தொடர்கள்
விகடகவியார்
மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி-விகடகவியார்

20250312061245605.jpg

விகடகவியார் மாலை 4 மணிக்கு தான் வந்தார். ஆபீஸ் பையன் அவருக்கு சூடாக ஆனியன் பக்கோடா தந்தார். "எடப்பாடி வீட்டிலும் ஆனியன் பக்கோடா தந்தார்கள் அமித்ஷாவுக்கு" என்று விஷயத்துக்கு வந்தார் விகடகவியார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார் எடப்பாடி என்றோம். அதெல்லாம் பழைய கதை எடப்பாடி நிபந்தனை இரண்டு தான். சசிகலா, ஓபிஎஸ், தினகரன் பற்றி பேசக்கூடாது, அண்ணாமலை தலைவர் பதவி கூடாது. எடப்பாடி அமித்ஷாவை சந்திப்பதற்கு முன் புதிய மாநில தலைவராக நைனார் நாகேந்திரன் தேர்வு செய்யப்படுவார் என்று அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார். அவ்வளவு தான் டீல் ஓகே என்று புறப்பட்டு விட்டார் அமித்ஷாவை சந்திக்க. அமித்ஷாவுடன் பேசும்போது எடப்பாடி கூட்டணி பற்றி நீங்களே சொல்லி விடுங்கள் என்று சொன்னார். அதனால் தான் கூட்டணி என்று அமித்ஷா அறிவித்தார்.

நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை பற்றி சில விஷயங்களை கட்சி தான் முடிவு செய்யும் நீங்கள் கட்சியை நடத்த முயற்சி செய்யாதீர்கள் என்று சிரித்தபடியே பதில் சொன்னார் நிருபர்களுக்கு அமித்ஷா. இப்போது அண்ணாமலை தான் தலைவர். அதனால் தான் அவர் என் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறார் என்றும் சொன்னார் அமித்ஷா. நிருபர்கள் சந்திப்பில் அமித்ஷா தான் பேசினார், எடப்பாடி எதுவும் சொல்லவில்லை. டெல்லிக்கு புறப்படுவதற்கு முன்பு எடப்பாடி வீட்டில் விருந்து சாப்பிட்டார் அமித்ஷா. அப்போது நீங்கள் சொல்வது எல்லாவற்றுக்கும் நான் தலையாட்டி விட்டேன் அதே மாதிரி கூட்டணி தொகுதி பங்கீடு இந்த விஷயத்தில் நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லி இருக்கிறார் அமித்ஷா.

அமித்ஷா சென்னை விஜயம் எடப்பாடி சந்திப்பு அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்ற அறிவிப்பு திமுகவை சங்கடப்படுத்தி இருக்கிறது. அதனால் தான் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியை நிருபர்களை சந்திக்கச் சொல்லி முதல்வர் ஸ்டாலின் சொன்னார். கனிமொழியும் ஏற்கனவே இருந்த கள்ள உறவு இப்போது உண்மையாகி விட்டது சிறுபான்மையினர் எடப்பாடியை நம்ப தயாராகவில்லை என்றெல்லாம் "பேட்டி தந்தார் என்றார் விகடகவியார்.

20250312074029916.jpeg

'சரி விஜய் விஷயத்துக்கு' என்றோம் "இப்போதைக்கு விஜய் தனித்துப் போட்டி தான் அவரை நம்பி யாரும் போவதாக தெரியவில்லை. விஜய் திமுக வாக்கு வங்கியை கொஞ்சம் தொந்தரவு செய்வார் என்று உளவுத்துறை மற்றும் சபரீசன் வைத்துள்ள அமைப்பு இரண்டுமே சொல்லி இருக்கிறது. இப்போது அது பற்றி சீரியஸாக முதலமைச்சர் யோசித்து வருகிறார். "என்றார் விகடகவியார்.

2025031206285583.jpg

'சரி பொன்முடி பேச்சுக்கு வாரும் ' என்றோம் மூத்த தலைவர் இலக்கியத்தில் பண்டித்தியம் பெற்றவர் படித்தவர். அவரின் ஆபாச பேச்சு உண்மையிலேயே முதலமைச்சரை டென்ஷன் பண்ணிவிட்டது. அமைச்சர் பதிவிலிருந்து நீக்க வேண்டும் என்று நினைத்தார். ஆளுநருக்கு இந்த விஷயம் அல்வா மாதிரி என்பதால் கட்சிப் பொறுப்பில் இருந்து கல்தா தந்திருக்கிறார். இந்த முறை தேர்தலில் பொன்முடிக்கு போட்டியிட வாய்ப்பு சந்தேகம்தான். பதறி அடித்துக் கொண்டு விழுப்புரத்திலிருந்து பொன்முடி முதல்வரை சந்தித்து மன்னிப்பெல்லாம் கேட்டார். ஆனாலும் முதல்வர் சமாதானம் ஆகவில்லை என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்.