“ஶ்ரீ மங்களகரமான விசுவாவசு வருஷத்திய வருட தமிழ்ப் புத்தாண்டு விசுவாவசு வருடம் 2025-2026 வருடபிறப்பு 14-04-2025 சித்திரை திங்கள் 01 திங்கள் கிழமை, இந்த ஶ்ரீ விசுவாவசு வருஷத்திய புத்தாண்டு ஶ்ரீ(குரோதி ஆண்டு பங்குனி மாதம் 30-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 02.22 ஸர (மகரம்) லக்கினத்தில் சுவாதி சூரியன் ஓரையில் விசுவாவசு புத்தாண்டு பிறக்கிறது.”
“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” என்ற பெருமைக்குரிய தமிழினம்ஆனது ஒவ்வொரு வருடமும் தமிழில் சித்திரை முதலாம் திகதியை தமிழ் வருடப்பிறப்பாகக் கோலாகலமாககொண்டாடி வருகின்றனர்.
இந்தத் தமிழ்ப்புத்தாண்டு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிறநாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக்கொண்டாடுகின்றனர். தமிழக மக்கள் மட்டுமின்றி இந்தியாவில் தமிழ் நாடு மட்டுமின்றி கேரளவில் விஷுஎன்றும், அசாமில் பிஹு என்றும், பஞ்சாப்பில் வைஷாகி என்றும், மேற்கு வங்கத்தில் பொஹெலாபொய்ஷாக் என்றும் ஒடிசாவில் மகா விஷுபா சங்கராந்தி என்றும் கொண்டாடுகிறார்கள். மற்றும், இவர்களோடு மணிப்பூர், திரிபுரா, பிஹார், உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மக்களும் புத்தாண்டை பல்வேறு பெயர்கள் இட்டுக் கொண்டாடுகின்றனர்.
ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் மற்றும் அறிவியல் ரீதியாகக் கணக்கிடப்பட்டதாகும்அதாவது பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தின் கால அளவாகும். சூரியன் மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது ஆண்டு தொடங்கும் மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் ஒரே சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.
சூரியன் மிகத் துல்லியமாகக் கிழக்கில்உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான் தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாகக் கொண்டாடினர்.
பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும். இந்த வரிசையில் 39-வது ஆண்டின் பெயர் விசுவாவசு ஆகும் ஶ்ரீ விசுவாவசு என்றால் நேர்மையான பண்பாளர், தயாள சிந்தனை, செல்வந்தர். என்று பொருள்.
“விசுவாவசு வருடம் வேளாண்மை யேறும் பசுமாடு மாடும் பலிக்குஞ் -சிசுநாசம் மற்றையரோ வாழ்வார்கண் மாதவங்கண் மீறுமே யுற்றுலகி னல்லமழை யுண்டு.” - அறுபது வருட வெண்பா” இடைக்காட்டார்.
இந்த வெண்பாவின்படி, விசுவாவசு ஆண்டில் உலகம் முழுக்க நல்ல மழைபெய்யும், விளைச்சல் அதிகரித்து உணவுப்பஞ்சம் நீங்கும். ஆடு, மாடுகள் கால்நடைகள் வளம் பெருகும். புதிய நோய் பரவலால், சிறு குழந்தைகளுக்குப் பாதிப்புகள்வரக்கூடும். மழை சீராக இருக்கும். மழை நீரை சேமிக்கத் தவறினால், அது வீணாகிக் கடலில் கலக்கும்.
விசுவாசுவ புத்தாண்டு மிகவும் சுப பலன்களையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொடுக்கப் போகிறது.
தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு:
சித்திரை மாதம் பிறப்பதற்கு முந்தைய நாள் இரவுப் பூஜைஅறையைத் தூய்மை செய்து, ஒரு மனையை வைத்து அதற்கு அழகிய கோலமிட்டு அதில் ஒரு நிலைக் கண்ணாடியை வைத்து அதன் முன்பாகத் தட்டில்பணம், காசுகள், நகைகள், அரிசி, பருப்பு மற்றும் பலவகையான பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்துக் காலையில்தூங்கி எழும்போது அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பார்கள் இது காலம்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் செல்வம், மற்றும் மகிழ்ச்சி சேரும் என்று நம்பப்படுகிறது.
சித்திரை புதுவருடமன்று புதுப் பஞ்சாங்கம் வாங்கி சந்தனம், குங்குமம் இட்டு, அதனைப் பூஜையில்வைத்துப் பூஜிக்க வேண்டும். பின்னர் புது வருடப் பஞ்சாங்கத்தை வீட்டில் உள்ள பெரிவர்கள் வாயால் பஞ்சாங்கப் பலனைக் கேட்பதும், தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது. இதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
அன்றைய தினத்தில் பசுமாட்டுக்கு அகத்திக்கீரை, கோதுமை பொருட்கள் கொடுப்பது நல்லது. ஏழை-எளியோருக்கு அன்னதானம் வழங்குதல் கூடுதல் சிறப்பு ஆகும்.
இனிப்பும் கசப்பும்:
சித்திரை பிறப்பன்று வீடுகளில் மதிய விருந்தில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி, வடை பருப்பு, பாயசம் போன்றவை கட்டாயம் இடம்பெற்றிருக்கும். இன்பமும் துன்பமும் கலந்து வருவதே வாழ்க்கை என்ற தத்துவத்தை உணர்த்தவே சமையலில் வேப்பம் பூவும், பாயசமும் சரி விகிதமாகப் பரிமாறப்படுவதாக ஐதீகம். இந்த நாளில் பிறருக்கு தானம் செய்வதாலும் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தமிழ்ப் புத்தாண்டு அன்று சில கிராமங்களில் பாரம்பரியத்தை நினைவுகூரும் பொருட்டு, கோயில்களில் சிறப்புப் பூஜை நடைபெற்று மக்கள் பொங்கல் வைத்தும் வழிபடுவார்கள்.
விகடகவி வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு (விசுவாசுவ) நல்வாழ்த்துக்கள்!!
Leave a comment
Upload