தொடர்கள்
அரசியல்
மோடியின் தியானம்-விகடகவியார்

2024043117185195.jpeg

பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு முறையும் கடைசி கட்ட பிரச்சாரம் முடிந்ததும் தியானம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். தியானம் அவருக்கு புதுசு அல்ல.

2014-இல் பாராளுமன்ற தேர்தல்பிரச்சாரம் முடிந்ததும் சத்ரபதி சிவாஜியின் பிரதாப்பக்கர் கோட்டைக்கு சென்று தியானம் செய்தார்.

2019 பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் கேதார்நாத் சென்ற மோடி அங்குள்ள குகை ஒன்றில் மூன்று நாள் தியானம் செய்தார்.

இந்த முறை அவர் தேர்ந்தெடுத்த இடம் கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் மண்டபம்.

நாட்டின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் பிரதான நிலப்பரப்பில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கடல் சூழ அமைந்திருக்கும் விவேகானந்தர் பாறையில் தான் பிரதமர் தனது தியானத்தை தொடங்கி இருக்கிறார்.

20240431171821278.jpeg

விவேகானந்தர் பாறை நினைவகம் இரண்டு பகுதிகளாக இருக்கிறது. ஒன்று சுவாமி விவேகானந்தர் மண்டபம். மற்றொன்று ஸ்ரீ பாத மண்டபம்.

20240431171917942.jpeg

இந்த ஸ்ரீ பாத மண்டபத்திற்கு என்று ஒரு வரலாறு உண்டு. இந்த மண்டபத்தில் தான் பார்வதி தேவி பரமேஸ்வரனை தனது கணவராக அடைய தவம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்தப் பாறையில் குமரி தேவியின் பாதச்சுவடு இன்னமும் இருக்கின்றது.

ஆன்மீகத் தேடலால் உந்தப்பட்ட தேசிய துறவியான சுவாமி விவேகானந்தர் இந்த தேசம் முழுவதும் சுற்றித்திரிந்த பிறகு, 1892-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கன்னியாகுமரி முனையில் விவேகானந்தர் வந்து சேர்ந்தார். அங்கிருந்த கடலை பார்த்தபோது அன்றைய நாட்டு நிலவரத்தை சற்று எண்ணிப் பார்த்தார். அப்போது அவரது மனம் அங்கிருந்த கடலைப் போலவே கொந்தளித்தது.

ஞானத்திலும் கல்வி அறிவிலும் செல்வத்திலும் நாகரிகத்திலும் ஆன்மீக செழுமையிலும் சிறந்து விளங்கிய பாரதம் அறியாமையில மூடநம்பிக்கையிலும் வறுமையிலும் மூழ்கி அந்நியர் ஆட்சியில் அடிமையாக கிடைக்கிறதே என்று கவலையோடு கடற்கரையில் நின்ற விவேகானந்தரின் கண்ணில் தென்பட்டது சிறிது தூரத்தில் இருந்து அந்தப் பாறை. அந்தப் பாறைக்கு செல்ல வேண்டும் என்று அவர் மனம் விரும்பியது. அவர் கையில் காசு இல்லை என்பதால் படகோட்டி யாரும் துணைக்கு வரவில்லை. அவர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் கடலில் நீந்தி போய் சுவாமி விவேகானந்தர் டிசம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்கள் அங்கேயே தியானத்தில் ஆழ்ந்தார்.

பார்வதி தேவி அமர்ந்து தவம் செய்த அந்தப் பாறையில் சுவாமி விவேகானந்தர் அமர்ந்து தியானம் செய்ததன் விளைவு அவருக்கு ஒரு தெளிவு கிடைத்தது.

20240431172021558.jpeg

பாரத மாதாவின் தரிசனம் அவருக்கு கிடைத்தது. அங்குதான் அவருக்கு இந்து மதத்தின் பெருமையை உலகறிய செய்ய வேண்டும் என்ற ஞானம் கிடைத்தது. அதற்கான வழியும் பிறந்தது.

20240431185745664.jpg

கௌதம புத்தருக்கு எப்படி சாரநாத் ஞானத்தை வழங்கியதோ அதேபோல் விவேகானந்தருக்கு இந்தப் பாறை ஞானத்தையும் தெளிவையும் வழங்கியது.

அதன் விளைவாக 1962-ல் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டின் போது முடிவு செய்யப்பட்டு 1970-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது தான். இப்போது பிரதமர் தியானம் செய்யும் விவேகானந்தர் நினைவு மண்டபம். கிட்டத்தட்ட 45 மணி நேரத்துக்கு அதிகமாக இங்கு பிரதமர் தியானம் செய்ய இருக்கிறார்.

பிரதமர் இங்கு தியானம் செய்வதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கிறது. தேர்தல் ஆணையத்திடம் இதற்கு அனுமதி தரக்கூடாது என்று முறையிட்டார்கள்.

20240431172122501.jpegin

இதற்கு முக்கிய காரணம் விவேகானந்தர் தான். மேற்குவங்கத்தில் கடைசி கட்ட தேர்தல் ஒன்பது தொகுதிகளில் முதல் தேதி வாக்குப்பதிவு. மேற்குவங்கம் எப்போதும் விவேகானந்தரை கொண்டாடும்.

20240431172337392.jpeg

விவேகானந்தர் தியானம் செய்த பாறையில் பிரதமர் மோடி தியானம் செய்கிறார் என்பதால் பாஜகவுக்கு அந்த ஒன்பது தொகுதி மக்களும் ஓட்டுப் போட்டு விடுவார்களோ என்ற பயம்தான் காரணம். இதனால் தான் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் பிரதமர் மோடியின் தியானம் நேரடியாக ஒளிபரப்பக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

மோடியின் இந்த தியானம் ஏற்கனவே சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

2024043117244672.jpeg

பாஜகவுக்கு இந்த தியானம் வாக்கு வங்கியாக இருக்குமா இல்லையா என்பது ஜூன் 4-ம் தேதி தெரிந்து விடும். ஆனால் இப்போதே எதிர்க்கட்சிகளுக்கு அந்த பயம் வந்து விட்டது என்று மட்டும் தெரிகிறது.

மோடியைப் பொறுத்தவரை வெளியில் உள்ள கூச்சல்களும் குழப்பங்களும் இல்லாமல் அமைதியாக தியானம் செய்து கொண்டிருக்கிறார்.

அவருக்கு நிசப்தமான, அந்த இருண்ட தியான மண்டபத்தில் நம் தேசத்திற்கான அமைதியும் வெளிச்சமும் கிடைக்கட்டும்.