தொடர்கள்
அரசியல்
மூன்றாவது முறையாக மோடி - காயத்ரி ஸ்ரீநிவாஸ் 

20240504184234566.jpeg

மீண்டும் ஒரு விவேகானந்தர்

மீண்டும் ஒரு மகாத்மா

மீண்டும் ஒரு அம்பேத்கர்

நம் காலத்தில் நம்மோடு இருப்பதில் நமக்கெல்லாம் எவ்வளவு பெரிய பாக்கியம். ஆம் நம் இந்திய தாய் நமக்கு தந்த தெய்வ மகன். தாய் நாட்டை தலை மகனாக காக்கும் தலைசிறந்த தவப்புதல்வனை கொடுத்திருக்கிறாள். மோடி அவர்களை அவரை பெற்ற தாய் எவ்வளவு கொண்டாடுவார்களோ அதே போல் பாரத தேசத்தின் அணைத்து மக்களும் கொண்டாடுகிறார்கள்.

அப்பேர்பட்டவரின் கையில் மூன்றாவது முறையாக பாரதம் கிடைத்துள்ளது. அரசியலில் எதுவும் நடக்கும். தேர்தல் முடிவுகள் எப்படியும் இருக்கும் என்பதற்கு 2024 லோக்சபா தேர்தல் முடிவுகளே சாட்சி. வாரணாசியில் மோடியே பின்னடைவில் இருக்கிறார் என்ற செய்தி அதிர்ச்சியை தந்தது. மூன்றாவது முறையாக வென்று மிகப்பெரிய கட்சியாக தனது கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்கிறார் மோடி அவர்கள்.

சென்ற தேர்தலை விட இந்த முறை சில சரிவுகள் இருக்கத்தான் செய்தது. குறிப்பாக உத்தரபிரதேசம், ராஜஸ்தான், வழக்கம் போல் தமிழகம் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. ஒட்டு சதவிகிதம் அதிகரித்தாலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்ட உழைப்பிற்கு அவர் ஜெயித்திருக்க வேண்டும். கோவை மக்கள் மிகப்பெரிய வாய்ப்பை தவற விட்டு விட்டனர்.

இந்த சரிவுகள், தோல்விகள் எங்களை மேலும் கடுமையாக உழைக்க தயார் படுத்தியுள்ளது. மோடி போன்ற ஒருவர் பாரத தேசத்தை தலைமை ஏற்று ஆட்சி செய்யும் காலத்தில் பாரதம் என்றுமே பத்திரமாக இருக்கும்.எதிர் கட்சியினரின் பொய் பிரச்சாரங்களும், போலி சாதி வன்ம விமர்சனங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு கை கொடுத்திருக்கலாம் ஆனால் அது நிரந்தரம் அல்ல.

நாட்டு மக்கள் மேல் மோடி வைத்திருக்கும் அன்பு மட்டுமே நிரந்தரம். வரப்போகும் ஐந்து ஆண்டுகளில் மக்கள் அதனை உணர்வார்கள்.

மீண்டும் மோடி மட்டுமல்ல மீண்டும் மீண்டும் மீண்டும் மோடி தான்.

காயத்ரி ஸ்ரீநிவாஸ்

ஆர் : காயத்ரி ஶ்ரீநிவாஸ் பா.ஜ.க. கட்சியில் பொறுப்பில் இருப்பவர்.