தமிழக அமைச்சரவை கூட்டம் சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அமைச்சரவையில் பட்ஜெட் பற்றி விவாதித்தது இல்லாமல் முக்கியமாக தொகுதி மறு சீரமைப்பு சம்பந்தமாக நாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள தொகுதிகளை மறுவரை செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இப்போது தமிழகத்திற்கு 39 தொகுதிகள் உள்ளன. அப்படி மறுவரை செய்தால் நமக்கு 31 தொகுதிகள் தான் கிடைக்கும்.
எட்டு தொகுதிகள் குறையும் பாராளுமன்றத்தில் நமக்கான பிரதிநிதித்துவம் குறையும். இது எம்பிக்கள் எண்ணிக்கை சார்ந்த கவலை அல்ல இதற்காக மார்ச் 5ஆம் தேதி சின்ன சின்ன லெட்டர் பேடு கட்சிகள் உள்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்ற ஆண்டு ஏற்கனவே பிப்ரவரி 14-ஆம் தேதி சட்டசபையில் மறுசீரமைப்பு தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார் முதலமைச்சர்
. மக்கள் தொகை அடிப்படையில் சட்டசபை பாராளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால் 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் இப்போது சட்டசபை பாராளுமன்றம் இரு சபைகளுக்கும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகள் எண்ணிக்கை உள்ளதோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.
பாஜக தலைவர் அண்ணாமலை அப்படியெல்லாம் தொகுதி குறைப்பு என்ற பேச்சே இல்லை என்கிறார்.
அதற்கு அவர் ஆதாரமாக பிரதமர் பாராளுமன்ற திறப்பு விழாவில் பேசியதை குறிப்பிடுகிறார். பாராளுமன்ற திறப்பு விழாவில் பேசிய பிரதமர் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 384 பேரும் அமரலாம். பாராளுமன்றத்தை கூட்டு கூட்டத்தின் போது மக்களவையில் 1224 பேர் அமரலாம் என்று பேசினார்
அதைத்தான் அண்ணாமலை குறிப்பிடுகிறார். இவ்வளவு வசதிகள் இருக்கிறது என்று பேசினார் என்பதுதான் உண்மை தொகுதி சீரமைப்பு பற்றி அப்போது பிரதமர் ஏதும் சொல்லவில்லை.
அரசியல் சாசனத்தின் 81 (3)வது பிரிவு ஒரு மாநிலத்தில் ஒதுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கும் மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதமானது முடிந்த அளவு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது.
தொகுதி வரையறை மக்கள் தொகையை பொறுத்துதான் என்பதுதான் இந்த சட்டம் சொல்கிறது.
மக்கள் தொகை பொறுத்தவரை தென் மாநிலங்கள் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கடுமையாக செயல்படுத்துவதால் தென் மாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை வட மாநிலத்துடன் ஒப்பிடும்போது குறைவாகத்தான் இருக்கிறது. இதைத்தான் சந்திரபாபு நாயுடு ஒருமுறை குறிப்பிட்டு இதனால் நமக்கு பாராளுமன்ற சட்டமன்ற பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்பு இருக்கிறது நீங்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஆந்திர மக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
நமது மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடத்தப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் மத்தியில் ஆளும் அரசு அதை நடத்தாமல் இழுத்தடிக்கிறது .
இப்போது 2026ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவோம் என்கிறார்கள்.
தொகுதி குறைப்பு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல தென் மாநிலங்களுக்கு இந்த பாதிப்பு நிச்சயம் ஏற்படும் அப்போது பாஜகவின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் என்ன செய்கிறது என்பதை நாம் கவனிக்க காத்திருக்க வேண்டும்
. ஏற்கனவே தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பிறகு இந்த சர்வ கட்சி கூட்டம் தேவையா என்ற கேள்வியும் தற்சமயம் வரத் தொடங்கி இருக்கிறது.
தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தென் மாநிலங்கள் "ஒரு இடத்தைக் கூட" இழக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதன்கிழமை தெரிவித்தார்.
அப்படியும் கூட்டம் கூட்டுவது லெட்டர் பேடு கட்சிகளுக்கு சந்தோசம் தான்.
Leave a comment
Upload