தொடர்கள்
அரசியல்
ஆளுங்கட்சி vs அரசு ஊழியர்கள் -விகடகவியார்

20250201063552213.jpg

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ப

லன்களை வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் ஒப்பந்த முறையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவது ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அமைச்சர்கள் ஏவா வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் பொய்யாமொழி, கயல்விழி ஆகியோர் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்தக் குழு அரசு ஊழியர்கள் பிரதிநிதியுடன் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அரசு ஊழியர்கள் பிரதிநிதிகள் ஆவேசமாக மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பதற்கு நிதி இருக்கிறது நாள்தோறும் உங்களுக்காக உழைக்கும் எங்களுக்கு பணம் இல்லை என்று சொல்கிறீர்களா என்றெல்லாம் ஆவேசமாக பேசியிருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட இந்த குழு முதல்வரிடம் பேசித் தங்கள் முடிவை தெரிவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இதனிடையே ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.அ

அரசு ஊழியர் கோரிக்கையை ஆளுங்கட்சி நிறைவேற்றாது என்ற முடிவுக்கு அரசு ஊழியர்கள் வந்துவிட்டார்கள்.

பேச்சுவார்த்தை நடத்திய குழு அரசு தரப்பு முடிவை அறிவிக்க நான்கு வாரம் அவகாசம் கேட்டது ஆனால் அதற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பு மறுத்துவிட்டது.

நீதிமன்றம் போராட்டம் நடத்துவதை அனுமதிக்காததை தொடர்ந்து அரசு ஊழியர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை பற்றி ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் தந்த பேட்டியில் "பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆட்சியில் போராட்டம் நடத்தினோம்.

அப்போ எதிர்க்கட்சித் தலைவராக இருந்து எங்கள் தோள் மீது கை போட்டு திமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றித் தருவேன் என்று முதல்வர் சொன்னார்.

நேற்று பேச்சு வார்த்தை என்ற போது எந்த கோரிக்கையையும் நிறைவேற்ற முடியாது என்று எங்கள் முதுகில் குத்தி விட்டார்.

நாங்கள் பார்த்த முதல்வர்களிலேயே கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றாத ஒருவர் இந்தியாவில் இருக்கிறார் என்றால் அது ஸ்டாலின் தான். எங்களை ஏமாற்ற நினைத்தால் 2026 சட்டசபை தேர்தலில் அவர்தான் ஏமாறப்போகிறார் "என்று அவரது பேட்டி இப்போது வைரலாகி கொண்டு இருக்கிறது.

அரசு ஊழியர்களை பொருத்தவரை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு ஊழியர்கள் சாதகமாக சில அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென்று ஆளுங்கட்சிக்கு அழுத்தம் தர தொடங்கி இருக்கிறார்கள்.

நிதித்துறை தொடர்ந்து பணம் இல்லை என்று கையை விரிக்கிறது. ஜெயலலிதா ஒரே ஒரு கையெழுத்து போட்டு அனைத்து அரசு ஊழியர்களும் நீக்குவதாக அதிரடி உத்தரவு போட்டு அது நீதிமன்றம் வரை போனது.

நீதிமன்றமும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக இல்லை. இதையெல்லாம் அதிகாரிகள் ஆளும் ஆட்சியாளரிடம் சொல்லி நாமும் இப்படி ஏதாவது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

அரசு ஊழியர்கள் போராட்டத்தை கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள் சில சமயம் மறைமுகமாகவும் சில சமயம் வெளிப்படையாகவும் ஆதரிக்கிறார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்றும் தெரியவில்லை.

உங்களை எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வைத்து விடுவோம் என்ற அரசு ஊழியர்களின் அமைப்பின் மிரட்டல் தான் இப்போதைக்கு ஆளுங்கட்சியின் பயம் ....அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இந்த நிமிஷம் வரை முழிக்கிறார்கள் என்பதும் உண்மை என்கிறது கோட்டை வட்டாரம்.