புதிய வானம்
புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது…..
என்ன அன்பே வா எம்ஜியார் பாட்டா என்று தானே கேட்கிறீர்கள்!!!
ஆமாம், வந்திருப்பதோ சிம்லா….
அந்த பாட்டு தானே நினைவுக்கு வருவது இயற்கை தானே.
ஏன்னா ஒவ்வொரு தமிழனும் சினிமாவில் அவ்வளவு லயித்தவர்களல்லவா. கிடைக்கும் ஒவ்வொரு சிச்சுவேஷங்களில் தமிழ் சினிமா ஹீரோக்களாகவே மாறிடுவது அனிச்ச செயலாகவே ஆகிவிட்டது.
ஆமாம் எங்க விட்டேன். ஓஹ்..சரி சரி.. இன்னும் ஆரம்பிக்கவேயில்லையா.
சரி, நம்ம கதைக்கு வருவோம்.
ஏதோ ஒரு ஹோட்டலில் அமர்ந்து ஆர்டர், கொடுத்த சில நிமிடங்களில் பிளேட்டுக்களைக் கொண்டு வந்து வைத்துவிட்டுப்போனான் சர்வர்.
“சர்வர் தம்பி! இங்க வாங்க.” அழைத்தேன் ஹைதராபாத் ஹிந்தியில்.
“சொல்லுங்க சார்?” என வினவினான் பஞ்சாபியில்.
“நல்லா பிளேட்டைக் கழுவி வைக்க மாட்டீங்களா? இதுலயா நான் திங்கணும்”
“அய்ய சார்! அந்தப் பிளேட்டு டிஸைனே அப்படி… அடுத்த டேபிளையும் பாருங்க! அதே பிளேட் அதே டிஸைன். கழுவின பிளேட்டை சுடுதண்ணீல போட்டுத் துடைச்சு தான் வைப்போம் சார்”
“சரிப்பா. பசிக்குது. ஆர்டரைக் கொண்டுவா தம்பி!”
சர்வரை அனுப்பி விட்டு அந்தப் பிளேட்டைச் சுரண்டிப் பார்க்கிறேன்…
பக்கத்து டேபிள் சர்தார்ஜி என்னைப் பார்த்து சிரிக்கிறார்.
‘நானும் உங்களைப் போல தான் ஏமாந்துட்டேன் ஜி!’ என்கிறார்.
பிளேட் தயார் பண்ணிய நிறுவனத்தின் டிஸைனரைத் தேடிக் கொண்டிருக்கிறேன் ….
Leave a comment
Upload