தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

2025012117051518.jpeg

பெண் போலீஸிடம் செயின் பறிப்பு, இளைஞருக்கு தர்ம அடி.

முதல்ல போலீசுக்கு நம்ப பாதுகாப்பு தரணும் !! அப்புறம் மக்களைப் பற்றி யோசிப்போம் !!

நான் அதிமுகவை பற்றி பேசினால் குழப்பம் தான் ஏற்படும் அமைச்சர் முத்துசாமி.

வேண்டாம் விட்டுருங்க, ஏற்கனவே அவங்க குழம்பி தான் போயிருக்காங்க !!

அரசியலில் மூத்த தலைவர் இளைய தலைவர் என்றெல்லாம் இல்லை செங்கோட்டையன்.

மொத்தத்தில் தலைவரே இல்லை போதுமா !!

பிரசாந்த் கிஷோர் வருகையால் கவலை இல்லை, திமுக தொண்டர்களை நம்பியே உள்ளது கனிமொழி எம்பி.

2021-இல் அவர் சொன்ன ஐடியாவால் தான் ஆட்சிக்கு வந்தோம் என்பது ஞாபகம் இல்ல அக்காவுக்கு பாவம் !!

பாஜகவை எதிர்க்கும் போது எதிர்ப்போம் அரவணைக்கும் போது அரவணைப்போம் எடப்பாடி பழனிச்சாமி.

அண்ணே ரெட்டை இல பத்திரம் !!

எந்த யானையையும் அடிசறுக்க வைக்கும் தமிழ்நாடு கமலஹாசன்.

அத விடுங்க உங்களுக்கு ராஜ்யசபா எம்பி உண்டா இல்லையா அத சொல்லுங்க !!

யாரையும் நம்பி அதிமுக இல்லை எடப்பாடி.

இப்ப இந்த டயலாக் எதுக்கு ?

என்னைப் பொறுத்தவரை மகா கும்பமேளா என்பது அர்த்தமற்ற ஒன்று லல்லு பிரசாத் யாதவ்.

அர்த்தம் தெரியாமையா அம்பது கோடி பேர் போயிருக்காங்க !!

ஸ்டாலின் தனது பேரக் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் அண்ணாமலை.

ரொம்ப நோண்டுறீங்க !!

அம்மாவை மாற்றியோர் அப்பாவை பற்றி பேசலாமா ? அமைச்சர் சிவசங்கர் கேள்வி.

மொத்தத்தில் பாவம் அம்மா அப்பா !!

விஜயலட்சுமி தான் சீமானின் முதல் மனைவியா உயர்நீதிமன்றம் கேள்வி?

கேள்வி கேட்பவர் கிட்டயே கேள்வி கேக்குறாங்க !!

கிராம சாலைகள் இணைப்பதில் அலட்சியம் திருமாவளவன்.

ஓ இதுதான் அந்த ஆக்கபூர்வமா எதிர்க்கட்சி என்று சொல்வார்களா !!

கூட்டணிக் கட்சியினர் கருத்துக்கள் ஆலோசனை தான் முதல்வர் ஸ்டாலின்.

கூட்டணி கட்சி பேச்சுக்கு அவ்வளவுதான் மரியாதை அப்படின்னு சொல்றாரு தலைவர் !!

முதல்வருக்கு டப்பிங் செய்ய அதிமுகவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் தேவைப்படுகின்றனர் அண்ணாமலை.

அதிமுகவை பாராட்டுகிறாரோ !!

பிரதி பலன் எதிர்பார்த்து விஜய்க்கு பாதுகாப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம்.

அப்படித்தான் போல இருக்கு !!

தமிழக காங்கிரசுக்கு புதிய பொறுப்பாளர்.

யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் இப்போது நடப்பது காமராஜர் ஆட்சி என்று சொல்லணும் அப்படித்தானே !!