தொடர்கள்
பொது
" பொலிவிழந்த சீசனும் ஊட்டியும் " - ஸ்வேதா அப்புதாஸ் .

ஊட்டி என்றவுடன் ஒரு இனிமையான எண்ணங்கள் அழகான இயற்கை சூழல் கண் முன் வந்து போகும் நினைவுகள் .

போலாமா ஊட்டிக்கு என்றவுடன் பழைய திரை பட பாடல்கள் தான் நினைவுக்கு வந்து ரீங்காரமடிக்கும் .

'ஊட்டி வரை உறவு ' படத்தில் பூ மாலையில் ஓர் மல்லிகை ' பாடல் ஊட்டியின் மேல் ஒரு காதலை தூண்டிவிடும் .

20240430230700513.jpg

மூன்றாம் பிறை படத்தில் ஊட்டியின் இயற்கை அழகு பனி துளிகள் மூடுபனி என்று ஊட்டியின் அழகை கேமராக்குள் பதிந்து வெண் திரையில் அரங்கேற்றினார் பாலுமகேந்திரா .

இப்படி எல்லா மொழி படங்களும் ஊட்டியை சுற்றி தான் .

இன்று அதே ஊட்டியின் கற்பனையில் வருபவர்கள் ஏமாந்து செல்கிறார்கள் என்பது தான் நிஜம் .

20240430230748139.jpg

உலகம் கவர்ந்த மலர் காட்சி இன்று எதோ ஒரு பொருட்காட்சியாக மாறிப்போய்விட்டது அரசு நடத்தின ஒரு கோடை பிசினஸ் போல முடிந்தது .

ஒரு காலத்தில் மலர் காட்சியில் திரை முன்னணி இசை அமைப்பாளர்களின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறும் .

அதே நிகழ்வு கோடை விழா என்று அண்ணா கலை அரங்கத்தில் நடைபெறும் .

இசைச்சக்கரவர்தி இளையராஜா ஊட்டி வந்து அரங்கேறிய மே மாதத்தை மறக்க முடியாது .

கலைஞர் , ஜெயலலிதா , எடப்பாடி முதல்வர்களின் தலைமையில் மலர் காட்சி கோடை விழாவை சூப்பராக நடத்தினார்கள் .

ஏன் இரண்டு வருடத்திற்கு முன் முதல்வர் ஸ்டாலின் வருகை சீசன் சூப்பர் தான் .

ஏன் இந்த வருடம் சீசன் மலர் காட்சி கோடை விழா பொலிவிழந்தது போயின என்பது அனைவர் மனதிலும் எழுந்துள்ள கேள்வி ?.

20240430230827606.jpg

கோடை விழா மலர்க்கட்சி பொலிவிழந்து போனதற்கு காரணம் வேளாண்மை செயலர் அபூர்வா தான் என்கின்றனர் அதிகாரிகள் .

தன் அதிகார பலத்தால் மாவட்ட நிர்வாகம் எந்த முடிவும் எடுக்க முடியாமல் போனதாம் .கோடை விழா ஒன்றுமே இல்லாமல் போகவும் நுழைவு கட்டணத்தை உயர்த்தி சுற்றுலாக்களின் முகம் சுளிக்க வைத்தது அந்த அபூர்வ அதிகாரியால் தான் என்கின்றனர் .

ஏன் மலைகளின் அரசி தன் அழகை இழந்து விட்டாள் இதற்கு யார் காரணம் என்று சற்று ஊட்டியினுள் வலம் வந்தோம் .

ஊட்டியினுள் நுழையும் போதே ஒரு பாழடைந்த நகரினுள் செல்வது போல ஒரு உணர்வு இதற்கு காரணம் தேசிய நெடுஞ்சாலை துறை சாலை விரிவாக்கம் என்று வருட கணக்கில் பணியை முடிக்காமல் குண்டும் குழியுமான சாலை தான் வரவேற்கிறது .

ஏகப்பட்ட கட்டிடங்கள் இயற்கையை அழித்து மறைத்துள்ளது .

ஊட்டியின் லேண்ட் மார்க் " ஆதாம் நீரூற்று " அதன் அழகுக்கும் ஏகப்பட்ட தடைகள் .

அதை பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கும் நகராட்சிக்கும் கவலை இல்லை .

ஒரு உலக சுற்றுலா தலத்தினுள் நுழையும் உணர்வே இல்லாமல் போய்விட்டது .

20240430231113754.jpg

ஊட்டி நகரில் குப்பைக்கு பஞ்சமில்லை .

முன்னாள் கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா மாவட்டம் முழுவதும் சுத்தம் பேணிக்காப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் . வீடுதோறும் குப்பை சேகரிப்பு நடந்தது தற்போது அது சரிவர நடப்பதில்லை .

தெருக்களில் குப்பை குவிந்திருப்பதை பார்க்க முடிகிறது .

20240430231154112.jpg

கோடப் மந்து கால்வாய் வருடந்தோறும் தூர் வாரும் பணி ஒரு தொடர்கதை அதற்கு முடிவே இல்லை .தொடர் வருமானமும் காரணமாம் .

2024043023122393.jpg

ஊட்டி ரயில் நிலையம் அருகில் உள்ள பாலம் பலத்த மழை கொட்டினால் தண்ணீர் தேங்கி சுற்றுலா வாகனங்கள் சிக்கி தவிப்பது ஒரு தொடர் கதை .

அருகில் உள்ள கோடப் மந்து கால்வாயினுள் எட்டி பார்க்க ஊட்டியில் சேரும் அனைத்து பிளாஸ்டிக் பொருள்கள் இங்கு தான் சங்கமம் அப்பொழுது எப்படி தண்ணீர் வடியும் .நகராட்சி அதிகாரிகள் இங்கு வந்த எட்டி பார்ப்பார்களா .

ஊட்டி ரயில் நிலையம் நிலைகுலைந்து காணப்படுகிறது .

20240430231809957.jpg

பஸ் நிலையம் எந்த வசதியும் இல்லாமல் இருப்பது போக்குவரத்து துறைக்கு தெரியாதாம் .

20240430231441792.jpg

படகு இல்லம் மற்றும் அந்த சாலையில் பல மாதங்களாக ஏதேதோ பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது . ஏரியில் தொங்கும் பாலம் கட்டப்பட்டு தொங்கிகொண்டிருக்கிறது.

ஊட்டி ஏரி மீண்டும் ஆகாய தாமரை படர ஆரம்பித்துள்ளது .

மாவட்ட திட்ட குழு உறுப்பினர் மற்றும் கவுன்சிலர் முஸ்தபா நம்மிடம் பேசினார் ,

" நீலகிரி சுற்றுலா மற்றும் தேயிலையை நம்பி தான் நகர்ந்து கொண்டிருக்கிறது .

இந்த வருட மலர் காட்சி பொலிவிழந்து காட்சியளித்தது .தேர்தல் நடத்தை விதி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை .

கொரோனா பாதிப்புக்கு பின் சீசன் பறிபோனது இப்பொழுது இ பாஸால் சுற்றுலாக்களின் வருகை குறைந்து வியாபாரிகளின் தொழில் பாதிக்க பட்டது .

மாவட்ட ஆட்சியர் மழை வருகிறது என்று ஆரஞ்சு அலர்ட் என்று அறிவிக்காமல் ரெட் அலர்ட் என்று அறிவித்தது மற்ற ஒரு பாதிப்பு .

கோடை மலர் காட்சி நிகழ்வுகளுக்கு டாய்லெட் முதல் குப்பை க்ளியர் செய்வது நகராட்சி அதே சமயம் சீசன் வருமானம் முழுவதையும் தோட்ட கலை துறை அள்ளி கொள்வது எந்தவிதத்தில் நியாயம் .

ஒரு சர்வதேச சுற்றுல்லா தலம் பொலிவடைந்து காட்சியளிக்கிறது .

அரசு திட்டங்கள் எதுவுமே சரியாக திட்டமிடுவதில்லை .

ஒரே விஷயம் கட்டிடங்கள் மட்டும் காடாக வளர்வது தான் மர்மம் " என்கிறார் .

நகர மன்ற உறுப்பினர் அக்கீம் கூறும் போது ,

" ஊட்டி ஒரு சர்வதேச சுற்றுலா தலம் என்பதை இங்கு உள்ள அதிகாரிகளுக்கு தெரியுமோ என்னமோ .

எந்த முன்னேற்றமும் இல்லாமல் தான் இருக்கிறது ஊட்டி .

முதலில் இங்கு பார்க்கிங் வசதி இல்லை .கடந்த ஆட்சியில் ரேஸ் கோர்சில் நான்கு ஏக்கர் பார்க்கிங் இடம் ஒதுக்கியும் அதை சரி செய்யவில்லை .

இந்த மாவட்டம் ஊட்டி நம்பி இருப்பது சுற்றுலா பயணிகளை தான் .இங்கு உள்ள அனைத்து வியாபாரிகளும் இதை நம்பி தான் .

இப்படியிருக்க இ பாஸ் போட்டு கூட்டத்தை தடுத்தால் வியாபாரிகள் ஊரை காலி செய்வது தான் நடக்க போகிறது .

நம்ம டாய்லெட் என்று எங்க ஆட்சியில் கொண்டுவந்த அனைத்து டாய்லெட்டுகளும் இன்று மிக மோசம் .

சுற்றுலாக்கள் மிகவும் சிரமம் படுவதை பார்க்க முடிகிறது .

சாலை பராமரிப்புக்கு 90 கோடி அனுமதித்து நகராட்சி இன்னும் சரியாக சாலை போட்ட மாதிரி தெரியவில்லை .

பிளாஸ்டிக் பாட்டில் சர்வசாதாரணமாக உலா வருகிறது எப்படி செக் போஸ்டை தாண்டி வருகிறதோ தெரியவில்லை .

ஊட்டியில் தங்கும் விடுதி உணவு எல்லாம் காஸ்டலி எந்த வசதியும் இல்லை இதனால் மைண்ட் ரிலாக்ஸ் செய்ய ஊட்டி வந்தால் ஏகப்பட்ட டென்ஷன் தான் மிச்சம் அதனால் மீண்டும் வருவதை பலர் தவிர்க்கிறார்கள் ." என்கிறார் .

நாம் ஊட்டி ஏ 2 பி ஹோட்டலில் மதிய உணவு உண்ண சென்றோம் . ஆர்டர் வாங்க அலட்சியம் பின் நீண்ட நேரத்திற்கு பின் உணவை கொண்டு வர கிழிந்த இலை சாப்பாடு சாம்பார் பொரியல் அறைகுறை கேட்டதற்கு சுப்ரவைசரின் பதில் " " "இது டூரிஸ்ட் ஊர் சீசன் சமயம் அட்ஜஸ்ட் பண்ணி தான் சாப்பிடணும் இல்லை என்றால் போகலாம்" கேட்டவுடன் நமக்கு

ஏகப்பட்ட அதிர்ச்சி .

மூத்த பத்திரிகையாளர் தாஸ் கூறும்போது ,

20240430231858464.jpg

" ஊட்டி ஏன் நீலகிரி பொலிவிழந்து காணப்படுவது உண்மை .ஊட்டி சர்வதேச சுற்றுலா தலம் இங்கு உள்ள சீதோஷண நிலை , இயற்கை அழகு எங்குமில்லை .

பொட்டானிக்கல் கார்டன் ,ஊட்டி லேக் , தொட்டபெட்டா , கோத்தகிரி கொடநாடு காட்சி முனை , பைக்காரா அணை , முதுமலை என்று ஏராளம் .

ஒரு காலத்தில் சுற்றுலா பயணிகள் குறைவாக வந்து நிறைந்த மனதுடன் செல்வார்கள் .இப்பொழுது ஏக பட்ட கூட்டம் அதிக வாகன நெரிசல் பார்க்கிங் தளங்கள் இல்லாமல் தவிப்பு .

தொட்டபெட்டா சென்று வருவது என்பது ஏகப்பட்ட சிரமம் .காட்டு சோலைகள் தான் உள்ளன தாராளமாக சாலை விரிவு செய்யலாம் .

சரியான திட்டமிடல் இல்லை .இந்த மலர் காட்சி மிக மோசம் .

ஊட்டியில் சரியான டாய்லெட் வசதி இல்லை பெண்களின் நிலைமை மிக மோசம் .பெண் அதிகாரிகள் இருந்தும் நோ யூஸ் .

ஊட்டி நகர் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது . எல்லோரையும் மிரட்டி அலைய விடுகிறார்கள் .

கேரளா சுற்றுலாக்கள் கூடலூரில் காவல் துறையால் பாதிக்க பட்டு " ஊட்டிக்கு போகாதீங்க " என்ற குரல் கேரளா முழுவதும் கேட்கிறது . இந்த அவலம் தொடர்ந்தால் மலைகளின் அரசி கண்ணீர் சிந்த வேண்டியது தான் .

காவல் துறை நம் நண்பர்கள் என்று கூறுவது உண்மையா என்ற கேள்வி ஊட்டியை பொறுத்தமட்டில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .

நீலகிரி மாவட்டமே ஒரு சர்வதேச சுற்றுலா ஸ்தலம் ஆனால் அதற்கான எந்த வசதிகளும் முகாந்திரமும் இல்லை என்பது தான் உண்மை .

20240431173833400.jpeg

ஊட்டி வாசியான எட்வீனா நான்ஸி தம்பதி கனடாவில் செட்டில் ஜஸ்ட் ஊட்டி விசிட் அடிக்க .. " ஊட்டியின் அழகு மிகவும் கெட்டுப்போய்விட்டது .காற்று மாசடைந்துள்ளது அதிக வாகனங்கள் , மக்கள் கூட்டம் சுத்தமின்மை மற்றும் அதிக கட்டிடங்கள் தான் காரணம் .இந்த நிலைமையில் எங்க ஊட்டியை பார்ப்பது வருத்தமளிக்கிறது என்கிறார்கள் .

நவீன ஊட்டியை ஜான் சல்லிவன் உருவாக்கி 200 வருடங்கள் கடந்துள்ளன .அதை மீண்டும் புதுப்பிக்கவும் நவீன படுத்த மீண்டும் இன்னசன்ட் திவ்வியா ஐ ஏ எஸ் தான் வரவேண்டும் .