தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 34 "குணச்சித்திர பல்பு" - மோகன் ஜி

20241002174115642.jpg

இரவுத் தூங்குமுன் அடிக்கும் செல்ல அரட்டையை, மடியில் படுத்திருந்த பேத்தி அக்ஷராவுடன் அடித்துக் கொண்டிருந்தேன். இளமையில் நான் ரொம்ப ஸ்மார்ட்டா இருப்பேன் என்று யாரோ சொன்னது பற்றி அவளே ஒரு விவாதம் தொடங்கினாள்.

“அப்போ நிஜம்மா நீ அழகா இருந்தியா தாத்தா?”

“ஆமாண்டா செல்லம்! ஹீரோவாட்டம் இருப்பேன் கண்ணு”

“இப்போ ஏன் இப்படி இருக்கே?”

“இப்போ குணச்சித்திர ரோல் கண்ணு!”

“அப்படின்னா?”

“டான்ஸ் பாட்டுல்லாம் இருக்காது. நம்ப வர்ற சீன்ல விசிலடிக்க மாட்டாங்க கண்ணு”

“அப்புறம்”

“இன்னோரு குணச்சித்திரத்தை ஜோடியா போடுவாங்கம்மா”

“ரொம்ப போரா இருக்காது?”

“ஆமாம் கண்ணு! பாட்டிய வேணும்னா மாத்திடலாமா கண்ணு?”

“பாட்டி இருக்கட்டும். நீ வேணும்னா ஓடிப் போயிடு தாத்தா!”

நான் பாட்டுக்கும் செவனேன்னுத் தானே தூங்கப் போனேன்?! நீயும் புகழப் போறேன்னு நம்ம்ம்ம்ம்பி உட்கார்ந்தேனே கண்ணு! மடியில வந்து படுத்துக்கிட்டு கழுத்துல பல்பு மாட்டிட்டியே செல்லம்!