என்னய்யா பண்ணீட்டு இருக்கீறீர் என்று செல்போனில் பொறுப்பாசிரியர் போனில் மிரட்டல் தொனியில் கேட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் சிறப்பு இதழ் தயாரிப்பிற்காக ஜும் மீட்டிங் ஏன்யா போடல என்றவரிடம் 2024 ஐ பி எல் பைனல் சேப்பாக்கத்தில் பார்க்கிறேன்..
காவ்யா மாறன் செம தில்லுப்பா என்றதும் …
யார்யா அது?
உமக்கு சினிமா நடிகை விழா தானே பிடிக்கும் என்று மீண்டும் ஒரு அதட்டல்…
நம்ம சன் டிவி கலாநிதி மாறன் பொண்ணு பா என்றேன்…
என்னத்தையோ பார்த்து தொலையும் …உருப்படாமல் போக. ! ஐ பி எல் பாருய்யா என்று போனை துண்டித்து விட்டார். அப்பாடா.... !!!!
காவ்யா மாறன் !! அடேங்கப்பா....ஆச்சரியப்படுத்தும் தொழிலதிபர் இளம் காவ்யா.... சினிமா நடிகை என்ன வாழ்கிறது. காவ்யா கதையைப் பாருங்கள்.
சன் ரைசர்ஸ் அணி கடந்த மூன்று வருட காலமாக சரி வர விளையாடாமல் புள்ளி வரிசை பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது என்பதால் இந்த அணியில் விளையாடியவர்களை வட இந்திய கிரிக்கெட் ஏலம் எடுக்கும் ஜாம்பாவன்கள் யாரும் ஏலம் கேட்கவில்லை.
இந்திய மண்ணில் கடந்த முறை உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ்க்கு எட்டுக்கோடி என ஏலம் அறிவித்தனர். யாரும் கேட்கவில்லை..
ஏலம் கேட்கும் இடத்தில் இருந்து ஒரு பெண் துள்ளிகுதித்து ரூ.20கோடி ஏலம் கேட்டு கம்மின்ஸ்சை எடுத்தும் விட்டார். இந்த பெண்ணின் துணிச்சலான செயலை பார்த்த பிற கார்ப்ரேட் அணியின் ஜாம்பாவன்கள் எல்லாம் சிரிக்க ஆரம்பித்தனர்.இந்த வீடியோ சமுக வலைதளத்தில் வைரலானது.
ஹைதரபாத் அணிக்கு உலக கோப்பையை ஆஸ்திரேலியா பெற்று தந்த கேப்டனை ஏலத்தில் எடுத்த பெருமிதத்தோடு மீதம் உள்ள அணி வீரர்களை ஏலம் எடுத்ததும் தன் பணியினை முடித்துக்கொண்டு லாவகமாக அந்த இடத்தினை விட்டு நகர்ந்தார் இந்த இளம் பெண்மணி. அது தான் காவ்யா.
ஏலம் எடுக்க வந்தவர்கள் காவ்யாவின் வேகத்தினை கண்டு அசந்து பார்த்து கொண்டிருந்தனர்.
ஐ பி எல் போட்டியில் ஜாம்பவன் அணிகள் எல்லாம் ப்ளே-ஆஃப் சுற்றிற்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
சன் ரைசர்ஸ் அணியின் ஓனர் காவ்யா மட்டும் தன் அணி விளையாடும் போது காலரியில் அமர்ந்து தன் வீரர்கள் அடிக்கும் ரன்களுக்கும் , விக்கெட் எடுக்கும் போதும் கைதட்டி உற்சாகப்படுத்தி கொண்டே இருந்தார்.
மும்பை இந்தியன் ஓனர் கம்மின்ஸ்சை ஏலம் எடுத்த போது தன்னை பார்த்து சிரித்த வைராக்கியத்தால் தான், சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியினை இறுதி ஆட்டம் வரை கொண்டு வந்து நிறுத்தி தனது வைராக்கியத்தை கிரிக்கெட் உலகிற்கு காட்டினார் காவ்யா.
ஷாருக்கான் அணியான கொல்கத்தா நைட்ரைட்ஸ் அணியினை தனது அணி துவம்சம் செய்து கோப்பையை வெல்லும் என்று காவ்யா எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தார்.
தன் சன் ரைசர்ஸ் அணியின் வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சில் இப்படி சுருண்டு போவார்கள் என்று அவர் கனவில் கூட நினைக்கவில்லை .
ஆட்டம் தலைகீழாக மாறியது.
கோப்பை தனது எதிரணிக்கு சென்றதை பார்த்து கைத்தட்டி உற்சாக படுத்திவிட்டு அப்படியே திரும்பி தன் கண்ணில் இருந்து வழிந்த அந்த அழுகையை லாவகமாக துடைத்து கொண்டு தன்னை சமாதானப்படுத்தி கொண்டார் .
தன் சன் ரைசர்ஸ் அணிக்கு இரண்டாம் பரிசு ரூ12 கோடி கிடைத்தது என்ற திருப்தியுடன் தன் அணி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி விட்டு வெளியே வந்தார் காவ்யா.
உலகமே அந்த சொத்தை ஐ.பி.எல். ஃபைனல் மேட்சை பார்த்துக் கொண்டிருக்கையில் பல கோடி கண்கள் கண்ணீர் ததும்பும், ஆனாலும் அசராமல் கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் காவ்யாவை கவனித்துக் கொண்டிருந்தது.
ஐ.பி.எல். ஃபைனலின் மேன்(?) ஆஃப் தி மேட்ச் காவ்யா மாறன் தான்.
ஷ்ரேயாஸ் ஐயரும், வெங்கடேஷ் ஐயரும் மைதானத்தில் புகுந்து புறப்பட, ஃபைனல் போலவே இல்லாமல் மேட்சில் ஹைதராபாத் சுருண்டு வெளியேறியது.......
இதற்குள் செல்போன் மணி அடித்தது…
என்னய்யா ஸ்டேடியத்திற்குள்ளேயே தூங்குறீரா ….
அடுத்த இதழ் பத்தி யோசிக்க வேண்டாமா ?? சீக்கீரம் கிளம்பி ஆபிஸ்க்கு வாய்யா என்று பொறுப்பாசிரியர் அதட்டி போனை துண்டித்தார்.
இதோ வந்துட்டேன்… என்று சொல்லி விகடகவி அலுவலகதிற்கு புறப்பட்டு சென்றேன்.
கவர் ஸ்டோரிக்கு தலைப்பு போட்டாய்ங்க பாருங்க... அட்டைப்படத்துல..... "கப் நிறைய கண்ணீர்..."
இந்த ஆ.குழு ஆசாமிகளுக்கு அவ்வளவு போறாது காவ்யா மேடம்.
பாதி காலி கோப்பை தான் இவங்களுக்கு கண்ணில் படும். பாதி நிறைந்திருக்கிறது என்று சொல்ல மாட்டார்கள்.
அவர்களின் "கப் நிறைய கண்ணீரை" விடுங்கள். எனக்கு மட்டும் தான் மைதானம் முழுக்க பரவிய உங்கள் உற்சாகம் தெரியும்.
Next year మేము గెలుస్తాము மேமு கெலுஸ்தாமு !!!
அடுத்த வருசம் நம்ம ஜெயிப்போம் !!
இந்த இதழுக்கான பிரமோ வீடியோ...
Leave a comment
Upload