நீலகிரி நாடாளுமன்ற தேர்தலில் நான்கு லட்சத்திற்கு மேல் வாக்குகளை அள்ளி வெற்றி பெற்றுள்ளார் ஆ .ராசா .
இது மூன்றாவது முறையாக தன் எம் பி பதவியை கூலாக கைப்பற்றியுள்ளார் ராசா .
நீலகிரி இந்தியாவில் மிக முக்கிய தொகுதி என்பது குறிப்பிட தக்கது .
இந்த தொகுதியின் எம் பி ஒரு கௌரவமானவர் என்பது நாடே அறியும் என்கிறார்கள் அரசியல் தொலைநோக்கு பார்வையாளர்கள் .
மலை பிரதேசத்தில் ஊட்டி , குன்னூர் மற்றும் கூடலூர் சட்டமன்ற தொகுதிகள் .
கீழ்ப்பிரதேசத்தில் மேட்டுப்பாளையம் , அவிநாசி மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது நீலகிரி நாடாளுமன்ற தொகுதி .
காங்கிரஸ் வேட்பாளர் ஆர் .பிரபு இந்த தொகுதியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் .
அவருக்கு பின் மீண்டும் ராசா அந்த இடத்தை பிடித்துள்ளார் என்பது நிதர்சனம் .
ராசாவிற்கு தன் தொகுதி மக்களின் பல்ஸ் நன்றாக தெரியும் .
அப்படியிருந்தும் மத்திய அமைச்சர் எல் .முருகனின் வருகை சற்று யோசிக்க வைத்தது உண்மை .
எப்படி நவீன ஊட்டியை உருவாக்கின ஜான் சல்லிவன் பவானி சாகர் கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு வந்தாரோ அதே போல எல் .முருகன் கோத்தகிரி வழியாக தான் நீலகிரியை தன் வசமாக்கிக்கொள்ள உள்ளே கால் பதித்தார் .
நீலகிரி படுக இன மக்களை கவர்ந்து அவர்களின் கிராமங்களுக்கு விசிட் செய்து இந்து மதத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேச இவருக்கு படுக இன மக்கள் ஆதரவு தெரிவித்தார்கள் .
கூடலூர் , மேட்டுப்பாளையம் ஏற்கனவே பி ஜே பி அபிமானிகள் இருக்க எப்படியாவது ராசாவை வீழ்த்தும் எண்ணத்தில் இறங்கினார் எல் .முருகன் உடன் கோவை வேட்பாளர் அண்ணாமலை உடன் கைகோர்த்து களத்தில் குதித்தனர் .
அ இ அ தி மு கா வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் புதியவர் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் என்ற அறிமுகம் முன்னாள் முதல்வர் ஜெயலிதாவிற்கு பிடித்த தொகுதி கட்சியின் விசுவாசிகளின் நம்பிக்கை எடப்பாடியின் பிரச்சார விசிட் பிளஸ் பாயிண்ட் என்ற கற்பனையில் இருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம் .
ராசா கடந்த வருடங்களில் எல்லா விசேஷ மற்றும் துக்க நேரங்களில் ஓடோடி வந்து ஆறுதல் உதவி கரம் நீட்ட தவறியதில்லை இது நாள் வரை என்கின்றார்கள் தொகுதி மக்கள் .
2024 வது நாடாளுமன்ற முடிவுகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிய முத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம் ,
"நீலகிரி எம் பி என்பது இந்தியாவிலே மிக முக்கியமான பிரிஸ்டிஜியஸ் தொகுதி .
இந்த தேர்தலில் தி மு க துணை பொது செயலர் முன்னாள் மத்திய அமைச்சர் தற்போது சிட்டிங் எம் பி ஆ .ராசா
பி ஜே பி மத்திய அமைச்சர் எல் .முருகன்
மற்றும் முன்னாள் சபாநாயகர் மகன் லோகேஷ் தமிழ் செல்வனுடன் நேரடியாக போட்டியிட்டு மீண்டும் ராசா வெற்றி பெற்றுள்ளார் .
அவருக்கு வாழ்த்துக்கள் .
இந்த தொகுதியில் எல் .முருகன் அடியெடுத்து வைத்துள்ளார் இவரின் வருகை நம் மாவட்ட கிராம மக்களை ஈர்த்தது என்று தான் சொல்லவேண்டும் .
யாராக இருந்தாலும் மதத்தை பற்றியும் தாயை பற்றி பேசக்கூடாது என்பதற்கு இந்த தேர்தல் ஒரு பாடத்தை கற்று கொடுத்துள்ளது .
அ இ அ தி மு காவின் பின்னடைவு ஒரு பெரிய தலைமை இல்லாமல் போய் இரு பிரிவாக பிரிந்தது தான் .
நீலகிரியை பொறுத்தமட்டில் பி ஜே பி புதியது அல்ல ஏற்கனவே இந்த கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட மாஸ்டர் மாதன் ஒரு கண்ணிய எம் .பி . தற்போதைய பி ஜே பி வேட்பாளர் எல் .முருகன் மத்திய அமைச்சர் படுக இன கிராமத்து மக்களை தொடர்ந்து சந்தித்து அ இ அ தி மு க வை பின்னுக்கு தள்ளியுள்ளது என்று தான் சொல்லவேண்டும் .
அதே சமயம் தி மு க முன் எடுபடவில்லை .
உலகத்தில் எங்கு சென்று வந்தாலும் ஏன் இங்கிலாந்து சென்றாலும் நம் மாவட்டம் தான் உயர்ந்து நிற்கிறது .
இதை மனதில் வைத்து நம் எம் பி ஆ .ராசா எல்லா விஷயத்திலும் உயர்ந்து திகழவேண்டும் என்பது என் விருப்பம் என்கிறார் .
முன்னாள் மூத்த பத்திரிகையாளர் ஷண்முகசுந்தரம் கூறும் போது ,
" மத்திய அமைச்சர் எல் .முருகன் வருகையினால் ஒரு கேள்வி குறி எழுந்திருந்தாலும் ஆ .ராசாவின் மக்கள் தொடர்பு அவரின் வெற்றியை நிர்ணயித்துள்ளது .
தொகுதியில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்கள் விபத்துக்கள் நடந்த போது ஓடி வந்து தன் தாராள உதவி கரத்தை நீட்டியுள்ளார் . அதை தொகுதி மக்கள் மறக்கவில்லை .
அதே சமயம் ராசாவிற்கு இந்த தொகுதியில் முக்கிய சவால்கள் காத்துக்கொண்டிருக்கிறது .தேயிலை விலை ஏற்றதை போராடி மத்திய அரசிடமிருந்து பெற்று தரவேண்டும் .
எச் பி எப் தொழிற்சாலை மூடலுக்கு பின் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மிக பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது இதை தன் கரத்தில் எடுத்து இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற செய்ய வேண்டும் .
கூடலூர் பகுதியில் ஏற்பட்டுள்ள தீராத பிரச்சனை செக்க்ஷன் 17 வன சிக்கல் இதை முடிவுக்கு கொண்டுவருவரா பார்ப்போம் " என்கிறார் .
நாம் ராசாவின் ஊட்டி அலுவலகத்திற்கு ஒரு விசிட் அடித்தோம் ஒட்டு மொத்த கழக கண்மணிகள் பெரிய டி வி திரையில் தேர்தல் முடிவுகளை உன்னிப்பாக பார்த்து கொண்டிருக்க அவர்களுடன்
வேட்பாளர் ராசா அமைச்சர் இராமச்சந்திரன் , மா .செ .முபாரக் நகர மன்ற துணை தலைவர் ரவி குமார் , பாண்டியராஜ் என்று புடைசூழ் அமர்ந்திருக்க
நாம் ராசாவின் அருகில் சென்று வாழ்த்து கூறி இது கிரேட் வினிங் தானே?! என்று கேட்க
"ஆமாம் எனக்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இந்த மாபெரும் வெற்றி நம் முதல்வருக்கு தான் சேரும் தலைவரின் பிறந்தநாளுக்கு அடுத்த நாள் கிடைத்த மிக பெரிய பரிசு " என்றார் .
அ இ அ தி மு க மற்றும் பி ஜே பி அலுவலகம் முழுவதும் காலியாக இருந்தன .
வெற்றி அறிவிப்பு நெருங்க அனைவருக்கும் மட்டன் பிரியாணி ரெடியானது .
நாற்பது வெற்றி தொகுதிகளில் நீலகிரி ராசாவால் நிமிர்ந்து மேலும் உயர்ந்து நின்றதை உணரமுடிந்தது .
நீலகிரி தொகுதியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோட்டா வாக்குகள் பதிவாகியிருந்தது .
Leave a comment
Upload