அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் அரசுத் திறன் மேம்பாட்டு துறை தலைவராக பொறுப்பேற்றிருக்கும் எலான் மாஸ்க் அரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக தேர்தல் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தல் என்பதற்காக வெளிநாடுகளுக்கு அளித்து வந்த நிதியை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறார்.
இதில் கவனிக்க வேண்டியது இந்தியாவில் தேர்தல் செலவுக்காக அமெரிக்கா 182 கோடி செலவு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் அமெரிக்கா நம் நாட்டுத் தேர்தலில் தலையிட்டு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறது.இந்த தேர்தலில் பயனடைந்தது யார் என்பதை அமெரிக்கா சொல்லவில்லை. கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாவே இந்த விஷயத்தில் கேள்வி கேட்பது வினோதமாக இருக்கிறது. பாஜக குற்றச்சாட்டு இதுதான். காங்கிரஸ் தலைமை ஆட்சியில் எஸ் ஒய் குரோஷி தலைமை தேர்தல் கமிஷனராக இருந்தபோது அமெரிக்காவின் ஜார்ஜ் சோரசின் அறக்கட்டளையுடன் நம்முடைய தேர்தல் கமிஷன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது என்பது தான் அந்த குற்றச்சாட்டு. முன்னாள் தேர்தல் கமிஷனர் இது பெரிய விஷயம் அல்ல. இது பற்றி பெரிய அளவு தனக்கு தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.அமெரிக்க நிதி எப்படி வந்தது ? யாருக்கு வந்தது ? அது எப்படி செலவு செய்யப்பட்டது என்பதை விசாரிச்சு சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் கடந்த 10 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதாவுக்கு இருக்கிறது. பத்தாண்டுகளாக இதை எப்படி விசாரிக்காமல் விட்டது என்பதும் அமெரிக்கா சொல்லித்தான் இந்த விஷயம் ஆளும் அரசுக்கு தெரிகிறது என்பதும் நம்மை குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
Leave a comment
Upload