தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

போட்டி

20250311090900231.jpeg

ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் அன்றே பராசக்தி ரிலீஸ் ஆகவேண்டும் என்று ஆளுங்கட்சி அழுத்தம் தருகிறதாம். உங்கள் சண்டைக்கு நான் தான் கிடைத்தேனா என்று சிவகார்த்திகேயன் புலம்புகிறார்.

திரிஷா

20250311091113875.jpeg

நடிகை திரிஷாவின் சமீபத்திய புகைப்படங்களில் அவர் மெலிந்து காணப்படுவது பேசும் பொருளாகியுள்ளது. அவர் ஒப்புக்கொண்ட படங்களுக்காக அந்த கதாபாத்திரங்களுக்காக அவர் இப்படி மெலிந்திருக்கிறார் என்று கூறப்பட்டாலும் ரசிகர்கள் திரிஷாவுக்கு என்ன ஆச்சு என்று கவலைப்படுகிறார்கள்.

மாளவிகா

20250311091308870.jpeg

மாளவிகா மோகனன் ஒரு டோலிவுட் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்திற்கு பெயர் ஹிருதயபூர்வம். இதற்காக அவர் தேக்கடி பகுதியில் சின்ன குடில் போன்ற செட்டப்பில் தங்கி உள்ளார். அப்போது லுங்கி கட்டிக்கொண்டு திரிந்த போட்டோக்களை போட்டுள்ளார். இப்போது அதுதான் வைரல் ஆகிறது.

பிரம்மானந்தம்

20250311091513184.jpeg

காமெடி நடிகரான பிரம்மானந்தம் தமிழ், தெலுங்கு மொழிகளில் இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். அவரின் தற்போதைய சொத்து மதிப்பு 500 கோடிகள் என்கிறார்கள்.

கீர்த்தி ஷெட்டி

20250311093211222.jpeg

கீர்த்திஷெட்டி கார்த்தியுடன் வா வாத்தியார் படத்தில் நடித்து விட்டார். இப்போது பிரதீப் ரங்கநாதனுடன் எல்ஐகே படத்தில் நடிக்கிறார்.

ஜோதிகா

20250311093722866.jpeg

நடிகை ஜோதிகா சமீபத்தில் கோட் சூட் எல்லாம் போட்டு படு ஸ்டைலான ஒரு புகைப்படத்தை பதிவு செய்து, அதற்கு கீழே உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் சிஇஓவாக இருங்கள் என்று சொல்லி இருக்கிறார். நெட்டிசன்கள் இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது போல் தெரிகிறது என்று கமெண்ட் செய்கிறார்கள்.

தமன்னா

20250311094052873.jpeg

ஒடேலா-2 படத்தில் ஆவேசமான பெண் சாமியார் வேடத்தில் நடித்திருக்கிறார் தமன்னா. இந்த படத்தின் சில காட்சிகள் மகா கும்பமேளா நடந்த பிரயாக் ராஜ் நகரில் படமாக்கப்பட்டுள்ளது.

சரண்யா ரவிச்சந்திரன்

20250311094314870.jpeg

நடிகை சரண்யா ரவிச்சந்திரன் நல்ல கேரக்டர்களின் அடிப்படை லட்சியம் என்கிறார். தற்சமயம் ட்ரெயின் படத்தில் நடிக்கிறார்.