தொடர்கள்
வரலாறு
பூலோக அவதாரம் மணிகண்டன் - பால்கி

20250006142834550.jpg

அரவிந்த் சுப்ரமணியத்துடனான உரையாடலின் இறுதி பகுதி தொடர்கிறது

சாஸ்தா என்பவர் மூல அவதாரம். மகிஷியை அழிக்க அவர் எடுத்த பூலோக அவதாரம் தான் மணிகண்டன் அவதாரம்..எனில் ஐயப்பன் என்ற பெயர் எப்படி உருவானது?

சாஸ்தா மூல அவதாரம். மகிஷியை அழிக்க அவர் எடுத்த பூலோக அவதாரம் மணிகண்டன் அவதாரம். சாஸ்தாவுக்கு எட்டு அவதாரங்கள் இருக்கு. இதுல ஒரு அவதாரம் தான் நமக்கு தெரிகிறது. எட்டு அவதாரத்தில பால சாஸ்தா கால சாஸ்தா சம்மோஹன சாஸ்தா, கிராத சாஸ்தா என்று நிறைய அவதாரம் இருக்கு. அதுல ஒரு அவதாரம் மகிஷி சம்ஹாரத்திற்காக வந்த மணிகண்டனுடைய அவதாரம்.

அய்யப்பன் என்பது காரணப் பெயராக இருக்கு. அதாவது சாஸ்தாவுக்கே அய்யப்பன் என்ற பெயர் உண்டு. அய்யன் என்ற பதத்திலிருந்து வந்தது. தமிழ்நாட்டில அய்யனார் என்று சொல்கிறோமே அதுவும் சாஸ்தா தான். அதனால சபரிமலையில் இருக்கும் பகவானுக்கும் அதனால அய்யப்பன் என்ற பெயர் இருக்கு.

இன்னும் சொல்லப்போனால், திருவல்லா என்று சொல்லக்கூடிய அந்த ஊரில் ஒரு கல்வெட்டு இருக்கு. கிட்டத்தட்ட எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டு அந்த கல்வெட்டு. அந்த கல்வெட்டில் கூட அங்கு இருக்கக்கூடிய சாஸ்தாவை அய்யப்பன் என்று குறிக்கக்கூடிய மரபு பார்க்கிறோம். அங்கிருக்கிற அய்யப்பன் சன்னிதிக்கு அணையா விளக்கு இருக்கணும் என்று சொல்லி ஒரு கல்வெட்டு உண்டு. அதனால சாஸ்தாவை அய்யப்பன் என்று அழைக்கக்கூடிய மரபு கேரளத்தில் இருந்தது. இந்த அய்யன் என்றால் தலைவன் என்று அர்த்தம், அந்த தலைவன் என்று பொருள் தரக்கூடிய பகவான் என்றும் பொருள் தரக்கூடிய அந்த பதத்தில் தான் தமிழ்நாட்டில் அய்யனார் என்றும் கேரளத்தில் அய்யப்பன் என்றும், வட தேசங்களில் நாதன் என்றும், பல பெயர்களில் பகவானை அழைக்கக்கூடிய தன்மையை நாம் பார்க்கிறோம். பின்னாளில் ஆரிய கேரள வர்மனுக்கு அய்யப்பன் என்ற பெயர் விளங்கி நின்றதால இந்த அய்யப்பன் என்ற பெயர் ரொம்ப பாப்புலர் ஆயிடிச்சி.

20250005214410450.jpg

[சபரிமலை மணிமண்டபத்தில் இருக்கும் கேரள ஆரிய வர்மனின் ஜீவ சமாதி. திருவாபரணம் சாற்றுமுன், கீழே காணும் படங்களில் உள்ளது போலே மகர ஜோதி சமயத்தில் இதே புண்ணிய இடத்தை குருப்பு வம்சத்தினர் நன்கு அலங்கரிக்கின்றனர்.]

20250005215135223.jpg

20250005215206264.jpg

2025000521524502.jpg

மற்றபடி புராணங்கள்ள கணபதி வினாயகர்னு இருக்கும் பிள்ளையார் என்று இருக்காது. சுப்ரமணியன் கார்த்திக்கேயன் என்று இருக்கும். முருகன் என்று இருக்காது. பைரவர் என்று இருக்கும். வைரவன் என்று இருக்காது. அது மாதிரி சாஸ்தா மணிகண்டன் என்ற பெயர்கள் பார்க்க முடியும். அய்யப்பன் என்ற பெயர் இருக்காது. ஏனெனில், வட்டார வழக்கில் உருவாகக்கூடிய பெயர்கள்.

சபரிமலையில் பெண்கள்....சர்ச்சை பற்றி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளதே...இன்றைய நிலவரம் என்ன?

அந்த கேஸில், ஏற்கெனவே இளம் பெண்களை அனுமதிக்கலாம் என்ற கொடுத்த தீர்ப்பு நமக்கு ஏற்புடையதாக இல்லை என்று சொல்லி நாம கொடுத்த ரிவியூ பெடிஷன் ஏற்கப்பட்டிருக்கு. அதற்கப்புமான விசாரணை தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. விசாரணையெல்லாம் நடந்து மறுபடியும் அடுத்த ஒரு ரிவியூ பெடிஷனுக்குப் பிறகு புதிய பென்ச் (நீதிபதிகளின் அமர்வு) அமைக்கப்பட்டு புதிய தீர்ப்பு வரும். நமக்கு சாதகமாகவே இருக்கும் என்றே நாம் நம்புகிறோம். பகவானின் அனுக்கிரகத்தினாலே சபரிமலையின் பாரம்பர்யம் அங்கு இருக்கக்கூடிய புனிதமும் காப்பதற்கு பகவான் நமக்கு துணை நிற்பான் என்று கட்டாயம் நாம் நம்புகிறோம்.

இங்கு நாம் மேலும் சமர்ப்பிப்பது இது தான். சமஸ்க்ரித நூலான பூத நாதோபாக்யானம் எளிதில் கிடைக்கவில்லை. அவை ஒலைச்சுவடிகளில் இங்கும் அங்குமாய் தேடிக் கண்டுபிடித்து ஒரே அச்சில் கொண்டுவந்தவர் அரவிந்த் சுப்ரமண்யம். இதற்காக அவர் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக உழைத்திருக்கிறார்.1997 லிருந்து தொடங்கிய இந்த தேடல் 2022ல் ஸ்ரீபூதனாதோபாக்யானம் என்ற நூல் வெளி வருவதில் நிறவடைந்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த புத்தகத்தின் பகுதிகளைக்கொண்டே பல விஷயங்களை நிறுவி நிரூபிக்கப்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகள் சுமந்த கர்பம் என்கிறார் ஆசிரியர்.

மாளிகைப்புறத்தம்மன் புராண கால மணிகண்டன் அவதாரத்தில் வந்தவரா? அல்லது சமீபத்திய கேரள ஆரிய வர்மன் காலத்தில் வந்தவரா? அவர் யார்? மகிஷி வதத்திற்கு பின் சாபம் நீங்கிய லீலா தானே அவர். அவர் மணிகண்டனை மணந்து கொள்ளும் வரை அவர் தான் மாளிகைப்புரத்தம்மனாக அங்கு மணிகண்டன் இடம் கொடுத்தார். முதல் மலை வரும் கன்னி சாமி வராது போகும் போது அவரை மணப்பேன் என்று மணிகண்டன் சொன்னது என்பதெல்லாம் …. எனில் சரங்குத்தியால் என்ற இடத்தில் முதல் மலை ஏறி வரும் கன்னி சாமிகளிடும் சரம் எதற்காக அதன் விளக்கம் கூறுங்களேன்.

பந்தள மன்னர்கள் பூர்வீகத்தில் பாண்டிய மன்னர்கள் வம்சம் என்பதால் அவர்களது குல தெய்வமான மீனாக்ஷி அம்மன் தான் அங்கு வீற்றிருப்பது என்பது… இதில் எது சரி.

20250005215454885.jpg

[சரங்குத்தியால்]

20250005215608987.jpg

கல்யாணம் பண்ணிக்கிறேன்ங்கற கதையெல்லாம் எந்த புராணத்திலேயும் இல்ல. இதெல்லாம் இவர்களே உருவாக்கி பின்னால சேர்த்த கதையே தானே ஒழிஞ்சி மாளிகப்புறத்து பிரதிஷ்டா சங்கல்பம்ங்கறது சந்தேகமே இல்லாமல் அம்பாளுடைய சங்கல்பம் தான்.

20250005215946460.jpg

[மாளிகைப்புரத்தம்மன் சந்நிதியில் பக்தர்கள்]

சபரிமலையை பொறுத்தவரை அதிகாரிகளா இருக்கக்கூடியது பந்தள ராஜ குடும்பமும், பூஜை பண்ணக்கூடிய தந்த்ரிகளும். ரெண்டு பேருமே யூனிஃபார்மா சொல்ற ஒரே விஷயம் வந்து அது அம்பாள் பிரதிஷ்டைதான். ஏற்கெனவே 1952ல், அதுக்கும் முன்னாடியே ‘30 ‘40 களிலேயே கம்பங்குடி மீனாக்ஷி சுந்தரம் அய்யர் தன்னோட புத்தகத்திலேயும், யோகி பால தண்டாயுதபாணி ஸ்வாமி தன்னோட புத்தகத்திலேயும் இது வந்து பகவானுடைய அம்மாவின் சங்கல்பம். தான். அம்பிகைனு சொல்றது பகவானின் தாய் தான். எந்த காலத்திலேயும் மனைவியோ அல்லது கல்யாணத்திற்காக காத்திருக்கும் சக்தியோ என்று எங்கேயுமே சொல்லப்படவில்லை என்று தெளிவா ரெகார்ட் பண்ணியிருக்கா.

மணிகண்டனின் தளபதிகளில் ஒருவரான வாபுர சாமியைத்தான் வாவர் சாமி என்று சொல்கிறார்களோ?

எனில் 1975ல் வந்த சுவாமி அய்யப்பன் திரைப்படத்தில் வாவர் என்னும் முகமதியரை அரபு கொள்ளைக்காரராக சித்தரித்தது தவறுதானே.

வாபுரனைத்தான் வாவருன்னு சொல்றதுங்கறது இருக்கும்னு எனக்குத் தோணலை. இரண்டும் வேற வேற (வியக்தி)ஆட்கள் தான். வாவருன்னு ஒரு ஆள் இருந்தார்ங்கறத என்னைக்குமே மறுத்ததில்லை. இன் ஃபேக்ட் சொல்லப் போனா 2010, 11 லியே பந்தள ராஜகுமாரனாகிய ஆர்ய கேரள வர்மன் அய்யப்பன், சாஸ்தாவின் அம்சமாக விளங்கினார் என்பதைப் பற்றி நான் ரொம்ப டீடைலா எழுதி இருக்கேன், அதில் வாவர் என்கிற கடல் கொள்ளைக்காரரை அவர் ஜெயிச்சார் என்ற விஷயத்தை நான் ரெகார்ட் பண்ணியிருக்கேன். அதுல டவுட்டே இல்ல. ஆனா, அந்த பள்ளிக்கு அதாவது, அந்த மசூதிக்கு போகணுமா என்கிறதுதான் கேள்வியே ஒழிஞ்சி, வேறெந்த அபிப்ராயமும் இல்லை.

20250005215719906.jpg

பேட்டை துள்ளல்ங்கற் சடங்கு வந்து நம்முடைய அஹங்காரத்தை ஒழிக்கிற துள்ளல் தானே ஒழிஞ்சி, அதுல மசூதிக்கு போகணும் என்று எங்கயுமே சொல்லல. In fact சொல்லப் போனா அந்த மசூதிக்குப் பேரு வாவர் பள்ளியே கிடையாது. அதுக்கு பேரு நயினார் பள்ளி. வாவருடைய வம்சாவளி என்று சொல்லக்கூடிய அவர்து ஃபேமிலி மெம்பர்ஸ் யாரும் இந்த பள்ளியில் மெம்பராவோ ட்ரஸ்ட் மெம்பராவோ நார்மல் மெம்பராவோ கூட இல்ல. அவர்களுக்கும் இந்த மசூதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கருப்ப சாமி, சேப்டார முண்டன் கடுத்த சாமி, முன் சுடலை மாடன், சங்கிலி கருப்பன் போன்றோர் மணிகண்டன் காலத்திய தளபதிகளா?

கருப்பு சாமி சேப்டார முண்டன், சுடலை சாமி சங்கிலி கருப்பன், இவர்களெல்லாம் வேற வேற கால கட்டங்கள்ள வாழ்ந்த பூத கணங்கள். இவர்களெல்லாம் சாஸ்தாவின் பரிவாரங்கள். இதை மணிகண்டனோட கதையோடு லிங்க் பண்ணவேண்டிய அவசியமே இல்லை. இதுல கருப்பன் மட்டும் தான் மணிகண்டனோட சரித்திரத்தில் லிங்க் ஆராரே ஒழிஞ்சி மிச்ச எல்லாரும் சாஸ்தாவோட பூத பரிவாரங்கள்.

பிடி படாத முடிச்சு பலது இருக்கு. ஒண்ணுன்னு சொல்ல முடியாது. பல விஷயங்கள் பல சந்தேகங்கள்ளாம் மனசுக்குள்ளே இருந்துண்ண்டு தான் இருக்கு. But அதுக்கு உண்டான விடைகளை எப்பெப்ப கொடுக்கணுமோ ஸ்வாமிக்கு தெரியும் அப்பல்லாம் கொடுத்துக் கொண்டே வர்ரார்.

முக்கியமா உலகம் பூரா இருந்த சாஸ்தா வழிபாடு ஏன் எப்படி இப்போது தமிழ்நாடு கேரளான்னு மட்டுமே சுருங்கி போயிருக்குன்னு ஒரு கேள்வியாய் இருக்கு. உலகம் பூராவும் பாரதம் பூராவும் சாஸ்தா வழிபாடு இருந்தது என்பது தான் நம்முடைய தீர்மானமான முடிவு.

பக்தர்கள் மீது அவேசம் வறது சாமி எறங்கறதுல்லாம் புதிய நடைமுறை ஒன்றும் இல்லை. ரொம்ப பண்டைய காலத்திலேயிருந்து இருக்கக்கூடிய நடைமுறைதான். இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா அதை வேறுபடுத்தத் தெரியணும். வரக்கொடியது எந்த தேவதை? சாஸ்தாவா? சாஸ்தாவுடைய பரிவாரங்களா? பூதங்களா? இவர்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையை ஸ்வாமி வந்துவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்களா என்பதையும் நாம் பார்க்கணும். பெரும்பாலான கேஸ்கள் அப்படித்தான் இருக்கும். உணர்ச்சி மேலிட்டிருக்கக்கூடிய விழயங்களைத்தான் ஸ்வாமி ஆவேசம் என்று பல நேரங்களில் நினைக்கக்கூடிய தன்மையை நாம் பார்க்கிறோம். அதற்காக ஸ்வாமி வருவதையெல்லாம் பொய் என்று நாம் சொல்வதற்கில்லை. எத்தனையோ பாரம்பர்யம் மிக்க குடும்பங்கள் இதற்காக இருக்காங்க. அதே போல ஸ்வாமி உபாசகர்களின் சரீரத்தில் மேலும் சுவாமி ஆவேசிக்கறதும் இருக்கு. ஆனா பெரும்பாலான தருணங்கள்ள பகவானுடைய கண தேவதைகள தான் வர்ரது. ரொம்ப அபூர்வமாக சாஸ்தாவின் ஆவிர்பாவம் இருக்கு. இதற்கு ஆதாரம் என்னனு பார்க்கணும்னா, அதாவது சாஸ்தா சரீரத்தில ஆவேசிக்கிறது என்பதற்கு சிலப்பதிகாரத்திலியே அது பற்றி குறிப்பு இருக்கு. அந்த ஒரு எபிசோடே தனியா இருக்கு. கண்ணகிக்கு help பண்றதுக்கு வேண்டி சாஸ்தா சரீரத்தில வந்து இரங்கி பேசி அவர்களுக்கு ஆபத்து வரப்போறதை warn பண்ணி அவர்களுக்கு சொல்றது என்பது அப்போதிலிருந்தே மரபு இருக்கு என்பதை நாம புரிஞ்சிக்க முடியுது.

இது வரை கேட்கப்பட்ட வினாக்கள் அடிப்படை ஆனவையே, ஆரம்பமே.

விடை பெற்றுக்கொண்டோம்.....எங்களது மகரஜோதி 2025 யாத்திரைக்கு!