அமைச்சராக பொதுவாழ்வில் தொடர எனக்கு உரிமை உள்ளது உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி பிரமாண பத்திரம்.
அவங்க பதிலுக்கு ஜாமீன் ரத்து செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது என்று சொல்லப் போறாங்க பாருங்க !!
அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் 9 லட்சம் இந்திய மாணவர்கள் வெளியேற்றுவதற்கு திட்டம்.
இந்த ட்ரம்ப் கொஞ்சம் ஓவரா தான் போய்கிட்டு இருக்காரு !!
முதல்வருக்கு நன்றி தெரிவிக்க இரவு முழுதும் வந்த அழைப்புகள் சட்டப்பேரவையில் ஏவா வேலு தகவல்.
மொத்தத்தில் முதல்வர் தூங்க விடுறது கிடையாது !!
சிவாஜி கணேசன் இல்லத்தில் எனக்கு உரிமை இல்லை -நீதிமன்றத்தில் ராம்குமார் தகவல்.
வீட்டைக் காட்டி கடன் வாங்க தான் உரிமை போல இருக்கு !!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் பேச அனுமதி மறுப்பு அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.
இதுதான் வழக்கமா நடக்கிறது தானே !!
டாஸ்மாக்கில் எந்த முறைகேடும் நடக்கவில்லை சட்ட அமைச்சர் ரகுபதி தகவல்.
சட்டப்படி சொல்றாராம் !!
ஒரு மதத்தின் சொத்து நிர்வாகத்தில் அரசு தலையிட கூடாது ப.சிதம்பரம்.
ஆனால் கோயில் சொத்தை மட்டும் ஆட்டை போடலாம் அப்படித்தானே தலைவரே !!
தமிழகத் தலைவர்கள் தமிழில் கையெழுத்து போடுவதில்லை பிரதமர் மோடி.
நீங்க குஜராத்தி மொழியில் கையெழுத்து போடுவதில்லை போல் தெரிகிறது .
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்க எல்.முருகன் வலியுறுத்தல்.
அண்ணா நீங்க ஐம்பது ரூபாய் விலை ஏத்திட்டீங்க அதுக்கு என்ன பண்ண போறோம் ?
நீதிமன்ற தீர்ப்பு அனைத்து ஆளுநர்களுக்கும் பொருந்தும் திமுக எம்பி வில்சன் தகவல்.
ஆக இனிமே ஆளுநர்கள் எல்லாம் சும்மா தான் இருக்கணும் போல தெரியுது !!
டாஸ்மாக் வழக்கு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்.
ஆமா ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கீங்க பாவம் !!
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியிடம் அமலாக்கத்துறை விசாரணை.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ?
Leave a comment
Upload