மாளவிகா மோகனன்
மலையாளத்தில் மோகன்லாலுடன் ஹ்ருதயபூர்வம் என்ற படத்தில் ஜோடியாக நடிக்கிறார் மாளவிகா மோகனன். இவரை படங்களில் பார்த்து ரசித்தேன். இன்று அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது .இதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்கிறார் நடிகை.
விஜய் சேதுபதி
பாண்டியராஜ் இயக்கும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன்.
ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா ஹைதராபாத்தில் செட்டில் ஆக இருக்கிறார். புதிதாக ஹைதராபாத்தில் ஒரு பங்களா வாங்கி இருக்கிறார். இதற்காக பெங்களூரில் இருந்த பங்களாவை விற்கப் போகிறாராம்.
கீர்த்தி சுரேஷ்
திருமணத்துக்குப் பிறகு தனது கணவருடன் நைட் பார்ட்டியில் கலந்து கொள்கிறார் கீர்த்தி சுரேஷ். கவர்ச்சி உடையில் வலம் வரும் கீர்த்தி சுரேஷ் அந்தப் பார்ட்டியில் குத்தாட்டமும் போடுகிறாராம்.
திரிஷா
அஜித்துடன் ஜோடி சேர்ந்து திரிஷா நடிக்கும் குட் பேட் அக்லி படத்தில் திரிஷாவின் கதாபாத்திரத்திற்கு ரம்யா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
பூனம் பாண்டே
ஒரு பொது இடத்தில் நடிகை பூனம் பாண்டேவுடன்செல்பி எடுக்கும் சாக்கில் ஒரு ரசிகர் அவருக்கு முத்தம் கொடுக்க முயன்றிருக்கிறார். சுதாரித்துக் கொண்ட நடிகை அவரை தள்ளிவிட்டு விட்டு ஓடி விட்டார்
லட்சுமி மேனன்
நடிகை லட்சுமிமேனன் டைரக்டர் அறிவழகன் இயக்கத்தில் மிருகம் புகழ் நடிகர் ஆதி நடிக்கும் சப்தம் படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.
சோபிதா துலி பாலா
சென்றாண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நடிகை சோபிதா துலி பாலா தற்சமயம் கைவசம் உள்ள படங்களை முடித்துக் கொண்டு சினிமாவுக்கு குட் பை சொல்ல விரும்புகிறாராம். அதுமட்டுமல்ல இப்போது இருக்கும் படங்களிலும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க முடியாது என்று சொல்கிறார்.
அனிகா சுரேந்திரன்
விசுவாசம் படத்தில் பேபி நட்சத்திரமாக இருந்து அனிகா சுரேந்திரன் இப்போது தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் கதாநாயகி ஆகிவிட்டார். அவருக்கு நடிகர் விஜய் உடன் நடிப்பது தான் தனது ஆசை கனவு என்கிறார்.
காவ்யா அறிவுமணி
விளம்பர படம் குறும்படம் தொலைக்காட்சி தொடர் போன்றவற்றில் நடித்த காவ்யா அறிவுமணி நிறம் மாறும் உலகில் இந்த படத்தின் மூலம் பெரிய திரைக்கு வந்திருக்கிறார். இந்தப் படத்தில் பாரதிராஜா ஆடுகளம் நரேன் வடிவுக்கரசி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
சமந்தா
நடிகை சமந்தா சமீபத்தில் கோவையில் உள்ள தியான மையத்துக்கு சென்று மூன்று நாள் மௌன விரதம் இருந்திருக்கிறார்.
தனுஷ்
தனுஷை பட தயாரிப்பாளர்கள் நடிக்க அணுகினால் நானே படத்தை இயக்குகிறேனே என்று அதற்கும் சேர்த்து பேசுகிறார். இயக்குனர்களுக்கு இது ஒரு பிடிக்காத செய்தி.
Leave a comment
Upload