பரபரப்பான ஒரு நகரத்தில் வாழும் சுகவனத்துக்கு ஒரு நாள் உடல் அசௌகரியம். தலைவலி, நெஞ்சு படபடப்பு போன்ற அறிகுறிகள் இருந்ததால் ரத்த அழுத்தத்தை (B P) செக் பண்ணனும்னு தோன்றியது.
மனைவி ஆரோக்கியதேவியை அழைத்து, டாக்டர் தமனிஸ் க்ளினிக்குக்கு போகணும்னு வாடகை கார் புக் பண்ண சொன்னார். மனைவி, 'இப்போ மணி மாலை 7. டாக்டர் ஒன்பது மணி வரை ஓ பி பார்ப்பார். நிறைய டைம் இருக்கே. தாராளமாக போகலாம் என்று ஒப்பனை செய்து ரெடி ஆனாள் ..அந்த ஊரில் ரைடர் ( R I D E R ) என்றொரு நிறுவனம் வாடகை கார் ஆட்டோக்களை இயக்கி வந்தது.
மனைவி, ரைடர் ஆப் மூலம் வாடகை காருக்கு தேடுதல் வேட்டை ஆரம்பித்தாள். முதல் பத்து நிமிடங்கள், 'வாடிக்கையாளர், உங்கள் அழைப்பு எங்களுக்கு முக்கியம். தயவு செய்து காத்திருக்கவும் "' என்று மெசேஜ் வந்த வண்ணம் இருந்தது. பன்னிரண்டு நிமிடம் கழித்து ஒரு டிரைவர் பெயர் வந்தது . கார் 23 நிமிடங்களில் வரும் என்ற விவரம் தெரிந்தது. சுகவனமும் நிறைய டைம் இருக்கே, வரட்டும் என்று, தானும் ரெடி ஆகி ஈஸிசேரில் அமர்ந்தார். இருபது நிமிடம் கழித்து, டிரைவரிடம் தொலைபேசி அழைப்பு.
""என்ன ரேட் காட்டுதும்மா ?""
""ரூபாய் இருநூறு சார்.""
""ஒரு ஐம்பது ரூபாய் மேலே போட்டு தர்றீங்களா ?""
''இருநூறே அதிகம் பா. முப்பது ரூபாய் வேணும்னா மேலே வாங்கிக்கோ ''
""'சரிம்மா "'
இருவரும், தயார் நிலையில். செல்லில் ட்ரைவர் கான்சல் பண்ணி விட்ட விவரம். வேறு டிரைவரை , ரைடர் அனுப்பும் முயற்சியில் இறங்கியது.
அடுத்ததை ட்ரைவர் அலாட்மென்ட்.வழக்கம்போல், அவரும் எவ்வளவு மேலே போட்டு தருவீங்கன்னு கேட்க , ஒரு முப்பது ரூபான்னு பதில் தரப்பட்டது.
""சவுகரியமா காரு கேக்குது. ஒரு நூறு ரூபா சேர்த்து தர மனசு வருதா பாரு.""
"" அனாவசியமா பேசாதீங்க, வரலைன்னா கேன்சல் பண்ணுங்க""
நெடு நேரமாகியும் டிரைவர் கேன்சல் பண்ணாததால, ஆரோக்கிய தேவிக்கும் பிபி எகிறி இருக்கணும். ஒருவித படபடப்புடன் கேன்சல் செய்தாள் . கான்சல் கட்டணம் ஐம்பது தரவேண்டும் என்ற மெசேஜ் .
சுகவனம் குறுக்கிட்டு, ஆட்டோ கிடைக்குதான்னு பாரும்மா என்றார். மனைவியும், ஆட்டோ செலக்ட் பண்ண, மூன்றே நிமிடத்தில் ஆட்டோ வரும் என்ற தகவல். இருவரும் குஷி ஆகினர். ஆட்டோ ட்ரைவர் போன் செய்தார். "அம்மா, இரண்டு நிமிடத்தில் வருகிறேன் "என்றதும், இருவருக்கும் உள்ளப்பூரிப்பு. "நல்லவர்களும் இருக்காங்க 'ன்னு பேசிக்கொண்டனர். திரும்பவும்
ஆட்டோ டிரைவர் போன். "ஒரே ஒரு தகவல் சொல்லணு ம்மா ; என் ஆட்டோவில்., ஒரு சக்கரம் கொஞ்சம் லூசா ஆடுது., ப்ரோப்ள ம் இல்லை மொள்ள கொண்டு சேர்த்திடுவேன் , சரிங்களா?'' 'சுகவனத்திடம் தகவல் சொன்னதும் "எங்க கொண்டு சேர்ப்பார்னு கேளு "' என்றார். ஆட்டோவும் கே ன்செல் செய்தாச்சு. நேரம் ஓடிக்கொண்டு இருந்தது. தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராத விக்கிரமன் போல், திரும்பவும் வாடகைக்கார் புக் பண்ணுவது, கேள்விகள் ,. பதில்கள். பிரயோசனம் ? ஜீரோ .
கடைசி சான்ஸ் என்று நினைத்துக்கொண்டே, திரும்பவும் புக்கிங். டிரைவர் வந்தார். எந்த எக்ஸ்ட்ரா சார்ஜ் ஜும் இல்லை . கார் போய்க்கொண்டிருக்கும், சுகவனத்துக்கு, கேட்காமல் இருக்க முடியவில்லை."ஏம்பா, எல்லாரும் எக்ஸ்ட்ரா கேட்கிறாங்க, நீ மட்டும்?" என்றார். டிரைவர் அதற்கு தந்த பதில் "என்வீடு , க்ளினிக் பக்கத்துல சார். சவாரி இல்லைன்னாலும் வீட்டுக்கு போகப்போறேன். சவாரி கிடைத்தது போனஸ் சார்" ஒன்பது மணி தாண்டிவிட்டது அவர்கள் க்ளினிக் அடையும்போது.. ரிசப்ஷன் அருகே சென்று "ரெண்டு பே ரும் டாக்டரை பார்க்கணும். BP செக் பண்ணணும்".என்றார்கள்.
"ஓ பி முடிஞ்சுது சார்."
""டாக்டர் இருக்காரு இல்லையா.? கொஞ்சம் அட் ஜஸ்ட் பண்ணி அனுப்புங்கம்மா.""
""கண்டிப்பா முடியாது சார். டாக்டர் , ரைடர் ஆப் ல வீட்டுக்கு போக கார் கிடைக்காததால் , BP எகிறி டென்ஷன்ல இருக்காரு.""
இருவரும் சேர்ந்த குரலில் "இங்கேயுமா?"
Leave a comment
Upload