தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 104 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

2024903085434299.jpg

ஸ்ரீ மஹா பெரியவா மற்றும் அவரது பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்து வந்தோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்.

கடந்த 100 வாரங்களாக ஸ்ரீ மகா பெரியவா , ஸ்ரீ சிவன் சார், ஸ்ரீ பகவான் ரமணர் ஆகியோரின் அனுகிரஹங்களை பெற்றோம். தொடர்ந்து ஆதரவளித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள்.

102வது வாரமான இந்த வாரம் மிக அறிய பொக்கிஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

ஸ்ரீ ஆதி சங்கரர் ஜெயந்தி வழிபாடு

ஸ்ரீ ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக எடுத்துரைக்கிறார் ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீமதி தேச மங்கையற்கரசி அவர்கள். ஆன்மீக ஆன்றோர்கள் மத்தியில் ஸ்ரீ சங்கரரின் ஜெயந்தி விழா மிக விமர்சையாக கொண்டாடப்படும். ஸ்ரீ மகா பெரியவா காலத்தில் இது இன்னும் சிறப்பாக விடப்பட்டது. அது இப்போதும் தொடர்கிறது.

ஸ்ரீ ஆதிசங்கரரின் ஜெயந்தி பற்றி விவரிக்கிறார் ஸ்ரீமதி தேச மங்கையர்க்கரசி அவர்கள்.