்தது. இருபதாவது ஓவரில் மும்பை அணிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. இருபதாவது ஓவரில் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட தீபக்சாகர் தூக்கி அடிக்க அது நிச்சயம் பவுண்டரி தான் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது எல்லையில் இருந்த ஃபீல் சால்ட் அந்தப் பந்தை பிடித்து டீம் டேவிட்டிடம் விசிவிட்டு பவுண்டரி லைனில் விழுந்துவிட்டார். இந்த மிரட்டல் ஆனா கேட்ச் தான் பெங்களூர் அணி வெற்றிக்கு காரணம்.

ஆரவாரத்தில் சாதனை

ஐபிஎல் போட்டிகளில் எதையெல்லாம் சாதனை என்று சொல்வார்கள் என்று தெரியாது. பிரபலமான வீரர் களத்தில் இறங்கும்போது அவருக்கான கைத்தட்டல் வரவேற்பு எத்தனை டெசிபல் என்பதை கூட சாதனையாக சொல்கிறது ஐபிஎல். சேப்பாக்கத்தில் தோனி களத்தில் இறங்கும்போது வந்த உற்சாகமான கைதட்டல் 120 டெசிபல் இருந்ததாம். அதுதான் போனவாரம் வரை சாதனையாக இருந்தது. ஆனால் இந்த வாரம் அந்த சாதனையை விராட் கோலி உடைத்துவிட்டார். மும்பை மைதானத்தில் அவருக்குத் தந்த உற்சாகமான வரவேற்பும் கைதட்டலும் 138 டெசிபல் என்கிறார்கள்.

சொந்த மண்ணிலேயே ....

எல்லா அணிகளும் சொந்த கிரவுண்டில் தோற்றுவிடக்கூடாது என்று உஷாராக விளையாடுவார்கள். ரசிகர்கள் எதிர்பார்ப்பும் அது தான். ஆனால் இந்த முறை அதிலும் ஏமாற்றம் தான். சிஎஸ்கே தொடர்ச்சியாக சேப்பாக்கத்தில் தோல்வியை தழுவுகிறது. அதேபோல் ஐதராபாத் அணி ஹைதராபாத்தில் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் தோற்றுப் போனது. இதேபோல் ஆர் சி பி, கே கே ஆர், எல் எஸ் ஜி, ஆர் ஆர் அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்திருக்கிறார்கள்.

சிஎஸ்கே தோல்விக்கு காரணம் ?

சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் சொல்வது அணியில் இளம் வீரர்கள் இல்லாதது. அதிக அளவு ஸ்பின்னர் களை வைத்திருப்பது தூக்கி அடிச்சு ரன்களை குவிக்கும் வீரர்கள் இல்லாதது என்று நீண்ட பட்டியல் போடுகிறார்கள் ரசிகர்கள்.

கேஎல் ராகுல் அதிரடி

இந்த வாரம் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 93 ரன்கள் விளாசி டெல்லி அணி எளிதாக வெற்றி பெற கே எல் ராகுல் உதவினார். பெங்களூர் பந்துவீச்சை அவர் தெறிக்க விட்டார். இதற்கான காரணத்தை அவரே சொல்லிவிட்டார். இந்த மைதானத்தைப் பற்றி என்னை விட அதிகமாக தெரிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நான் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவன் என்று அந்த வெற்றி ரகசியத்தை போட்டு உடைத்தார் ராகுல்.

இதுவரை தோல்வியை சந்திக்காத ஒரே அணி

அக் ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஒரே அணி டெல்லி அணி என்ற பெருமை பெற்றுள்ளது.