தொடர்கள்
அனுபவம்
மோடியின் தியானம் - விகடகவியார்

20240505063034663.jpg

தனது பரபரப்பான பிரச்சாரத்திற்கு இடையே மே 30-ஆம் தேதி கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாட்கள் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். ஜூன் முதல் தேதி தனது தியானத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி. இந்த நிலையில் அவரது தியான அனுபவம் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.

அதில் அவர் "ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான 2024 நாடாளுமன்ற தேர்தல் நம் நாட்டில் நிறைவடைந்துள்ளது. கன்னியாகுமரியில் மூன்று நாள் ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு நான் இப்போதுதான் டெல்லி விமானம் ஏறி இருக்கிறேன். இந்த நாட்களில் காசி மற்றும் பல பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது என்னுடைய மனம் பல்வேறு அனுபவங்களாலும் உணர்ச்சிகளாலும் நிறைந்து இருக்கிறது. என்னுள் எல்லையற்ற துவண்டு விடாத ஆற்றல் ஓட்டத்தை உணர்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பாக என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினேன் தொடர்ந்து இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்தேன். பஞ்சாப் மாநிலம் ஹோஷியார் பூர் பகுதியில் என்னுடைய கடைசி தேர்தல் பிரச்சாரம் இது குருக்களின் பூமியாகும். அதன்பிறகு கன்னியாகுமரிக்கு அதாவது பாரத மாதாவின் காலடிக்கு வந்தேன். தேர்தல் உற்சாகம் என் உள்ளத்தில் எதிரொலித்தது இயற்கையான ஒன்றுதான். பேரணிகளிலும் ரோடு ஷோக்களிலும் பார்த்த பல முகங்கள் என் கண் முன்னே வந்தன.

பெண்களின் ஆசீர்வாதம் நம்பிக்கை பாசம் இவை அனைத்தும் ஒரு புதுவிதமான அனுபவத்தை எனக்கு தந்தது. என் கண்கள் ஈரம் ஆகிக் கொண்டிருந்தன. ஒரு தியான நிலைக்குள் நான் நுழைந்தேன்.

சூடான அரசியல்வாதங்கள் எதிர் தாக்குதல் போன்றவை தேர்தலின் சிறப்பியல்பாகும் .தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் அனைவரும் ஒரு வெற்றிடத்தில் மறைந்தனர்.

ஒரு விதமான பற்றின்மை உணர்வு எனக்குள் வந்ததை நான் உணர்ந்தேன் என் மனம் வெளி உலகில் இருந்து முற்றிலும் விலகி விட்டது. இவ்வளவு பொறுப்புகளுக்கு மத்தியில் தியானம் என்பது மிகவும் சவாலானது. ஆனால் கன்னியாகுமரி நிலப்பரப்பும் சுவாமி விவேகானந்தரின் உத்வேகமும் அதனை சிரமம் இன்றி செய்ய வைத்தது. வேட்பாளரான நான் எனது பிரச்சாரத்தை அன்பிற்குரிய காசி கமக்களின் கைகளில் விட்டுவிட்டு இங்கு வந்தேன்.

சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரியில் தியானத்தில் இருந்தபோது எந்த விதமான அனுபவத்தை பெற்றிருப்பார் என்று நானும் யோசித்துப் பார்த்தேன். எனது தியானத்தில் ஒரு பகுதி இதுபோன்ற என்ன ஓட்டத்திலேயே கழிந்தது. குமரியில் அதிகாலை உதித்த சூரியன் என் எண்ணங்களுக்கு புதிய உயரங்களை தந்தது. கடலின் பரந்த தன்மை என் எண்ணங்களை விரிவுபடுத்தியது. கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபம் ஆர் எஸ் எஸ் ஏக் நாத் ரானடே தலைமையில் கட்டப்பட்டது. அவருடன் அடிக்கடி கன்னியாகுமரி வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

திருக்குறள் அழகிய தமிழ் மொழியின் மணி மகுடங்களில் ஒன்றாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த தேசத்திற்காக நன்மைகள் செய்ய நம்மை உத்வேகமூட்டுகிறது. இவ்வளவு பெரிய ஆளுமைக்கு எனது மரியாதையை செலுத்துவது பெரும் பாக்கியமாக கருதுகிறேன் "என்று மோடி அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

20240505063106975.jpeg

தியானம் தந்த புத்துணர்ச்சி ஒரு புறம் இருந்தாலும்,

முதல் சில கட்டங்களில் பிரதமரே ஓட்டு எண்ணிக்கையில் பின்னடைவு என்ற செய்தி இந்த தேர்தலில் புதிது.

கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், பா.ஜ.க தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்பதை பிரதமரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.